Sunday, June 15, 2008

தசாவதாரம்

தசாவதாரம்

மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய திரு கமல் ஹாசன் அவர்களுக்கு, ஒரு பட்டிக்க்காட்டன் எழுதும் கடிதம், உங்கள் தசா அவ தாரத்தை பற்றி ...


அழகான சிறு கதையாய் அந்த ஆரம்பம்..சைவ வைணவ சண்டை.. (ஹிந்து எதிர்ப்பு).அதை தொடர்ந்து வரும் காட்சிகள். அலை இல்லா கடலில் உங்களோடு இறந்து போகும் அரங்க நாதனின் சிரிப்பில் தான் எத்தனை இயல்பு….


எனக்கென்னவோ இதுதான் நீங்கள் தசாவதாரத்திற்கு செய்த கதையாகவும் எதோ சில பல காரணங்களுக்காக எடுக்க முடியாமல் போனதாகவும் தெரிகிறது ( சுந்தரி கண்ணால் ஒரு செய்தி...தளபதி பாடல் போன்று..)


முன்னந்தலைக்கும் முழம் காலுக்கும் முடிச்சி போட்ட மாதிரி அடுத்தடுத்த காட்சிகள் ....நேரு விளையாட்டு மைதானம்..முதல்வர், பிரதம மந்திரி..அறிவி ஜீவித்துவ உங்கள் பேச்சு , உயிர் அணு ஆராச்சி..புஷ் பில்லியன் டாலர் முதலீடு ..... விஞ்சானி வில்லன்...ஐய்யோ…..


உயிர் அணு விஞ்சானி(ஈ) , புஷ்(ஹாலிவுட்), சர்தார்ஜி(பஞ்சதந்திரம்),அக்ரகாரத்து பாட்டி(மிக்கேல் மதன காமராஜன்),ஜப்பானிய பைட்டர்(BABEL), அப்பாராவ்- RAW(இந்திரன் சந்திரன்),கதை நாயகன் (தசாவதாரம்),உயர்ந்த மனிதன் (மிக்கேல் மதன காமராஜன்),ஐயங்கார் பையன் (தசாவதாரம்),தலித் கிருத்துவர் பூவராகன் (சபாஷ் கமல் ..!) அமெரிக்க வில்லன் (Eliminator - 2) ..11 வேடம் தானே வருது.. 10 வேடம்னு சொன்னாங்க...?


கதைக்கு வருவோம் ...புராண படத்தை எடுக்க நினைத்து... BABEL பார்த்து, பாதிப்படைந்து அந்த வகையில் ஒரு படம் பண்ண நினைத்து, கே எஸ் ரவிக் குமாரை இயக்குனராக்கி பஞ்ச தந்திரம் வடிவில் , Eliminator -2, எல்லாம் சேர்ந்து ஒரு படம் ...


உங்கள் பாணியில் சொல்வதென்றால், Out of focus-ல் ஒரு koly wood படம்...கவன சிதறல்கள் பல ..கதையின் கரு, 11 வேடம், நகைச்சுவை சிதறல்கள்,நிறைய கதா பாத்திரங்கள், உங்களையும் சேர்த்து…..


கமல் ஹாசனான, கமலஹாசன் அவர்களே.. உங்கள் பெயர் மாற்றம் Numerology காரணமில்லை என்ற உங்கள் கூற்றை போல கிருத்துவத்தையும், இஸ்லாமையும் ஆதரிக்கும் காட்சிகள் படம் முழுவதும்..


இந்து துவத்தையும் , சைவத்தையும் இகழ்ந்து பேசும் உங்கள் பகுத்து அறிவு வாதத்திற்கு ஒரு சபாஷ் ... என்ன செய்வீர்கள் மஞ்சள் துண்டு பின்னல் செல்லும் அறிவாளி தொண்டன் தானே நீங்கள்...?


உங்களோடு இரட்டை வேடம், அசினோடு ஜோடியாக படம் முழுவதும் கட்டிப்பிடித்து நடித்து கொடுத்த விஷ்ணு பகவானுக்கு சம்பள பாக்கியாம் ... தயாரிப்பாளர் கிட்ட சொல்லி சீக்கிரம் கொடுங்க...


கேமரா... C G .. யை அழகாய் கையாண்ட ரவி வர்மனுக்கு ஒரு சபாஷ்..


முக அலங்காரம்-அவ்வை ஷண்முகி அளவுக்கு இது இல்லை .. எதோ 60 வயது பாட்டிக்கு 20 வயது பெண்ணாக்க மேக் அப் போட்டது மாதிரி... பூ வராகன் மற்றும் ஜப்பான் வீரன் தவிர்த்து...


கலை- சுனாமி மாதிரி மனதை கொள்ளை கொள்கிறது

தலைக்கெல்லாம் தலையான தலைக்கு ....இது ஒரு நல்ல முயற்சி ....உங்கள் தமிழன் உங்களிடம் எதிர்பார்ப்பது BABEL படத்தின் தழுவலை அல்ல..இன்னும் நிறைய...


எங்களுக்கு ஒரு ரஜினி ஒரு விஜய் , ஒரு அஜித் போதும் தல ...
இதற்க்கு காரணம் நீங்களே.. உங்கள் உழைப்பே… உங்கள் மீதான எதிர் பார்ப்புக்கு காரணம்... நீங்களே பன்னலன்ன வேற யாரு பண்ணுவா,,?



மர்மயோகியிலாவது எங்கள் கமலை (உடம்பிற்கும்/ புத்திக்கும் வயதாகா)எதிர் பார்க்கும்


உங்கள் மணல் தரை ரசிகன்


பட்டிக்காட்டான்


பின் குறிப்பு

1.சக எழுத்தாளர் திரு.சாரு நிவேதிதாவின் கருத்துகள் உங்கள் பார்வைக்காக

http://www.uyirmmai.com/ContentDetails.aspx?cid=43


2.BABEL என்னன்னு தெரியாதவங்கலுக்கு 2007 OSCAR வின் பண்ண ஒரு ஆங்கில படம்...அதன் படம் கீழே ..

4 comments:

Known Stranger said...

babel padathoda thakuthall innum asaiyana vitu pogallai polla irukay.. ithula oru kuthu ennana.. the song kalai kandal tune is suritified from vikarams one malayalam movie also. that sardar character reminds me of kallingan movie of kamal. athu adutha kuthu... ennathan irunthallum his attempt is good. nama than romba ethur parthutom. babel parkatha , english oscar movie parkatha oru panroti patikatana porthavarikum padam superoo super.. ennama kallakirukaru kamal. cha kamal kamal thanu sollitu pora pamaranum irukan tamil natulla.. muranbadugalundan iruntha than avan oru kallaikan.

Babell ponra oru padaipu parkatha entha oru sarasari tamil rasiganuku kudutha oru hollywood virunthu from tamil industry. engayavathu oru thodakam vendum antha thodakam aramechuruku. ellatheyum kamalayva panna mudiyum..

paratuvom muyarchiyai. kurai kura palla peru undu athu nama tamilianukuriya oru yethartham... vethalla paku potukitu inum nalla critic panuvom...

oru muyarchi paravalla sekaram etavidinum oru muyarchi. paratuvom.. pallarum saiya nenaikatha oru muyarchi. a costly experiment. thatz all.

padam kandipa kalla katum

வந்தியத்தேவன் said...

இந்துமதத்தை கிண்டல் செய்பவர்கள் இஸ்லாத்தையும் கிறிஸ்தவத்தையும் தூக்கிவைப்பது அதியசமல்ல. பெரும்பாலான திராவிடக் கட்சிகளின் கொள்கை இதுதான். அன்பேசிவத்திலும் கமல் இதனைச் செய்திருப்பார். நான் எந்த மதத்திற்க்கும் எதிரியல்ல. ஆனால் கொண்ட கொள்கையில் விலகக்கூடாது இந்துக்களுக்கு ஒரு நீதி மற்றவர்களுக்கு ஒரு நீதியா?

பரிசல்காரன் said...

ஒரு கமல் ரசிகன் என்று சொல்லிக் கொள்ளும் உங்களுக்கு இந்தப் படத்தைப் பற்றிய சரியான பார்வை இல்லாததற்கு, நான் அல்ல-கமல் தான் வருந்த வேண்டும்!
//உயிர் அணு விஞ்சானி(ஈ) , புஷ்(ஹாலிவுட்), சர்தார்ஜி(பஞ்சதந்திரம்),அக்ரகாரத்து பாட்டி(மிக்கேல் மதன காமராஜன்),ஜப்பானிய பைட்டர்(BABEL), அப்பாராவ்- RAW(இந்திரன் சந்திரன்),கதை நாயகன் (தசாவதாரம்),உயர்ந்த மனிதன் (மிக்கேல் மதன காமராஜன்),ஐயங்கார் பையன் (தசாவதாரம்),தலித் கிருத்துவர் பூவராகன் (சபாஷ் கமல் ..!) அமெரிக்க வில்லன் (Eliminator - 2) ..11 வேடம் தானே வருது.. 10 வேடம்னு சொன்னாங்க...? //
மேற்கண்ட பத்தியில் உயிர் அணு விஞ்சானி(ஈ)-கதை நாயகன் (தசாவதாரம்), இருவரும் வேறு வேறா? என்ன படம் பார்த்தீர்கள்? ஒரு ரஜினி ரசிகனான என் விமர்சனத்தில் கூட இப்படி கமலை வாரவில்லை! நண்பரே.. கோபப்படாதீர்கள்.. சினிமாவை ரசிக்க / விமர்சிக்க முதலில் அதை முழுமையாய் உள்வாங்கப் பழகுங்கள். இது போன்றரசிகர்கள் இருப்பது எல்லாம் கமலின் ராசி!
தயவு செய்து கோபப்பட வேண்டாம்.. மனதில் உள்ளதை சொன்னேன். தவறாக நினைத்தால் மன்னியுங்கள்!
-மிக்க அன்புடன்....

மனுஷம் said...

நண்பா

தவற்றிற்க்கு வருந்துகிறேன். அது தசாவதாரம் தான்…செய்த தவறை மறைக்க நான் கமல் ஹாசனும் இல்லை…என் தவறை ஆதரித்து பேச எனக்கு ஒரு (ரஜினி ரசிகனான) பரிசல் காரனும் தேவை இல்லை…

சினிமாவை உள் வாங்குதல் என்பது என்ன..?வசனம், வசனமாக ஒப்பிப்பதா..?இல்லை இப்படி அலசுவதா..?

கதைக்கு வருவோம் ...புராண படத்தை எடுக்க நினைத்து... BABEL பார்த்து, பாதிப்படைந்து அந்த வகையில் ஒரு படம் பண்ண நினைத்து, கே எஸ் ரவிக் குமாரை இயக்குனராக்கி பஞ்ச தந்திரம் வடிவில் , Eliminator -2, எல்லாம் சேர்ந்து ஒரு படம் ……………

அல்லது உள் வாங்கிய உங்கலால் இதை மறுக்கத்தான் முடியுமா..? கமல் ஹாசன் தான் மறுக்க முடியுமா..?

கமல் மடையன் என்பதல்ல என் வாதம்..கமல் ஒன்றும் அதி மேதாவி அல்ல (தசாவதாரத்தை பொறுத்த மட்டில்).

தானும் ஒரு சராசரி தமிழ் கதாநாயகன் மட்டுமே…ஒரு ரஜினி, விஜய், அஜித், வரிசையில் கமல்…இதை கமல் முதலில் ஒப்புக்கொள்ளட்டும்…

முதலில் அந்த அதிமேதாவி முக மூடியைய் கிழித்தெரியட்டும்..

கமலின் பயம் பத்து முகமூடிகளாய், கெ ஸ் ரவிக்குமாராய், ஜாக்கி சானாய், மல்லிக்கா செராவத்தாய்….காட்சிக்கு காட்சி பிரதிபலிப்பதை மறுக்கத்தான் முடியுமா..?

ஒரு கமல் ரசிகனுக்கு மட்டுமே புரியும் கமலின் கழிவிரக்கம்..

தங்கள் புரிதலுக்கும், பதிலுக்கும் நன்றி..

மேலும் தங்கள் கருத்துக்களை (எதிர்) நோக்கும்

கமல் ரசிகன்

பார்த்ததில் பிடித்தது....