Friday, September 5, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- II

ஒரு கன்னிப் பையனின் சாபம்- ஒரு சாந்தி முகூர்த்த இரவுக்கு….

என் அடையாளங்கள் தொலைந்து போன ஓர் இரவு….

இத்தனை பேரிரைச்சலும்
குட்டி பிள்ளையாரும்
ஈ மொய்க்கும் இனிப்புகளும்
மீதமிருக்கும் இந்த படையல் பழங்கலும்

உடைந்து போன பிள்ளையார் குடையும்
மூலையில் காய்ந்து போன வாழையிலையும்
தன்னந்தனியாய் நானும்…

........................><..................................

என்ன செய்துகொண்டிருப்பாய் இப்போது..?
நிச்சயதார்த்த புடவை சரசரக்க..
கற்றை கண்ணாடி வளையள்கள் சலசலக்க..
குங்கும சிவப்பாய் வெட்கத்துடன்
நடந்து கொண்டிருக்கலாம்………(வலுக்கட்டாயமாய்)

ஆர்வத்துடன் பட்டு வேட்டியில் அவன் அங்கு
யாருமில்லா தனியறையில்
மூன்றாவது குப்பி மதுவுடன் நான் இங்கு

வீடு முழுவதும் வட்ட தகடுகளுடன்
நான் களைத்து போய்
தண்ணி கொடுக்க கூட ஆளில்லாத அறையில்….

........................><..................................

யார் அவன்..?
உன் மீதும்
உன் உடல் மீதும் என்ன உரிமை அவனுக்கு..?

பாழாய் போன தாலி
பழகிப் போன கல்யாணம்
இதுதான் அந்த அவனின் அடையாளமா…?

........................><..................................

என்ன செய்யப் போகிறாய் நாளை காலை..?
அழிந்து போன குங்குமத்துடன்
கசங்கிப் போன பட்டுப் புடவையுடன்
உடைந்து போன வளையுடன்

அப்படியே சென்று உன் பெற்றோரிடம் கூறு
நேற்று நடந்த சங்கமத்தில்- இறந்து போனவை
என்றோ காதலித்த இரண்டு இதயங்கள் என்று……
........................><..................................

புரியாத புதிராய் நீ…
அன்றும், இன்றும்- என்றென்றும்
இப்போதாவது கூறிச் செல்…

உன் வாழ்க்கை எனும் நாடகத்தில்
நான் யாரென்றும்- நான் ஏற்று நடித்த
பாத்திரம் எதுவென்றும்…?

........................><..................................

இனி நாம்
உனக்கும் எனக்குமான உறவு முறைதான் என்ன..?
விபத்தாய் நாம் சந்திக்க நேர்ந்தால்
நமக்கான ஒரு தெளிவிற்க்கு….

புனர்ச்சி பெருக்கில் தத்தளித்து கிடக்கும் உனது
ஏதேனும் ஒரு உறங்காத இரவுகளில் யோசித்து சொல்
உனது கனவனுக்கு தெரிந்தோ/ தெரியாமலோ…
........................><..................................

இனி நீ….

எதிர் கொள்ளும் இரவுகளில்
என் முகமூடி அணிந்து உன் மீது படரப்போகும்
அவனான உன் கணவனுக்கு
நல்ல துணைவியாகவும்

தங்கள் கடமையைய் இனிதே செய்து முடித்த உன் பெற்றோருக்கு
நல்ல மகளாகவும்
வாழப் பழகிக் கொள்…

........................><..................................

இனி நான்

கை பிடித்து நடந்த காதலி
கரைந்து போனதாய் ஞாபகம்
கண்ணெதிரே…

காட்டற்று வெள்ளமாய் வாழ்க்கை
காலடியில் வெகு வேகமாய் சரிந்து கொண்டிருக்கும் மணலாய்
கரைந்து கொண்டிருக்கிறது தன்னம்பிக்கை….

தலை மூழ்கி
உடல் நனைந்து
சுழி சூழ்ந்து
அலையால் அலைக்கழிக்கப் பட்டு- கரை சேர்ந்த போதும்
கேட்டுக் கொன்டிருக்கிறது

கடைசியாய் நீ அழுத சத்தம்
காதருகே……….

4 comments:

Known Stranger said...

nanba. kavalai vendam. even this phase will pass. Valikum, valikatum, anubavi intha sugathayum. ithuvum oru sugam. kadal seitha inbathin maru urva sugam. sellaruku vedhanai. unai ponra varuku ithuvum oru sugam. un kadalin aazham unakay ippothu than vellangum. santhosamaga valiyin sugathai anubavi. pazhagividum oru nal vidiyal varum matroru murai mendum seragu vallarum parapai. enna valibam poirukum paravallai.

Anonymous said...

நண்பரே, தங்கள் கவிதை மூலம் தங்கள் வலி புரிகிறது. எனக்கு தங்கள் காதல் முற்று பெற்றது போல தோன்றவில்லை...
உம்முடைய தன்னம்பிக்கை குறைவு போல தோன்றுகிறது,
தாங்கள் உங்கள் காதலை தெரிய படுதினிரா ? "இல்லை" என்றால்
வருத்தப்பட ஒன்றும் இல்லை. இது ஈகோவா, தயகமா, அல்லது ஜாதி, மத பிரசனையா காதலுக்கு வேண்டியது தைரியமும், இருவருக்கும் இடையே உள்ள அன்பும், நம்பிக்கையும் மட்டுமே. தாங்கள் இவ்வளவு புலம்புவதை ஒரு முறை உங்கள் காதலை தெரிய
படுதீநீரா ? தாங்கள் ஒரு வேலை காதலை சொல்லி, அது நீராகரிக்க பட்டு இருந்தால் நீங்கள் ஏன் வருதபடுகிறீர்கள்..

ஒரு வேலை உங்கள் காதலியும் உங்கள் நிலமையில் இருக்கலாம். இருவரும் காதலித்து இருந்து சிறிய வீஷயதிற்காக பிரிந்து இருந்தால் வருத்தப்பட வேண்டியதே.... தவறு யார் மீது இருப்பீனும் நாம் அடுத்தவரை கை காட்டுகிறோம். காதலர்களுக்கு பிரச்சனை கதலர்களே ....கடைசியில் மிஞ்ச போவது என்னவோ தனிமையும், வெறுமையும்...

"கடைசியாய் நீ அழுத சத்தம் காதருகே………."

தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லது என்ன செய்தீர்கள். கடந்த 4 மாதமாக காதலியின் நிச்சயதார்தம் என்று தெரிந்த பிறகு பகுதி I & II எழுதிக்கொண்டு..... காதலியின் பெற்றோரிடம் பேசிஇருக்கலாம் அல்லது பதிவு திருமணம் செய்து இருக்கலாம். காதலியின் மனதை பார்த்து இருந்தால் ஒரு வேலை அழுகை கேட்டு இருக்கும்........ அல்லது தாலி மேல் நம்பிக்கை இல்லாததால் காதலி வீட்டை விட்டு உம்மை தேடி வரட்டும் (வருவாள்) என்று இருந்தீரா ? பெண்கள் காதலிக்க வில்லை என்று வருத்தபடும் ஆண்கள் திருமணம் என்றதும் அதற்கான முயற்சி எடுப்பதில்லை....

காதலியிடமோ அல்லது நெருங்கிய நண்பரிடமோ மனம் விட்டு பேசுங்கள், உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கலாம் அல்லது பாரம் குறையலாம்....

தங்கள் கையில் மது கோப்பையை ஏந்தியதை நான் விரும்பவில்லை. தங்கள் ஒரு கையில் காதலியையும் மற்றொரு கையில் பேனா பிடிப்பதையே விரும்புகிறேன்.

- ஆனந்த்

Anonymous said...

நண்பரே, தங்கள் கவிதை மூலம் தங்கள் வலி புரிகிறது.
எனக்கு தங்கள் காதல் முற்று பெற்றது போல தோன்றவில்லை.....
உம்முடைய தன்னம்பிக்கை குறைவு போல தோன்றுகிறது,
தாங்கள் உங்கள் காதலை தெரிய படுதினிரா ? "இல்லை" என்றால்
வருத்தப்பட ஒன்றும் இல்லை. இது ஈகோவா, தயகமா, அல்லது ஜாதி, மத பிரசனையா காதலுக்கு வேண்டியது தைரியமும், இருவருக்கும் இடையே உள்ள அன்பும், நம்பிக்கையும் மட்டுமே. தாங்கள் இவ்வளவு புலம்புவதை ஒரு முறை உங்கள் காதலை தெரிய
படுதீநீரா ? தாங்கள் ஒரு வேலை காதலை சொல்லி, அது நீராகரிக்க பட்டு இருந்தால் நீங்கள் ஏன் வருதபடுகிறீர்கள்..

ஒரு வேலை உங்கள் காதலியும் உங்கள் நிலமையில் இருக்கலாம். இருவரும் காதலித்து இருந்து சிறிய வீஷயதிற்காக பிரிந்து இருந்தால் வருத்தப்பட வேண்டியதே...... தவறு யார் மீது இருப்பீனும் நாம் அடுத்தவரை கை காட்டுகிறோம். காதலர்களுக்கு பிரச்சனை கதலர்களே ....கடைசியில் மிஞ்ச போவது என்னவோ தனிமையும், வெறுமையும்...

"கடைசியாய் நீ அழுத சத்தம் காதருகே………."

தாங்கள் என்ன செய்து கொண்டு இருக்கிறீர்கள் அல்லது என்ன செய்தீர்கள். கடந்த 4 மாதமாக காதலியின் நிச்சயதார்தம் என்று தெரிந்த பிறகு பகுதி I & II எழுதிக்கொண்டு. .... காதலியின் பெற்றோரிடம் பேசிஇருக்கலாம் அல்லது பதிவு திருமணம் செய்து இருக்கலாம்..... காதலியின் மனதை பார்த்து இருந்தால் ஒரு வேலை அழுகை கேட்டு இருக்கும்...... அல்லது தாலி மேல் நம்பிக்கை இல்லாததால் காதலி வீட்டை விட்டு உம்மை தேடி வரட்டும் (வருவாள்) என்று இருந்தீரா ? பெண்கள் காதலிக்க வில்லை என்று வருத்த படும் ஆண்கள் திருமணம் என்றதும் அதற்கான முயற்சி எடுப்பதில்லை..

காதலியிடமோ அல்லது நெருங்கிய நண்பரிடமோ மனம் விட்டு பேசுங்கள், உங்களுக்கு ஒரு தெளிவு கிடைக்கலாம் அல்லது பாரம் குறையலாம்....

தங்கள் கையில் மது கோப்பையை ஏந்தியதை நான் விரும்பவில்லை. தங்கள் ஒரு கையில் காதலியையும் மற்றொரு கையில் பேனா பிடிப்பதையே விரும்புகிறேன்.

- ஆனந்த்

Venkata Ramanan S said...

//என் முகமூடி அணிந்து உன் மீது படரப்போகும்
அவனான உன் கணவனுக்கு//....

படர்தலும் , புணர்தலும் தான் காதலா?..
எல்லாம் சில காலம் .. இதுவும் கடந்து போகும் ...

பார்த்ததில் பிடித்தது....