Sunday, May 18, 2008

நானும் என் எழுபது வயது பாட்டியும் ...


விவித பாரதி எங்கே எடுக்கும்..?
நாடகம் எங்கே கேக்கும்..?

மெட்ராஸ் என்ன நம்பர் ..?

-----------------------------------

எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும்
என் எழுபது வயது பாட்டிக்கு மட்டும் புரிவதே இல்லை
வயதா, ஆணவமா..?
அவள் மரணத்திற்க்குப் பிறகும் எனக்கு தெரியல்லை…

பாட்டோ,செய்தியோ

அவளைப் பொருத்தவரை
எல்லாம் ஒரு கொடுப்பினை தான்..........

----------------------------------------

பள பள மூங்கில் வண்ண
வால்வு ரேடியோ பெட்டியின்
கர கர சத்தத்தையும் மீறி
இங்கும் அங்கும் நகரும் சிகப்பு முள்ளை நகர்த்தி

பாட்டோ
செய்தியோ
ஒலிச்சித்திரமோ
3 மணி நாடகமோ..
எப்போது, எங்கு, எது கிடைக்குதோ- அங்கே நிறுத்தி
அதை கேட்பது தான்
அவளின் ரேடியோ
பரிச்சயமும்
அனுபவமும்
அதிஷ்டமும்…

…………………

இன்று
நாள் முழுவதும் இனையத்தில்(Internet) வியாபாரம் செய்து
எல்லை இல்லா தொலை பேசியில்
அயல் கிரகம் பேசி…
சூரிய ஒளிக் காரில் பயணித்து
பசிக்கு மாத்திரை முழுங்கி
சிறிதே வண்ண சாராயம் குடித்து
குலாவி
வலது பக்க சுவராய் பதிந்திருந்த
தொலைக் காட்சி பெட்டியில் _ நானும் ரிமோட்டில்
CNN IBN
NDTV
BBC
SUN
SUN Music
M TV
V
Raj
……….
……….
--------------------------------------------------

காலங்களை கடந்து
மரபனுவில் மரபாய்
என்னுள்ளும்

பாட்டோ
செய்தியோ
திரைப் படமோ
நாடகமோ..
எப்போது, எங்கு, எது கிடைக்குதோ- அங்கே நிறுத்தி
அதை கேட்பது தான்
என் இன்றைய தொலைக்காட்சி
பரிச்சயமும்
அனுபவமும்
அதிஷ்டமும்…

No comments:

பார்த்ததில் பிடித்தது....