நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்…......பகுதி-I..........................…..(ஜுலை முதல் செப்டம்பர் வரை)

நீ……
என் இத்தனை வயது பாவங்களுக்கும் பரிசு
உன் காதலா….
உன் பிரிவா..?
…………..<>…………………
நான் பார்த்ததை
ரசித்ததை
படித்ததை
கேட்டதை
மொத்தத்தில் யாரிடமும் -என்னை
பகிர முடியாமல் தவிக்கிறேனே இன்று ..
உன்னை தவிர
இதற்க்கு பெயர்தான் காதலா..?
…………..<>…………………
என்ன செய்யப் போகிறேன் …
நீ இல்லாமல் இனி.....
வழக்கம் போல
உறக்கமில்லா நடுநிசிகளில்
அலைபேசியில்
ஏழு நாட்கள் சண்டைக்குப் பின் சமாதானமாய்…
நானும் உனக்கான இடத்தில்
உன் சக்களத்தியாய்
அழகாய் அந்த தனிமையும்…
…………..<>…………………
அந்த பொண்ணுக்கு இந்த மாப்பிளையா..?
உன் நிச்சயத்திற்க்கு சென்று வந்த
என் அப்பவித் தாயாரின் ஆதங்கம்..
எல்லாம் தெரிந்தா..?
எதுவும் தெரியாமலா..?
எதுவும் தெரியாமல் நான்…..
…………..<>…………………
பெண்ணடிமைத்தனம் என்றோ
ஆணாதிக்கம் என்றோ கூறிக்கொள்..
எனக்கான நீ
அவனருகில் – உன் திருமண நிச்சயத்தில்
காதலை விட பொறாமையே பெரிதாய்…
எனக்கான ஏதோ ஒன்றை
யாரோ தட்டிப் பறித்துச் சென்று
என் முகத்தருகே
பரிகாசம் செய்வதைப் போல….
…………..<>…………………
உன்னை தோழி என்றால் அது
தோழமைக்கு இழுக்கு
உன்னை காதலி என்றால் அது
காதலுக்கு இழுக்கு
என்ன சொல்ல…?
…………..<>…………………
தொக்கி நிற்கின்றன
நான் இப்பொழுது எழுதும் எல்லா கவிதைகளும்
முடிவில்லாமல்…….
வாழ்க்கையயைப் போல..
முடிவில்லா சுதந்திரத்தில் அனந்தமாய்
தத்தளித்துக் கொண்டே….
…………..<>…………………
நிச்சயம்
நிச்சயம் வரை இது போதும்..
இன்னும் ............. நாட்கள் – உன் திருமணத்திற்க்கு
வலிக்க
வலிக்க
நிறைய எழுதுவேன்- காத்திருங்கள் நீங்களும்
வலிக்க
வலிக்க…….


Comments
கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
முழுவதும் படித்து கருத்துக்களை பகிரவும்
முழுவதும் படித்து கருத்துக்களை பகிரவும்
கற்றுக் கொடுப்பதோ- காலம்
எய்தவன் இருக்க அம்பை
நோவததேன்.............?
ஹி ஹி ஹி