Tuesday, December 8, 2009

புது பொண்டாட்டிக்கு உடம்பு முடியாமல் போன ஒரு ஞாயிறு காலை…





துவரம் பருப்பையும் பயத்தம் பருப்பையும் கலந்து
ஒன்னுக்கு ஒன்றை தன்னி ஊத்தி
தனியா வேக வச்சி …..சிலுக்க…

எண்ண நல்லா காய வைச்சி
கடுகு உளுத்தம் பருப்பு வெடிக்க தாளிச்சி

சிட்டிகை மஞ்சள் பொடி தூவி
நெடுக்கால வெட்டின சின்ன வெங்காயத்தை கொட்டி வதக்கி…..

நாட்டு தக்காளி வெட்டி போட்டு
கத்தறிக்கா முறுங்கக்காய் வதக்கி
கறிவேப்பிலை (கொஞ்சம்) கிள்ளி போட்டு
தக்காளி மசிய நல்லா வேக வெச்சி…

நாலு கொட்ட புது புளிய தண்ணில கரைச்சி
மசிச்ச பருப்ப
வெங்காய தக்காளியோட கொட்டி..

புதுப் புளி கரைசலை ஊத்தி- ரெண்டு கொதி வந்து இறக்கி வச்சி
நாலு கொத்த மல்லி தழைய போட்டு இறக்கி எடுத்தா
இட்லி சாம்பார்…..
மணக்க… மணக்க…

எத்தனை முறை / விதமாய் முயன்றாலும்
கைக்கெட்டாமல் போனது

குளத்து படித்துறை மேல்
அப்பாவுக்கு அருகில் அமர்ந்து
வெள்ளை சட்டையுடன் காக்கி கால் சட்டையில் சப்பனமிட்டு உண்ட

மந்தார இலையில்
மனோன்மனி அக்காக் கடை(ஆவி பறக்க)
இட்லி சாம்பாரின்(சிவப்பு கார சட்டினியுடன்) சுவையும் மணமும்…..

Saturday, June 6, 2009


காதலுக்கும் காமத்திற்கும் இடையே ஆன
மெல்லிய சிவப்புக் கோடு
மின்னி மின்னி மறைகிறது.....(A Thin Red Line)
புது வாழ்க்கைத் துணையின்
ஒவ்வொரு தீண்டலிலும்.......

Thursday, May 21, 2009

அன்புத் தோழமைக்கு.....

எனது

வாழ்க்கைப் பாதையில் ஆறுதலாய்…
உச்சி வெயிலுக்கு நிழலாய்…
தவித்த வாய்க்கு தண்ணீராய்…
சாலை முக்கில் வழிகாட்டியாய்…
இலக்கு தெரியா நிமிடங்களில் - சுண்டு விரல் கதகதப்பாய்
இதோ எனது திருமணம்..

உனது உளம் கனிந்த வாழ்த்தை எதிர்பார்த்து நாங்களும் - உனக்கு
என் திருமண அழைப்பிதழும்…..

உமது குடும்பத்துடன் உன் நல்வரவை எதிர் நோக்கும் - உன் நண்பன்

வெங்கட்

Sunday, April 26, 2009

வெண்ணிலா கபடிக் குழு…



வெண்ணிலா கபடிக் குழு…


திருட்டு வட்டத் தகடு பார்த்து விமரிசனம் எழுதும் இந்த தலைநகரத்து தமிழனை என் தமிழ்த் தாயும், தமிழ் திரையுலகமும் மன்னிக்கட்டும்…

என்னை மன்னிப்பவர்களுக்காக மட்டும் இத்திரை விமரிசனம்
…………….

கதை என்ன..?

ஒரு சாதாரன கிராமத்து இளைஞனுடைய வாழ்க்கை.. ஒரு திருவிழாவில் அவன் சந்திக்கும் ஒரு அழகான யுவதியுடனான காதலும்..அவன் சார்ந்திருக்கும் வெண்ணிலா கபடிக்குழுவுமாக பயணிக்கிறது கதை..

விளையாட்டு படம் என்றவுடன்..லகான்.., கில்லி..,சென்னை-28..,படத்தோட தாக்கம் படம் முழுவதும்..?சென்னை -28 மாதிரி ஒரு படம் பண்ணணும் அப்படிங்ற இயக்குனரின் கனவு சாத்தியப் பட்டிருக்கிறது..

படத்தின் முதல் பாதி சுப்ரமனியபுரமும்., இரண்டாம் பாதி மேற் சொன்ன திரைப் படங்களும்..

புதிய இசையமைப்பாளர்.. கடம் வித்வான் விக்கு வினாயகராம் அவர்களின் வாரிசாம்…வாழ்த்துக்கள்..தமிழ் திரையுலகத்திறக்கு ஒரு நல் வரவு…

………………….

எங்கே தடம் புரண்டார்..இயக்குனர்..திரைப் படத்தையும் ஆவணப் படத்தையும் பிரித்து போடும் அந்த மெல்லிய சிவப்புக் கோடு., ஆவணப் படம் பக்கமாக சாய்கிறது படம் முழுவதும்..

சேது பாலாவும்., சுப்ரமனியபுரம் சசியும் வெற்றி பெறுவது இங்கே தான்…

சுப்ரமனியபுரம் படத்தின் முடிவில் ஒரு/இரு மரணம் தேவைப்பட்டது.., கதைக்காக..ஆனா இதுல எதுக்கு..?.முதல் படத்துல நாயகன் இறந்து போறது 80-துகள்ல இருந்த ஒரு பழக்கம் .., இன்னுமா..?

ஒரு (சின்ன) மாற்றுக் கடைசி காட்சி.,

கடைசி காட்சில., மாலை போட்ட கதா நாயகனின் புகைப்படத்த்ற்க்கு பதிலா..,’’ எவ்ளோ நேரன்டி’’ அப்படிங்கற கதாநாயகனையும்” தோ வந்துட்டேங்க “ அப்படின்னு வெளியே வர்ற அந்த மற்றொறு தமிழ் கதாநாயகி(புள்ளதாய்ச்சி) இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் இல்ல..?

…………..

காவடி சுமப்பது போல மனசு காதல சுமக்குதடா..? வாழ்க தமிழ்.., வாழ்க பாடலாசிரியர்..


இடைவேளை., கடைசி காட்சியில் அந்த நாய்..படத்தின் தொடக்கம்.,எல்லா நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தார்.., வழைப்பழ நகைச்சுவைக்கு இணையாக பரோட்டா நகைச்சுவை..சம்பத்(தமிழ் தவிர) வாழ்க இயக்குனர்..

ஒளிப்பதிவு..பி.சி.சீராம் தாக்கம் சரி.. அவரு பண்ணா நல்லா இருக்கிற சில காட்சிகள் நீங்க பண்ணா எரிச்சலா இருக்கு ..ஏன்னு யோசிங்க ஒளிப்பதிவாளரே அடுத்த படத்துலயாவது..

அன்றலர்ந்த பூவாய் கதாநாயகி
யதார்த்தமான கதாநாயகனும்.,திரைக்கதையும்
மண் மனம் வீசும் கிராமம்
அழுக்கே அழகான மனிதர்களும்

வாழ்த்துக்கள் இயக்குனருக்கு- இந்த புதிய
முயற்ச்சிக்கும்., படத்தின் தலைப்பிற்க்கும்


Tuesday, March 31, 2009

......................?


என்ன எழுத..?
யாரைப் பற்றி எழுத..?

தலைப்பு என்ன- கைவசம்
கருவும் கிடையாது ........

வலி இல்லை- சிறிதே
சந்தோஷமும் இல்லை..

பிறப்பும் இல்லை- இக்கணம் வரை
மரணமும் இல்லை....

எழுத தூண்டுவது யார்……?
படைப்பளியா..?
வாசகனா..?

எதைப் பற்றி எழுத..?
காதலையா..?
பிரிவையா..?

வடிவம் என்ன..?- கதையா..?
கவிதையா..?

குறிலா…?
நெடிலா..?

பதிக்கப் போகிறேனா..?- சுக்குச் நூறாய்
கிழித்தெறியப் போகிறேனா..?

உந்தித் தள்ளுவது- அமானுஷ்யமா..?
வெற்றிடமா..?

வெள்ளை ஓவியமாய்...........
நிசப்தத்தின் இசையாய்...................

முழுமையாய் இக்கவிதை…
ஊருக்கு சொல்லாமல் _ என்றோ பூப்படைந்த
ஏழைப் பெண்ணாய்..

இதோ இக்கவிதை-மேற் சொன்ன வரிகளில்
எங்கோ ஒரு (வரிக்) கவிதை……….

தட்டுங்கள் ,கதவு திறக்கட்டும்
தேடுங்கள், கவிதை கிடைக்கட்டும்….....

பார்த்ததில் பிடித்தது....