சரியும் ...... ? தவறும் ..............?



"தவறு" என்கின்ற முடிவின் முடிவில் - எனது
ஆண்மை (அமிலச்) சோதனைக்குள்ளாகிறது

"சரி" என்ற முடிவின் தொடக்கத்தில் -இது
போன்ற இன்னும் எத்தனை என்ற
தேடல் தொடங்குகிறது


>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<

ஒரு முழு வட்டப் பந்தின் - இரு
அரை கோளங்கள்
எனது நடத்தையை நிர்ணயிக்கும் எடைக் கற்களாய்
இடைத் தராசுக்கு இடையே ................

>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<

என்னை ஈர்ப்பது எது ..?- இட வலமாய்
வடிவமா..?
அளவா...?
வண்ணமா..?
வண்ணத்துக்குள் வண்ணமா ...........?
வண்ணத்துக்குள் வண்ணத்துக்குள் வண்ணமா ...........?- அல்லது
விபத்தாய் உரசிச் செல்லும் உணர்வா.......?

>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<

இத்தனை இரவுகள் கடந்த பின்பும்
தீண்டல் சுவை தெரிந்த பின்பும்
உரித்த வெங்காய விதையாய் - ஆசை
மறைந்த பின்பும்

தேடலும், முடிவும் ஒருங்கே சங்கமித்த பின்பும் -தேடும்
...........பொருள்
............இடம்
............அளவு
............சுவை
பிடிபட்ட பின்பும் - (தினம்) தொடர்கிறது
எனது பிரார்த்தனை மற்றும்
பாவ மன்னிப்புப் பட்டியல் .......................

>>>>>>>>>><<<<<<<<<<<<<<<<<<<<<<


வாழ்க்கை என்னும் சிறிய முள்ளுக்கும்
காமம் என்னும் பெரிய முள்ளுக்கும்- இடையே
வட்டத் தனி ஊசலாய்(பெண்டுலமாய்)
அசைந்து கொண்டிருக்கிறது

எனது நேர்மை

ஒவ்வொரு நொடிப் பொழுதும்
இங்கும் அங்குமாய்- முழு பந்தின்
அரை கோளத் தாக்குதல்களால்.............................

2nd May 2012
Indigo Airlines
Bangalore- Newdelhi
மரண பய அனுபவத்திற்கு சில நொடிகளுக்கு முன் ........

Comments

Unknown said…
itharkana ularthangalai nan sonapothu yen manaivi yenai perverted yenru pattamm kativital.
Unknown said…
yen manaiyidam ularthathudan intha kavithaiyai vilakiyapothu.. enaku perverted enra pata peyar kidaithathu :p arumai nanbaray.
nanri Vaish & Garuda Yali....

Ithu aanulagam., NO ENTRY FOR WOMEN................

Continue your like / dislikes