கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---9


கழுதயொ................

குதிரயொ....................................

ஏதோ ஒரு பொண்ணு......

சீக்கிரம் கல்யாணத்த முடிங்க ......

சமீபத்தில் எனக்கு கிடைத்த திருமண அறிவுரைகளில் ஒன்று....

உறக்கமில்லா நடுநிசிகளில் தேவைப்படுகிறது......................

அழகான,

அறிவான,

புத்திசாலியான

எனக்கான பெண்ணல்ல.....

கழுதயொ................

குதிரயொ....................................

-------------------------------------------------------------

முன் இருக்கைப் பெண்ணொருத்தி -சற்று

முன் தன் கைக்குழைந்தைக்கு

கொடுத்த தாய்ப் பால் வாடை பாடம் புகட்டி செல்கிறது.....

இந்த வயதில் நான் இழந்து கொண்டிருக்கும் தந்தை- துவைத்தை
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

---------------------------------------------------------------------

திருமயிலை திருக்கோவில்

தினம் ஐந்து நெய் விளக்குகள்

பதினாறு சுற்றுகள்

நாற்பத்து எட்டு நாட்கள்

இன்றோடு முப்பத்தி மூணாவது நாள்
பாவம் தெய்வமும், அம்மாவும்.
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

---------------------------------------------------------------------------

எங்கே பார்ப்பது பெண்ணை - முதல் சந்திப்பில்... ?

முகத்தை மட்டும், ............. முகம் தவிர .........

இடை மட்டும் ...........இடை தவிர.........

பாதம் மட்டும்............. பாதம் தவிர........

எங்கே பார்ப்பது.......... பெண்ணை முதல் சந்திப்பில்..?. -
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

--------------------------------------------------------------------------

படிக்கட்டு முகட்டில் தொட்டுச் சென்ற

முகம் தெரியாப் பெண்ணின் கைச் சூடு.....

இரு சக்கர வாகனம் ஓட்ட விடாத
பின்னிறுக்கை பெண்ணின் உடல் சூடு...

ஒளித்து வைத்து படித்த புத்தகத்து
கதா நாயகியின் பெரு மூச்சுக் காற்றின் சூடு......-


தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

----------------------------------------------------------------------

மென் பொருள் வல்லுணரோ

வங்கி அதிகாரியோ

கல்லூரி ஆசிரியையோ

அரசு அதிகாரியோ

பள்ளி ஆசிரியாரோ

பத்தாவது படித்தவறோ

எழுத படிக்க தெரியுமோ......-
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

------------------------------------------------------------------------

உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்- புண்ணியம்

உங்கள் வாரிசு களுக்கு.....................

ஒரு மணப்பெண் எனக்கு....

படித்த பெண் வேண்டாம்....

வேலைக்கு செல்லும் பெண் வேண்டாம்...

நல்ல குடும்பம் வேண்டாம்...

ஒழுக்கம் வேண்டாம்..

அழகு வேண்டாம்.....- கண்டிப்பாக

தேவை, நல்ல கழுதயொ................

நல்ல குதிரயொ...............................

ஆசையன்15-09-07

Comments

Known Stranger said…
i will soon in your elite club
உங்கள் வலை பூவின் ரசிகனாகி விட்டேன் பார்த்த மறுகணமே :)...கவிதைக்கென்று தனியாக ஒன்று தொடங்கலாமே :)