ஓவியம்




அற்புதமாய் வரைந்திருந்தான்
அந்த ஓவியன்

எல்லோருக்கும் புரியும் படியாய்
தெள்ள தெளிவாய்
வண்ணக் கலவையாய்
கலை கோப்பாய் - சமவிகிதத்தில்
கசங்கிய கலை பெட்டகமாய்
கணக்கிலடங்கா உழைப்பை உள்ளடக்கி
படைத்தவனின் கற்பனை எல்லைகளை தாண்டி

ஓவியனின் ஓவியங்களுக்கு அருகில்
தரையில் சிந்திய வண்ணப் புள்ளிகளின் நடுவில்

அவன் கைத் துடைத்து
தூரிகை துடைத்து
வியர்வை துடைத்து போட்ட
அந்த வெள்ளைத் துண்டு

அற்புதமாய் வரைந்திருந்தான்
அந்த ஓவியன்- அவனுக்கே தெரியாமல்

Comments

ஒளி ஒவியரின் புகைப்படங்கள் அருமை.

புதுக்கவிதையும் அருமை

பாரட்டுக்கள்

கோவை விஜய்
http://pugaippezhai.blogspot.com/
நன்றி மீண்டும்..விஜய்
நன்றி மீண்டும்..விஜய்