எழுத்தாளனாகிய நான்….


எப்போதும் யாரோ- உடைந்த
சிலேட்டில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதைப் போல..


கை பிடித்து-கையில் பேனா பிடித்து
காதலியின் வாஞ்சையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல….

அழகான கருவை - எழுதி முடிக்குமுன்
இறந்து போன அற்ப ஆயுசு கவிஞனின்- ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல- பயமாய்
ஆனால் கையெழுத்து தெளிவாய்………..

மொத்தத்தில் என்
எல்லா கவிதைகளையும் - நான் எழுதாமல்
யாருடையதாகவோ...
மாற்றான் மனைவியாய்…..
எப்போதும் அழகாய்
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….

இந்த கவிதையும் சேர்த்து….
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நிறுத்த முடியாமல் வசியத்திற்க்கு கட்டுப்பட்டது போல…..

Comments

Anonymous said…
aga motham enna solla vararu intha kavingan. than ezhthuvathu thonodathu allanu solla varara ???