புன்னகை..?




காரணங்கள் இல்லா தருணங்களில்
கண்ணிமைக்கும் நேரத்தில்
வேலைப் பலுவிற்கு இடைப்பட்ட சில நொடிகளில்
மனைவியின் ஊடலுக்கு நடுவில்
எப்பொழுதேனும் வந்து போகும்- இனம் தெரியாப்
புன்னகைக்கு மட்டும்
தெரியும் ரகசியமாய்…

முடிவில்லா குகைவரையின்
ஏதோ ஒரு மூலையில் ஒட்டிக் கொண்டிருக்கும்- உன்
நினைவுகளின் நிழலாய் தெரிகிறது

“ஏன் சிரிச்சிங்க…?” என்ற என் சகதர்மினியின்
கேள்விக்கு விடை கூற முடியா
இந்த (அடையாளமில்லாப்) புன்னகை..?

Comments

www.bogy.in said…
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in
AnbuSelvan said…
Anna innum palasa Marakalaya :(