பகிர்தல் என்றொரு ஆனந்தம்

"மேளச் சத்தம் கேட்கிறது - பொண்ணு பாக்க வாறிங்களா"
வழக்கம் போல் பக்கத்து வீட்டு மீனாக்கா குரல்
தாழ்வாரத்து ஜன்னல் வழியே -புது
மனதம்பதியின் கெட்டி மேளச் சத்தம்
எங்கள் தோட்டத்து தெருமுக்கில்
கேட்கும் பொழுது ...............
------------------------------------------
கிடைத்த சில நொடிகளில்
விடு விடுவென நடந்துச் சென்று பார்த்து - மூச்சு வாங்க
சந்தோஷத்துடன் பகிர்பவை பல
கூர் மூக்கு ........
வட்ட நெற்றி .........
மூக்கு எடுப்பா ...........
(வலது) கண்ணு கொஞ்சம் சாயல் .............
மாங்கலரு...............
பொண்ண விட அவங்க அம்மா நல்ல அழகு ...........
பையன் கலரு(க்கு) கொஞ்சம் கம்மி ...........
தெத்து பல்லு .......
பையன் உயரம் இல்ல ...................
------------------------------
மேளச் (நாதஸ்வர) சத்தம்
தெரு முனை கடக்கும் வரை
பக்கத்து வீட்டு சந்திர அக்கா
அடுத்த வீட்டு பானு அத்த
எதிர் வீட்டு ரவியோட பாட்டி
இவர்களோடு புது மணப்பெண்ணை எடை போடும்
அம்மாவின் மனம்
எடை போடத் துடிக்கிறது - இன்றுவரை
மேற்கூறியவை பற்றி
அந்த அக்கா, பாட்டி,அத்தையிடம்
தன் வீட்டு மருமகளை............................

Comments

Watzapist said…
Varudangal pala kadanthum un kavi thanmai jolikarathu