திருவிழா முடிந்து திரும்பியபோது..........



திருவிழா முடிந்து திரும்பியபோது.............
.....................................X....................................

திருவிழாவில் எதிர்படும்-என்
இளைத்துப்போன ஆசிரியரிடமும்......
கைக் குழைந்தையோடு வந்த ஏழாம் வகுப்பு நண்பனிடமும்...
கண்ணில் கரு வளையம் விழுந்த பக்கத்து வீட்டு காதலியிடமும்... அப்பட்டமாய் தெரிகிறது

என் வயது

....................................................................X......................................................................


கூரான மார்பங்களும்
சிவப்பான உதடுகளும் குலுங்க
குத்து பாட்டுக்கு ஆடும் பெண்( கள் ).....

ஆண் ஆணாகவும்
பெண் ஆணாகவும் .....
பால் வெளியாய் நிலவொளியில்
என் வீட்டிற்கே கேட்கும்
"பளீர்" என்ற சத்தமில்லாத......
வலிக்காத சாட்டையுடன் ....
குழாய் ஒலி பெருக்கியில் தெரியும் வில்லன் இல்லாத அந்த மேடை..

மஞ்சள் வெளிச்சத்துடன் அந்த மகாபாரத கூத்து
எட்டு தௌடைகளும்
நாலு இடுப்புகளும் நடிக்கும் - கலை
நிகழ்ச்சியாக மாறித்தான் போனது இன்று......

கோவிலின் எதிரில்.
கூட்டத்துக்கு மறைவில்
முகத்தை மூடிக்கொண்டு (இந்த வருடம் பனி அதிகமப்பா... )
நடு ரோடில் எச்சில் உமிழ்ந்து கொண்டு

கண் கொட்ட (கொட்ட) பார்த்து கொண்டிருந்தார்
திருவிழா வலம் முடிந்து திரும்பிய உற்சவர்- தன்
இரு மனைவிகளுக்கும் பயந்து
முகத்தை மூடிக்கொண்டு ....................

........................................................................X.....................................................................................


கோவிலுக்கு எதிரில் ஆடை அவிழ்ப்பு நடனமா ....?
பொருமிக் கொண்டிருந்தான் - Rs 6000/-
கொடுத்து நிர்வான நடனம்
Pattaya-வில் பார்த்து வந்த என் நண்பன் .......................

.............................................................X.........................................................................................

Comments

Known Stranger said…
nalla oru padaipu. for each post you can give different title and make it different post
Kavidhai superb!
Eduthirukkira kalam ellam romba edharthamaa surukkama narambula oosi kuthira madhiri irukku....

If you read variety of books and articles more you can reach next levels.sorry! can touch many heights!

Andha vimarsanam dhaan konjam gavanama vaarthaiyellam therndheduthu ezhudhi irukkalam....
Even though it has come from your heart without polished words, when it comes to public, it should be reviewed and reviewed etc and should be published... This is the comment which I wanted to make from my heart!

Wish you all the best!
Afiya said…
Poor Vadivelu! if he read your blog , he surely come out of his misunderstanding as he compares himself with Vishal and other heroes of Tamil Industry