கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---8

பதங்கமாகி…….
----------------------------------------------------------------
மரணம் வந்து
மரித்து போன _ஒரு
மாலை வேலையில் எழுத முடியாமல் போகலாம்
இது போன்ற ஒரு கவிதை
மாலை நேரத்தில்…..
------ <> ------
சொல்லிவிட்டு போவது தான்
தமிழனின் மரபு
போகும் முன் சொல்லி விடுகிறேன்
தமிழனாய்…
இறந்த போதும்..(இதை வினை சொல்லில் படிக்கவும்…)
------ <> ------
வேகமாய் என்னை கடந்து போகும்_பேருந்தின்
சக்கரத்தில் ஒட்டிய
சதைக் கூழமாய்….
சற்று முன் பச்சை விளக்கை கடந்த
இரயிலின் முன்புற விளக்கின் கண்ணாடியில்
இரத்த சிவப்பாய்….
நேற்று முன் தினம் மின்சாரத்தில் கருகிப்போன
நானின் மாமிச வாடை
இந்த மூடிய கதவுகளுக்கிடையில் கசிந்து….
------ <> ------
உயிராய் உடலாய் நான்
உயிர் பிரியும் போது
உடலும் பிரிய வேன்டும்
_யார் கண்ணிலும் படாமல்
பதங்கமாதல் போல…….
இது பதங்கமாகாமல் போனவனின் கடைசி ஆசை…
------ <> ------
எப்போது நிற்கும்
இடை விடாது ஓடிக் கொன்டிருக்கும்
ஓய்வு விரும்பும்
மரணத்தை “தொட்டு” சொல்லிவிட்டு செல்லும்
கூடிய விரைவில் நிகழும்
_என சுவற்று பல்லியாய்
கட்டியம் கூறும்..
பாவப்பட்ட எனது இரு சக்கர வாகனமும்
துள்ளி… துள்ளி… ஓடும் எனது இதயமும்
என்னை புரிந்தவாறே……..
------ <> ------

கொசு
பளிரென அடித்து
வயிற்று இரத்தம்
பார்த்தவுடன்தான் திருப்தி அடைந்தேன்
கயிற்று சுருக்கு கழுத்தை நெறிக்கும் போதும்
முழுதாய், இரத்ததுடன் சாகத்தான்
எத்தனை ஆசை……
------ <> ------
நீளமாய்
குறுக்கும், நெடுக்காய்
குறுக்கு, நெடுக்கு, நீளமாய்….
கடந்த வாரம் வாங்கி வந்த காய்கறி
வெட்டும் உபகரணத்தால்…
அழகாய் வெட்டி பரிமாற வேன்டும்
எனது அழகான………
பருத்த………..
நீளமான ……………
கடவுளை பழி வாங்க
இதை விட வேறு வழி தெரியவில்லை…
------ <> ------

பசிக்கு உணவில்லை என் வாழ்க்கையில்
உனவு கிடைக்கும் போதுதான் பசியும்…
வேன்டிகொள்கிறேன்
அத்தியவசியமான மரணம்
அவசியமான தருனங்களில்-மீதமிருக்கும்
சில நொடிப் பொழுது வாழ்க்கையிலாவது…
பசிக்கு உணவு போல..
------ <> ------

இந்த பக்கமாய் நீங்கள் வரும்போது
சந்திப்போம்
வீடு
சுடுகாட்டு மதிலுகள் தாண்டி இந்த பக்கம்…..



(திரு) அமரன் மனுஷம்

Comments

Known Stranger said…
hmmmmmm oru periya hmmmmmm veru enna solla