Friday, January 4, 2008

கடிதம் எழுதுவோம்




கடிதம் எழுதுவோம்
நம் சந்தோழங்களை.........
நம் தனிமை யை.....
நம் வலிகளை.....
கடித மாக................. கடிதம் எழுதுவோம்.,

வியர்வை ஊற்றி...
இரத்தம் ஊற்றி..
கண்ணீர் ஊற்றி-
இவை ஆனதும் தீர்ந்து போகயில்.....
சிறிதே நீல மை ஊற்றி....கடிதம் எழுதுவோம்.,

தபால் அலுவலகம் நடந்து சென்று.....
செட்டியார் கடையில் கடிதம் வாங்கி
எச்சில் தொட்டு தபால் தலை ஒட்டி...
கட்டை விரல் நீல மையி தலயில் தடவி.....
கடிதம் எழுதுவோம்.,

முதல் தீண்டல்...
முதல் முத்தம்...
முதல் காதல் மட்டு மல்ல.........
முதல் கடிதமும் மறக்க முடியாததே....கடிதம் எழுதுவோம்....

இன்றே
இப்போதே தொடங்குவோம்- ஒரு கடிதம் எழுதும் இயக்கம்
இவ்வளவு வேலை யிலும்
வேதனை யிலும்..
பயணத்திலும்
அவசரத்திலும்...
ஒரு கை கடிதம் எழுதும் இயக்கம்

இந்த மின் அஞ்சல் மூலமாக............கடிதம் எழுதுவோம்.

Thursday, January 3, 2008

என் கவிதைகள்.........

எனது தனிமைக்கும்
எனது வலிகளுக்கும் பிறந்தவைகளே.............
என் கவிதைகள்.- இப்போது உன்ணாலும்.
யார் நீ..?
என் தனிமையா...?
என் வலி யா..?




--------------------------------------

தோழி.......
பிரிவோம்........
மீண்டும் சந்திப்பதற்கு அல்ல.............
என்றோ பிரிவதற்கு---இன்றே பிரிவோம்.

---------------------------------------------------------------

My lattest...

எதிரி ....................
எதிரி நீ
எதிரில் இருந்தால் உன்னை
கொன்று புதைத்திருப்பேன் -உன்
இரு செவிகளையும் நிரைத்திருப்பேன்
தமிழில் உள்ள எல்லா கெட்ட வார்த்தைககளாலும் ................

அத்தனை கோவம் உன் மீது..
தலை மூழ்கி விடவும் முடிவெடுத்து இருந்தேன்
எல்லா வற்றையும் உடைத்ெறிந்து என்னை பரிகாசம் செய்கிறது
உன் வாழ்த்துக் கடிதத்தின் அந்த ஒற்றை வார்த்தை


செல்லம்......


நான் தயார் பெண்ணே இந்த நரகத்தில் வாழ்வதார்க்கு
இனியும் என்னை இப்படி அழைப்பாய் எனில்........


ஆசயன்

கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---9


கழுதயொ................

குதிரயொ....................................

ஏதோ ஒரு பொண்ணு......

சீக்கிரம் கல்யாணத்த முடிங்க ......

சமீபத்தில் எனக்கு கிடைத்த திருமண அறிவுரைகளில் ஒன்று....

உறக்கமில்லா நடுநிசிகளில் தேவைப்படுகிறது......................

அழகான,

அறிவான,

புத்திசாலியான

எனக்கான பெண்ணல்ல.....

கழுதயொ................

குதிரயொ....................................

-------------------------------------------------------------

முன் இருக்கைப் பெண்ணொருத்தி -சற்று

முன் தன் கைக்குழைந்தைக்கு

கொடுத்த தாய்ப் பால் வாடை பாடம் புகட்டி செல்கிறது.....

இந்த வயதில் நான் இழந்து கொண்டிருக்கும் தந்தை- துவைத்தை
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

---------------------------------------------------------------------

திருமயிலை திருக்கோவில்

தினம் ஐந்து நெய் விளக்குகள்

பதினாறு சுற்றுகள்

நாற்பத்து எட்டு நாட்கள்

இன்றோடு முப்பத்தி மூணாவது நாள்
பாவம் தெய்வமும், அம்மாவும்.
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

---------------------------------------------------------------------------

எங்கே பார்ப்பது பெண்ணை - முதல் சந்திப்பில்... ?

முகத்தை மட்டும், ............. முகம் தவிர .........

இடை மட்டும் ...........இடை தவிர.........

பாதம் மட்டும்............. பாதம் தவிர........

எங்கே பார்ப்பது.......... பெண்ணை முதல் சந்திப்பில்..?. -
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

--------------------------------------------------------------------------

படிக்கட்டு முகட்டில் தொட்டுச் சென்ற

முகம் தெரியாப் பெண்ணின் கைச் சூடு.....

இரு சக்கர வாகனம் ஓட்ட விடாத
பின்னிறுக்கை பெண்ணின் உடல் சூடு...

ஒளித்து வைத்து படித்த புத்தகத்து
கதா நாயகியின் பெரு மூச்சுக் காற்றின் சூடு......-


தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

----------------------------------------------------------------------

மென் பொருள் வல்லுணரோ

வங்கி அதிகாரியோ

கல்லூரி ஆசிரியையோ

அரசு அதிகாரியோ

பள்ளி ஆசிரியாரோ

பத்தாவது படித்தவறோ

எழுத படிக்க தெரியுமோ......-
தேவை, கழுதயொ................

குதிரயொ...............................

------------------------------------------------------------------------

உங்களுக்கும் தெரிந்தால் சொல்லுங்கள்- புண்ணியம்

உங்கள் வாரிசு களுக்கு.....................

ஒரு மணப்பெண் எனக்கு....

படித்த பெண் வேண்டாம்....

வேலைக்கு செல்லும் பெண் வேண்டாம்...

நல்ல குடும்பம் வேண்டாம்...

ஒழுக்கம் வேண்டாம்..

அழகு வேண்டாம்.....- கண்டிப்பாக

தேவை, நல்ல கழுதயொ................

நல்ல குதிரயொ...............................

ஆசையன்15-09-07

me


கொஞ்சம் கனவு.....
நிற ய ஆசை........

கொஞ்சம் நம்பிக்கை....
நிற ய ஆசை........

கொஞ்சம் எதிர் பார்ப்பு......
நிற ய ஆசை........

கொஞ்சம் வாழ்க்கை....
நிற ய ஆசை........

கொஞ்சம் வெங்கட்...
நிற ய ஆ சையன்...

என்னை பற்றி.....

முதல்ல என்னை பற்றி உள்ள முதல் பக்கத்த படிங்க....போக போக நீங்களே தெரிஞ்சுக்குவீங்க.....முதல் எழுத்த்ு பா...கன்னி முயற்சி....நிற ய சொல்கிறேன் பிறகு...

பார்த்ததில் பிடித்தது....