Friday, March 28, 2008

ரோஸ் என்னும் திருநங்கை .........


சில வாரங்களுக்கு முன் மக்கள் தொலைக் காட்சியில் இந்த திருநங்கையை நேர் காணல் செய்த ஆணாதிக்கம் கொண்ட, வயதான வெள்ளை வேட்டி பெரியவருக்கு சமர்ப்பனம் இந்த கட்டுரை …..

இப்படிக்கு ரோஸ்….விஜய் தொலைக் காட்சி..வியாழன் இரவு 10 மணிக்கு…

இரவு மணி 10…மாத்ருபூதங்கலையும்,ஷர்மிலாக்களையும் நமக்கு அறிமுகப்படுதிய விஜய் தொ.கா இருந்து மற்றுமொறு மிட் நைட் மசாலா/பாலியல் கல்வி…….உங்களுக்கு எது வசதியோ அந்த பெயரில் ஒரு நிகழ்ச்சி….

ரோஸ் என்னும் ஒரு திருநங்கை…தொகுப்பாளினியாக. இந்நிகழ்ச்சி தமிழ் கலாசாரத்தை அழிப்பதாக ஒரு வலைத் தலத்தில் ஒரு தமிழன் எழுதியதை படித்து தான் தெரிந்து கொன்டேன். இந்நிகழ்ச்சியை….

ஆம் இது கலாச்சார சீரழிவுதான்…
எட்டு மணிக்கு மழை நடனம் குடும்பத்தோடு ரசிக்கும் நமக்கு…
50 வயது அம்மணி நடு அரங்கில் குத்தாட்டம் போடுவதை
குடும்பத்தோடு ரசிக்கும் நமக்கு…
ஐ லவ் யு மச்சா………….க்கு ஏங்கும் நமக்கு…
ஆம்…… இது கலாச்சார சீரழிவுதான்…

இரவு 10 மணி என்ற போதே target audience-ம் Targeted message-ம் புரிபட்டு விடுகிறது….

கதாநாயகியின் கழுத்தில் ஒரு மஞ்சள் கயிறு மட்டும் கட்டி விட்டு அவளை எத்தனை ஆபாசமாக வேண்டுமானலும் சித்தரிக்கலாம் என்ற வெள்ளித் திரையின் மரபுப் படி …சின்னத் திரையில் sex education என்ற பெயரில் இப்படி ஒரு நிகழ்ச்சி…

இந்த தராசின்படி நியாயப் படுத்தப் பட்டன…BPO இரவு நேர லீலைகள்,காமம்,Dating..Partying, மற்றும் நேற்று இரவு நடந்த சல்லாபங்களின் வர்ணனை ஒரு BPO பெண்ணிடமிருந்து நேரலையாய்…

மூன்றாவது நடுவராய் பெண்ணியத்தை ஆதரித்தே தீருவது என்ற முடிவுடன் ஒரு பெண் மனோதத்துவ நிபுணர்….ஆரஞ்சு நிற குர்தாவில்…Dr.ருத்ரணிஸம் பேசிக்கொண்டே…

Rose BE,MS(USA)., வருக திரு நங்கைகளின் அடையாளமே. உமக்கு கொடுக்கப் பட்ட ஆணைகளுக்கேற்ப்ப கால் மேல் கால் இட்டமர்ந்து…(பாதுகாப்பின்மையின் அடையாளம் உனக்குமா.. …?)
மார்பக மேடு பள்ளங்களை காட்ட அடிக்கடி குனிந்து…
அழகாய் சிரித்து மயக்கும் விதமாய் பேசி…
பரிதாபமாய் இருக்கிறது திருனநங்கையரின் நிலை….
இரயிலில் கை தட்டுவோர்…
கடைத் தெருவில் வழி மறிப்போர்…
மெரினாவில் வியாபாரமா(க்கு)வோர்....
இப்போது விஜய் தொ.கா நீயும்….

என்று கிடைக்கப் போகிறது விடுதலை
என் குல திரு நங்கைகளுக்கு……….

நிகழ்ச்சிக்கு வருவோம்.,IT Industry & Immoral Sex இது தான் நிகழ்ச்சிக் கரு. எல்லோரும் நல்லவர்தாம் _ வாய்ப்பு கிடைக்காதவரை.,எல்லோரும் உத்தமர்தாம் _ திருட்டு அம்பலமாகும்வரை…

தீர்வுதான் என்ன…?இரவு நேர பணிக்கு தன் மனைவியை, தன் தமக்கையை, தன் மகளை
அனுப்ப மறுக்கும் பெற்றோராய், அவர்களின் சம்பளத்தை மதிக்காத பெற்றோராய் இருப்பது ஒன்றே தீர்வு.இது தற்காலிகமே என்றாலும்..

Rose சொல்வதுபோல..இரவு என்பது காமத்திற்க்கும்,பகிற்தலுக்கான நேரம், எதிர் பாலினத்தின் அழகான அருகாமை., பணம், வாய்ப்பு,
i-Pill, இவை எல்லாவற்றயும் வீழ்த்தி வீறு நடை போடும்
தமிழ்த் தலைமுறையை எதிர்பார்ப்போம்-ஏமாற்றங்களை பற்றி கவலைப்படாமல்…

நடைமுறை வாழ்க்கை வாழ்வோருக்கு-நாளை முதல்
இப்படிக்கு வாடாமல்லி….சன் தொலைக் காட்சி..வியழன் இரவு 10 மணிக்கு, இப்படிக்கு காகிதப் பூ..கலைஞர் தொலைக் காட்சி..வியழன் இரவு 10 மணிக்கு…எதிர்பார்ப்போம்-வெகு விரைவில்….

மனுஷம்
மார்சு 26,2008






Sunday, March 23, 2008

கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---7

என் சகதர்மினிக்கு ………
-------------------------------------------------------------------------

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
எங்கே போனது எந்தன் இரவுகள்….

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
எஞ்சி இருப்பது எத்தனை இரவுகள்….

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
விடிந்து போனவை எத்தனை இரவுகள்….

எத்தனை இரவுகள்….எத்தனை இரவுகள்….
விடியாமல் போனவை எத்தனை இரவுகள்….
--------<>-----------

என்னை வென்று சென்றவளின்- வெற்றிக்கு
அவள் தகுதியானவள் தான்..-எனெனில்
தோற்றது நான்….-பெருமைப் படுகிறேன்
இந்த தோல்விக்காகவும்
அந்த வெற்றிக்காகவும்……
--------<>-----------
I Know What Know _ But
I don’t know what I don’t know
--------<>-----------
நடு முதுகுக்கு நடுவில் _ கைக்கெட்டா தூரத்தில்
அந்த அழகான அழுக்கு ஒட்டிக் கொன்டிருக்கிறது
(நடு முதுகு மச்சம் நல்லதுடா-அம்மாவின் குரல் அடுப்படியிலிருந்து…..)
காத்துக் கொன்டிருக்கிறோம்
நானும்_ அந்த அழுக்கும்
நீ வந்து முதுகு தேய்த்து விடும்_ நன் நாளை நோக்கி

--------<>-----------

உணவு எடுக்க வரும் எல்லா
சிறு மீன்களையும் விரட்டுகிரது- சட்டாம்பிள்ளை
அந்த கறுப்பு தேவதை
கொன்று விடட்டுமா என்ற கேட்டதற்க்கு
வேண்டாம் என்கின்றன இந்த குட்டி மீன்கள்..
நீ யார் பக்கம் என் சகதர்மினி…?
--------<>-----------

எல்லா கவிதைகளையும்
ஒன்றன் பின் ஒன்றாக
ஒரே மொழியில்
இருக்க வேன்டுமா என்ன…?

Snapshots

postmodernism

surrealism
Montage
Collage
Modern Art _ வரிசையில்
இதோ என் கோவிதாபம்..

புரிந்தவர்கள் சிந்தியுங்கள் அமைதியாய்…….
புரியாதவர்கள் பாராட்டி பேசுங்கள் சத்தமாய்…

எந்த கருத்துமின்றி வாசகனாய் _ நான்
வெளி இல்லா வெளி ஆளாய்….

பார்வையாளனாய் வேடிக்கை பார்ப்பவர்களை பற்றி
எனக்கு கவலை இல்லை……

“Hope you are not the One”
--------<>-----------

இளைப்பாற வேன்டும் _ சிறிதே
நீயும் சற்று உலர்ந்தெழு..
மற்றொறு நாள் சந்திப்போம்
மலர்ச்சியாய்…..

A/C Chaircar-இல் சுஜாதாவின் கணயாழியின் கடைசிப் பக்கம்……..


நீலக் கலர் இரயில் இருக்கையில்- இருக்கயில்
இருந்த சில்லிப்பு…
சற்று முன்பே எழுந்து சென்ற போதும்…

பக்கத்து இருக்கை தம்பதியின்
பகிறங்க பகல் நேர உடல் உறவு
அனைத்து- அனைத்து ஆடைகளுடன்
எல்லார் மத்தியிலும்
கையோடு கை சேர்த்து
தோளோடு தோல் சேர்த்து…
உறங்கும்போது தலை சாய்க்காமல் _ தோளில்
தோளில் தலை சாய்ப்பதற்க்காக உறங்கிக் கொன்டு
உறங்காமல்…..

நேற்று நேர்த்திக் கடன் முடித்து
முருக வேலின் வேல் தூக்கிய வலி _ இரு தோள்களிலும்
உறங்காமல் நடந்த கால்கள் அயராத உறக்கம் வேண்டும்
பிடிவாதமாய் தூங்க விடத _ பின் புற அழகு குழந்தையின்
பிடிவாதத்தின் வீரு கொன்ட பேறிரைச்சல்

இவற்றிற்க்கு இடையே வேறு வழியின்றி
படிக்கத் தொடங்கியது தான்- இப்புத்தகம்
ஒரு அதி மேதாவியின் வரிகளுக்குள்-இந்த
அதி மேதாவியை அடையாளம் கண்டுகொன்ட
இனம் காணலில்(கானலில்) மூழ்கி
சுகித்து…
சிரித்து….
ரசித்து….
மகிழ்ந்து….
போகித்து…
பகிற முடியாமல்- எதிராளியிடம்
கழிவிரக்கத்துடன்
உச்ச நிலை அடைந்து _ முடிவு கன்டு
முழுத் திருப்தி அடைந்தவுடன் வெட்கமில்லாமல்
படிக்க தொடங்கினேன் மீண்டும் _ சுய
இன்பம் செய்வதை போல
நாற்றமடிக்காமல்…
ஈரமாக்காமல்…..

மழைத் துளியின் திசை…

கிழக்கு….
மேற்கு….
வடக்கு….
தெற்கு….

தென் கிழக்கு பருவ மழை….
வட கிழக்கு பருவ மழை….
தென் மேற்கு பருவ மழை….
வட மேற்கு பருவ மழை….


எந்த திசையயையும்
எத்தனை முறை பார்த்தாலும்
திசை கான முடிவதில்லை

சற்று முன் என் முகத்தில் பட்டு தெரித்த
மழைத்துளியின்
ஆதியும்
அந்தமும்
அதன் திசையும்…….

உச்சி வெய்யிலில் ஒரு நாள்….



குட்டை தண்ணீர்
இரன்டு நாளில் வற்றி விடும்

வயிற்றை கலக்கியது…..
குட்டை மீன்களுக்கும்

வயிற்றை கலக்கியதால்
கால் கழுக வந்தவனுக்கும்….

எழுத்தாளனா(க்)கிய நான்….


எப்போதும் யாரோ-உடைந்த
சிலேட்டு பலகையில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதை போல ………..

கை பிடித்து
கையில் எழுது கோல் பிடித்து
காதலியின் வாஞ்சனையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல………

அழகான கருவை எழுதி முடிக்கும் முன்
இறந்து போன அற்ப அயுசு கவிஞனின்-ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல….
பயமாய்-ஆனால் கையெழுத்து தெளிவாய் கிறுக்காமல்….

என் எல்லா கவிதைகளையும் _ மொத்தத்தில்
நான் எழுதாமல் யாருடயதாகவோ…….
மாற்றான் மனைவியாய் _ எப்பொழுதும் அழகாய்…
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….

இந்த கவிதையையும் சேர்த்து _ ஆனாலும்
எழுதிக்கொன்டு இருக்கிறேன்
நிறுத்த முடியாமல்…..

மனுஷம்

கோ.. வி.. தா.. ப.. ம்……. பாகம் ---8

பதங்கமாகி…….
----------------------------------------------------------------
மரணம் வந்து
மரித்து போன _ஒரு
மாலை வேலையில் எழுத முடியாமல் போகலாம்
இது போன்ற ஒரு கவிதை
மாலை நேரத்தில்…..
------ <> ------
சொல்லிவிட்டு போவது தான்
தமிழனின் மரபு
போகும் முன் சொல்லி விடுகிறேன்
தமிழனாய்…
இறந்த போதும்..(இதை வினை சொல்லில் படிக்கவும்…)
------ <> ------
வேகமாய் என்னை கடந்து போகும்_பேருந்தின்
சக்கரத்தில் ஒட்டிய
சதைக் கூழமாய்….
சற்று முன் பச்சை விளக்கை கடந்த
இரயிலின் முன்புற விளக்கின் கண்ணாடியில்
இரத்த சிவப்பாய்….
நேற்று முன் தினம் மின்சாரத்தில் கருகிப்போன
நானின் மாமிச வாடை
இந்த மூடிய கதவுகளுக்கிடையில் கசிந்து….
------ <> ------
உயிராய் உடலாய் நான்
உயிர் பிரியும் போது
உடலும் பிரிய வேன்டும்
_யார் கண்ணிலும் படாமல்
பதங்கமாதல் போல…….
இது பதங்கமாகாமல் போனவனின் கடைசி ஆசை…
------ <> ------
எப்போது நிற்கும்
இடை விடாது ஓடிக் கொன்டிருக்கும்
ஓய்வு விரும்பும்
மரணத்தை “தொட்டு” சொல்லிவிட்டு செல்லும்
கூடிய விரைவில் நிகழும்
_என சுவற்று பல்லியாய்
கட்டியம் கூறும்..
பாவப்பட்ட எனது இரு சக்கர வாகனமும்
துள்ளி… துள்ளி… ஓடும் எனது இதயமும்
என்னை புரிந்தவாறே……..
------ <> ------

கொசு
பளிரென அடித்து
வயிற்று இரத்தம்
பார்த்தவுடன்தான் திருப்தி அடைந்தேன்
கயிற்று சுருக்கு கழுத்தை நெறிக்கும் போதும்
முழுதாய், இரத்ததுடன் சாகத்தான்
எத்தனை ஆசை……
------ <> ------
நீளமாய்
குறுக்கும், நெடுக்காய்
குறுக்கு, நெடுக்கு, நீளமாய்….
கடந்த வாரம் வாங்கி வந்த காய்கறி
வெட்டும் உபகரணத்தால்…
அழகாய் வெட்டி பரிமாற வேன்டும்
எனது அழகான………
பருத்த………..
நீளமான ……………
கடவுளை பழி வாங்க
இதை விட வேறு வழி தெரியவில்லை…
------ <> ------

பசிக்கு உணவில்லை என் வாழ்க்கையில்
உனவு கிடைக்கும் போதுதான் பசியும்…
வேன்டிகொள்கிறேன்
அத்தியவசியமான மரணம்
அவசியமான தருனங்களில்-மீதமிருக்கும்
சில நொடிப் பொழுது வாழ்க்கையிலாவது…
பசிக்கு உணவு போல..
------ <> ------

இந்த பக்கமாய் நீங்கள் வரும்போது
சந்திப்போம்
வீடு
சுடுகாட்டு மதிலுகள் தாண்டி இந்த பக்கம்…..



(திரு) அமரன் மனுஷம்

Saturday, March 22, 2008

என் கடந்தவார நாட் குறிப்பில் இருந்து......


இரு கை தேய்த்து விழிப்பு..

குளியல் முடித்து ஹநுமந் கோவில்



அம்மாவின் நிறைய திட்டுகளும்,

இரண்டு இட்டிலிகளுடன் உணவு ...



காலையில்

டேக் கார்டு -பிரெண்ச் திரைப்படம் சத்தியம் திரை வளாகத்தில்



தாலப்பா கட்டு கோழி பிரியாணி

போலந்து நாட்டு திரைப்படம் -தென் இந்திய திரைப்பட வர்த்தக சங்கம் மாலையில்...




அருணாசால இன் -இல் செங் பைபர் ஒரு குப்பி

பேசண்ட் நகர் பேவாட்ச்-இல் இத்தாலிய பாஸ்தா

இரவில்.....



அர்ச்சனைகளுடன் அம்மா

பாதி உறக்கத்தில் கதவு திறந்துவிட்டு...... நடு இரவில்



ஆனந்தமாய் என் இடுப்பை கட்டிப்பிடித்து

என் மீது கால் தூக்கி போட்டுக்கொண்டு


ஏதேதோ உளறிக்கொண்டு...

நாள் முழுதும் ........


நானும் ,இனம் தெரியா வெற்றிடமாய்

அந்த தனிமையும்........




மனுஷம்








திருமணம் பற்றி என்னுள்லும், நானும்...........


இளமை மறைந்து
இனிமை மறந்து
நினைவு மருத்து
உலகம் புரிந்து
வாழ்க்கை தெளிந்து
முதுமையில் மூச்சிறைத்து
திரும்பி பார்க்கும் போது ....
ஆதரவாய் தலை சாய தோள் கொடுக்க வேண்டும் ஒரு துணை - வாழ்க்கை துணை....

ஆணவம்
அகம்(-) பாவம்
நான்....
எனக்காக.....
எனக்கு மட்டும்......
இது எல்லாவற்றையும் விட்டு கொடுத்துத்தான் பாரேன்......?
உனக்கு பிடித்த எதிர்பால்நிடத்தில்..

வாழ்க்க துணை என்ற போர்வையில்....
திருமணம் என்ற கயிறு கட்டி.....
மூச்சு முட்டும் வரை. .....

துணை - எப்போதும் சுகம் தான்
வாழ்க்கை துணை முதல்
வழித் துணை வரை- நான்கு பேர் என்றாலும்..

மனிதன் எவ்வளவு உயர்ந்தாலும் -
எப்போதும் வெற்றி என்னவோ இயற்கைக்குத்தான்.
சங்கமமே இயற்கை....
சங்கமம் என்பது முற்றுப்புள்ளி அல்ல...
ஒரு பெரிய கோட்டின் முதல் புள்ளி.....

வா சங்கமிப்போம் - இந்த சமுதாயத்தில்
உனக்கான ஆடவனோடும்,
எனக்கான பெண்மணியோடும்.........
மரணம் கூட சுகமானது
உன்னுள் என்கோபம்..
ஆணவம்..
அகம்பாவம் எல்லாவற்றையும் கொன்று(தற்கொலயாய் இருப்பினும் .....)
புதைக்கும்போது........


மரணம் கூட சுகமானது ....
திருமணம் பற்றி என்னுள்லும், நானும்...........

மனுஷம்

பார்த்ததில் பிடித்தது....