Friday, March 21, 2014

அப்பாக்களின் ஆதங்கம்....................







எங்க வீட்டு

- கொர கொர  (ஓட்ட) ரேடியோவ விட- சரோஜாக்கா
  வீட்டு (மர்பி) ரேடியோலதான் எப்பவும்
  பாட்டு நல்லாந்துருக்கு...


- திண்டிவனம் வாத்தியார்ட்ட வாங்கின ரெட்டை ஸ்பீக்கர்
  டேப் ரெகார்ட விட - எதுத்த  வீட்டு பிலிப்ஸ் செட்ல தான்
  விதி கதை வசனம் தெளிவா கேட்டது....


-பெங்களூர்ல வாங்கின புஷ் டிவிய விட பஞ்சாயத்து டி.வி லதான் - படம்  நல்லா தெரிஞ்சுது (கருப்பு வெள்ளையாய்)
 அந்த பெரிய ஆன்டென்னாவை, எப்படி திருப்பினாலும்



- தீபாவளி போன்ஸ்ல வாங்கின கலர் டி.வி யா விட சித்தி வீட்டு பிளட் டி.வி படம் பளிச்சின்னு தெரியுது- இப்பவும்



இவை எல்லாம் கடந்து சென்ற சில நொடிகளில்

- என் அப்பா தத்தாவாகி இருந்தார்

- நான் அப்பாவாகி இருக்கிறேன்

- என் மகள் எங்கள் வீட்டு LED டி.வி பிடிக்காமல் -தன்

பெரியம்மா வீட்டு 59’’ 4K -இல் Twenty Twenty உலகக்கோப்பை காணச் சென்றுகொண்டிருக்கிறாள்


பார்த்ததில் பிடித்தது....