Sunday, February 17, 2008

TAARE ZAMIN PAR...A review by a tamilan

இந்த வார திரைப்படம்…………….

ஒரு குப்பி பியருக்கும், தலப்பாக்கட்டு கோழி பிரியானிக்கும் இந்த ஞாயிரை பலி கொடுக்க மனமின்றி , அன்னன் மகளை அழைத்துக் கொன்டு இந்த திரைப் படம் சென்று இருந் தேன் …

அழகான, எளிமையான கதை,அதை தொடர்ந்து பெட்டை கோழியய் தொடர்ந்து செல்லும் சிறு கோழிகளாய் அந்த திரைக் கதையும், மட்றவைகளும்…..

வார்த்தைகளும் எண்களும் கண்ணாடி பிம்பமாய் தெரியும் நோய் உடைய சிறுவனும், இது தெறியாத அவனது சுற்றமும் , இதனால் அவன் கல்வியில் எதிர்கொள்ளும் சவால் களுமே கதைக் களம்...

இந்த கருவை படத்தின் ஆரம்ப காட்சியாக வைத்திருக்கும் இயக்குனருக்கு மனமார்ந்த பாராட்டுகள்...
இவ்வளவு அழகான கதைக்கு அதை விட அழகாய் கதை நாயகன். அவனை விட அழகாய் துருத்தி கொண்டிருக்கும் முன் பற்கள்...

தமிழ் திரைப்பட பஞ்ச் டயலாக் பசங்க இந்த படத்த பாக்கணும் கண்டிப்பா..முக்கியமா நம்ம பரத்தும், வடிவேலும் .............இல்லன பாம்பே போய் இவன்கிட்ட ஒரு மாசம் பாடம் படிக்கட்டும், நடிப்ப பத்தி...

இவனுக்குள்ள இருக்கற வியாதிய மட்டுமில்ல , ஒரு ஓவியனையும் கண்டுபிக்க வர்றாரு நம்ம இயக்குனறு, நடிகரு அமிர்கான் சாரு.. அப்பறமென்ன அவனையும் அவன் நோயையும் குணப்படுத்தி ஒரு ஓவிய போட்டியில முதல் பரிசையும் வாங்க வைக்கறாரு , ஒரு நல்ல குருவா..


இந்த வித்தியாசமான கதைக்கு உலகத்தரமான தகுதின்னா ...
1.ஒளிப்பதிவாளர்-அநேகமா இவரு நம்ம P C Sriram சாரோட மாணவனாத் தான் இருக்கணும்.நிறைய காட்சிகள்ல இது ஹாலிவுட் படம் பாக்கற ஒரு நினைப்பு...
2.குட்டி பயல் - இந்த ஆண்டின் சிறந்த (குழந்தை ) நட்சத்திரம்...
3.அமீர்கான் என்ற இயக்குனர் – நிருபித்து விட்டீர்கள் தலைவா…..தலைக்கு தலை வணங்கிக்றோம் ……

அடி தடி இல்லாமகுத்து பாட்டு இல்லாமநாலு பைட்டு, ஆறு பாட்டு இல்லாமகுடும்ப தோட படம் பாக்கணுமா..தாராளமா போங்க தெளிவா வாங்க ................ஹிந்தி எதிர்ப்பாளர் கள பத்தி கவலைப்படாதிங்க ....இடைவேளைல கோக் வாங்க உங்களுக்கு முன்ன நின்னாலும் நிப்பாங்க...அவங்க குடும்பத்தோட...

Saturday, February 2, 2008

இந்திர லோகத்தில் நா அழகப்பன்..

இந்திர லோகத்தில் நா அழகப்பன்...----------------------------------------------------

ஐயோ , ஐயோ என்னத்த சொல்ல எப்படி சொல்ல...பேரரசு ரஜினிக்காக பண்ண கத மாதிரி இருக்கு..என்ன ஒரு ஆரம்பம் ...எங்க ஊரு தெரு நாடகம் பாத்த மாதிரி ..எத்தன வடிவேலு ,எத்தன நடிப்பு. ஐயோ, ஐயோ .........

சிரிப்பு படம்னு பாக்க போன , அசிங்கமல்ல இருக்கு..குழுந்தைகள கெடுக்காதிங்கடா.கதையா ...? அதெல்லாம் கேக்க கூடாது... வடிவேலு கேக்கல.,மாணிக்கம் நாராயணன் கேக்கல..நீங்க எதுக்கு கேக்கறிங்க.. தப்பு தப்பு ..படம் அரம்ப்திச்ச உடனே ரஜினி வராரு, MGR வர்றாரு, கடைசியா சிவாஜி வர்றாரு , அனா நம்ம வைகை புயல் வடிவேலும் வரல, சிரிப்பும் வரல...



மதுர வடிவேலு தவறுதலா இந்த்ர லோக ரம்பைக்கு மால போட்டதுநல, ரம்பா அவர இந்த்ர லோகத்துக்கு கடத்திட்டு போய்டுத்து...காலைல பூலோகம், ராத்திரில இன்றலோகம் இதாம் கதை களம் ....

ஒரு வரி நல்ல தாம் இருக்கு , ஆனா மூணு மணி நேரம், செம கடிப்பா...படத்துல ஒரே ஒரு விசயம் நல்லா இருக்கு, நம்ம ஷ்ரேயா அக்காவோட பாத்திர படைப்பும், நடனமும்.அப்புறம் நம்ம கலை இயக்குனர் தொட்ட தாரணி ஐயா வோட வேல..

இசை யாருன்னு பக்கல, அதுக்கு அவசியமும் இல்ல..படையப்பா ரஜினி மாதிரி வடிவேலுக்கு நிறைய நண்பர்கள் ,அப்ப அப்ப ..வேற என்ன சொல்ல ..

புராண படத்துக்கு ஏத்த மாதிரி ஒரே பாட்டு, ரம்பா ஊர்வசி யோட அசிங்க பாட்டு படம் முழுவதும் .தண்ணி அடிச்சிட்டு ஷகிலா படத்துக்கு டிக்கெட் கேடைக்கலன்ன இந்த படத்துக்கு போலாமே தவிர, தயவு செஞ்சி குழந்தைகளை கூட்டிட்டு ....போக வேண்டாம்.

தம்பி ரமையவுக்கா ....? நா என்ன சொல்ல ...!அதன் ஒரு காட்சில வடிவேலு அண்ணனே கால்ல போட்டு மிதி மிதி ன்னு மிதிசிட்டாருள்ள ..அப்புறம் நாம வேற எதுக்கு...

வேற என்ன ,அடுத்து வார அனந்த விகடன்ல 43 மதிப்பெண் போடுவான்..என்ன பண்ண அவனுக்கும் தமிழ் சினிமாவ பகச்சிக்க முடியாதுல்ல....

வாழ்க தமிழ்வாழ்க
தமிழ் திரைப்படங்கள்....

post scrap cancel

Friday, February 1, 2008

அழகா....அழுக்கா



அழகா....அழுக்கா
எதை சொல்வேன்
அக அழக யா?
புற அழக யா?
அகம் அழகென்றாள்...புறமும் அழகே....
அகம் அழுக்கென்றாள்..புறமும் அழுக்கே...

அழுக்கும் அழ கை போன்றே - காண்பவரை பொருத்த து.....
எனக்கு அழகாய் தெரிவது உங்களுக்கு அழுக்கு....
எனக்கு அழுக்காய் தெரிவது உங்களுக்கு அழகு.....

அழகா....அழுக்கா என்பதல்ல
நீ யார்.....நான் யார்... என்பதே அழகைய் நிர்ணயிக்கிறது......

திருவிழா முடிந்து திரும்பியபோது..........



திருவிழா முடிந்து திரும்பியபோது.............
.....................................X....................................

திருவிழாவில் எதிர்படும்-என்
இளைத்துப்போன ஆசிரியரிடமும்......
கைக் குழைந்தையோடு வந்த ஏழாம் வகுப்பு நண்பனிடமும்...
கண்ணில் கரு வளையம் விழுந்த பக்கத்து வீட்டு காதலியிடமும்... அப்பட்டமாய் தெரிகிறது

என் வயது

....................................................................X......................................................................


கூரான மார்பங்களும்
சிவப்பான உதடுகளும் குலுங்க
குத்து பாட்டுக்கு ஆடும் பெண்( கள் ).....

ஆண் ஆணாகவும்
பெண் ஆணாகவும் .....
பால் வெளியாய் நிலவொளியில்
என் வீட்டிற்கே கேட்கும்
"பளீர்" என்ற சத்தமில்லாத......
வலிக்காத சாட்டையுடன் ....
குழாய் ஒலி பெருக்கியில் தெரியும் வில்லன் இல்லாத அந்த மேடை..

மஞ்சள் வெளிச்சத்துடன் அந்த மகாபாரத கூத்து
எட்டு தௌடைகளும்
நாலு இடுப்புகளும் நடிக்கும் - கலை
நிகழ்ச்சியாக மாறித்தான் போனது இன்று......

கோவிலின் எதிரில்.
கூட்டத்துக்கு மறைவில்
முகத்தை மூடிக்கொண்டு (இந்த வருடம் பனி அதிகமப்பா... )
நடு ரோடில் எச்சில் உமிழ்ந்து கொண்டு

கண் கொட்ட (கொட்ட) பார்த்து கொண்டிருந்தார்
திருவிழா வலம் முடிந்து திரும்பிய உற்சவர்- தன்
இரு மனைவிகளுக்கும் பயந்து
முகத்தை மூடிக்கொண்டு ....................

........................................................................X.....................................................................................


கோவிலுக்கு எதிரில் ஆடை அவிழ்ப்பு நடனமா ....?
பொருமிக் கொண்டிருந்தான் - Rs 6000/-
கொடுத்து நிர்வான நடனம்
Pattaya-வில் பார்த்து வந்த என் நண்பன் .......................

.............................................................X.........................................................................................

பெண்



அழகாய் தூங்கிக் கொண்டிருக்கும் பெண்ணை
எழுப்பிக் கூற வேண்டும்
அழகாய் இருக்கிறாய் நீ -தூங்கும் போது என்று...

பார்த்ததில் பிடித்தது....