Saturday, May 31, 2008

தாய்மை....




மகப்பேறு மருத்துவமனை
செவிலி இடுப்பில்
குழந்தையாய்...
அந்த தண்ணீர் குடம்….

சந்தோஷ சாமி….




அக்னி நட்சத்திரம் தொடங்கி விட்டது
அதிகாலை பூஜைக்கே
குளிர் சாதனப் பெட்டியில் மல்லிகைப் பூக்கள்..

நீ.......





நீ

இன்றும் கூட தள்ளித்தான் போகிறது..
என்றோ சம்பவித்திருக்க வேண்டிய
என் மரணம்……..

உன்னால்..

யார் நீ..?

காதலியா..?
கொலையாளியா..?

The Lives of Others- Germany



DAS LABEN DER ANDEREN

....................................................


ஒரு சராசரி ஜெர்மானிய படத்தை நினைவூட்டும் ஆரம்ப காட்சி.நாஜி ராணுவ வீரனைத் தொடர்ந்து செல்லும் கைதியும் ராணுவ வீரனின் பூட்ஸ் ஒலியும்….

அடுத்த காட்சியில், மனோதத்துவ/குற்றவியல் பிரிவு வகுப்பறையில் ஆசிரியரும் சில மாணவர்களும்…

இங்கே சிறை அதிகாரி (HGW XX/7)
குற்ற விசாரனை செய்ய, அங்கே அதே சிறை அதிகாரி ஆசிரியராய், தன் அனுபவங்களை பாடமாய் எடுத்துக்கொண்டு இருக்கிறார்….

ஒரு நல்ல திரைப்படத்திற்க்கு எடுத்துக்காட்டாய் வேறென்ன இருக்க முடியும் இதை விட….

………………….

கிழக்கு/மேற்கு என பிளவு பட்டு இருந்த ஜெர்மெனியை பின் புலமாக கொண்ட கதைக் களம்…

அந்த சமுதாயச் சூழலில் கதையின் நாயகனாய் ஒரு நாடக இயக்குனர், அவன் காதலியாய் அழகான நாடக நடிகை, அந்த நாடகத்தை காண வரும் ஒரு அரசியல் வாதியின் மோகம் அந்த (நிஜ) கதா நாயகியின் மீது..

இங்கே தொடங்குகிறது இந்த காதல் கதை….

ஒரு யாருமில்லா இரவில், நாயகனின் வீடு ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடெங்கும் உளவுப் பொருட்கள் பதிக்கப் படுகின்றன, (20 நிமிடத்தில்) இரகசியமாய்…

இதை அறியா நாயகனின் நடவடிக்கைகள் பதிவாகின்றன… உளவு பார்க்கும் அதிகாரியாய் அந்த சிறை அதிகாரி(HGW XX/7)
மூலமாக, எதோ ஒரு அறையில் அவர்களின் சல்லாபங்கலும் சேர்த்து… அரசு ஆவணமாக…

நாடக இயக்குனரோ, தனது நண்பர்களுடன் சேர்ந்து, நாஜி அரசுக்கு எதிராக, அந்நாட்டில் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் பணியில், புதிய நாடகம் என்ற போர்வையில்….

தனது காதலி அரசியல்வாதியின் அரசியல் பலத்தால் கற்பழிக்கப்படுவதை தடுக்க முடியாத அந்த படைப்பாளியின் கழிவிறக்கம்…

இவை அனைத்தும் பதிவாகின்றன, சிறை அதிகாரி மூலமாக, தொலைவில் …
……………

ஒருநாள் மறைத்து, பதுக்கி சிவப்பு தட்டச்சு செய்யப்பட்ட அந்த புத்தகம், தடுப்பு சுவற்றிற்க்கு வெளியே பிரசுரமாகிறது..

வெகுந்து எழுந்த அரசு, நாயகனின் வீட்டை துடைத்து போட்டு, அந்த தட்டச்சு கிடைக்காமல் ஏமாந்து வெளியேறுகிறது…

விசாரனையின் பாகமாய் நாயகனின் காதலியய் சிறை எடுத்து, அடைத்து விசாரிக்கிறது…

இவை அனைத்தும் பதிவாகின்றன, சிறை அதிகாரி (HGW XX/7)
மூலமாக, தொலைவில் …

எத்தனையோ சோதனைக்குப் பிறகும் உண்மையை சொல்லத அவள், உன்னை மீண்டும் மேடையேற்றுகிறேன் என்ற ஒற்றை வார்த்தைக்கு மயங்கி (நடிகை….!) தட்டச்சு இருக்கும் இடத்தை சொல்லி விடுகிறாள்..

கண்ணிமைக்கும் நேரத்தில், சிறை அதிகாரி(HGW XX/7) தட்டச்சு எடுத்து மறைத்து வைக்கிறார், கதாநாயகனுக்கே தெரியாமல்..

உண்மை தெரிந்த மமதையில் ராணுவ அதிகாரி மீண்டும் நாயகனின் வீட்டை துடைத்து போட்டு தேட, அதிர்ச்சியில் நாயகன், நாயகியை நோக்க, தான் செய்த துரோகம் தன்னை உறுத்த, வேகமாய் வீட்டை விட்டு வெளியேறி, விரைந்து செல்லும் நான்கு சக்கர வாகனத்தால் பிணமாகிறாள், சற்று முன் காதலியாய் இருந்த அந்த நாயகி…


ராணுவமோ, நாயகனின் வீட்டை துடைத்து போட்டு, அந்த தட்டச்சு கிடைக்காமல் ஏமாந்து சிறை அதிகாரியை பதவி நீக்கம் செய்து இந்த வழக்கை முடிக்கிறது தடயமில்லா காரணத்தால்….

………………………..

சில வருடங்களுக்கு பிறகு…

ஜெர்மானிய தடுப்பு சுவர் இடிக்கப் பட்டு இரண்டும் ஒன்றாகின்றன…

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரி(HGW XX/7) வீடு வீடாக பத்திரிக்கை போடும் பணியில்…

ஒன்று பட்ட சுதந்திர ஜெர்மனியில், தனது வழக்குப் பதிவை நூலகத்தில் புரட்டிப் பார்க்கும் கதா நாயகனுக்கு அன்று அந்த சிறை அதிகாரி உதவியது தெரிய, தனது வாழ்க்கை வரலாற்று நூலை அவறுக்கே சமர்ப்பணம் செய்கிறான்….
…………………

எனக்கு பிடித்தவை

ஒளிப்பதிவும் அதன் கோணங்களும்
கடைசி காட்சி

சென்று வாருங்கள்

நாலு சண்டை
ஆறு பாட்டு
வடிவேலு
கவர்ச்சி நடனம் நாயகி
ஆயிரம் அடியாட்களை அடிக்கும் நாயகன்
படம் முடியும்போது வில்லனை கைது செய்யும் காவலர்கள்….
இப்படி எதுவும் இல்லாமல்

அழகாய்
அமைதியாய்
ஒரு திரைப்படம்..
சென்று வாருங்கள்

சத்யம் திரை வளாகம், Studio -5. இரவு 7:15 மணிக்கு..

Manusham
2:45 am. Trivandrum International Airport

Saturday, May 24, 2008

அரை ட்ரவுசர்..............

அரை ட்ரவுசர்
பையனைப் போலவே அரையுடயாய்..

பரிதாபமாய்…
நடுத்தர வர்க்கத்து அப்பாக்களும்
இழுத்து கிழித்து தைத்து கொடுத்த
புளிய மரத்தடி தையல்காரனும்
பதிலளிக்க முடியாமல் பல் இளித்துக் கொண்டு……..

பரிதாபமாய் இந்த மானுட வளர்ச்சி
பிதுங்கும் தொடைகளை காட்டிக்கொண்டு
எல்லா காலங்களிலும்…………..

தேடிக் கொண்டிருக்கிறேன்
முட்டிக்கு கீழே
தொடையயை மறைத்து
அரை ட்ரவுசர் அணிந்த யாரையாவது…

என்னையும் கடந்து
இன்னும் அரை ட்ரவுசர் அணிந்து…..

நீ…


எதிர் வரும்
எல்லா எதிர்பாலினத்திடமும்
எடை போட்டு பார்க்கிறேன் உன்னை…

முரன்...



ஒவ்வொரு (நல்ல) கவிதை எழுதி – முடித்தவுடன்
கடவுளாய் நான்…..

இதை எங்கோ, என்றோ
படித்ததுமாய் வாசகனாகவும் நான்….

கவிதைகள் என்று நான் (என்)
குழந்தைகளை குறிப்பிடவில்லை…

Hi.....Haikkoo

அளவுக்கு மிஞ்சினால்
அமிர்தமும் விஷம்…
செத்து மிதந்தன எரும்புகள்…
சு(ட்)டு ஆறிய பால் சொம்பில்…

அசைவு….

நகராதே….
என்ற என் வார்த்தைக்கு கட்டுப் பட்டு
அசையதிருந்த ரயிலை
நகராமல் நகர செய்தது….

குற்றவாளியாய்
குறு குறு பார்வையுடன்
என்னை கடந்து சென்ற ரயில்…

எதிர் வீட்டு ரெட்டை சடையயைப் போல…

Sunday, May 18, 2008

என் இனிய காதலியே..


காதல் குறித்த கவிதைகள் எல்லாம் சேகரிக்கிறேன்
தாடி கூட வைத்தாகி விட்டது
நேரத்திற்க்கு சாப்பிடுவதில்லை
உடல் மெலியத் தொடங்கிவிட்டது
கேட்பவர்களுக்கு சொல்லி மாளவில்லை _ உன்னை பற்றி

இன்னும் எத்தனை நாட்கள் மறைக்க முடியும்
மேற்ச் சொன்ன முக மூடிகளையும்…?


நீ தான் என் காதலி என்றும்...?

இந்த 34 வது பிறந்த நாளுக்குள்ளாவது சொல்லிவிடு…
என் இனிய காதலியே..

நீ யாரென்றும்
உன் முகவரி எதுவென்றும்…

நானும் என் எழுபது வயது பாட்டியும் ...


விவித பாரதி எங்கே எடுக்கும்..?
நாடகம் எங்கே கேக்கும்..?

மெட்ராஸ் என்ன நம்பர் ..?

-----------------------------------

எத்தனை தடவை சொல்லிக் கொடுத்தாலும்
என் எழுபது வயது பாட்டிக்கு மட்டும் புரிவதே இல்லை
வயதா, ஆணவமா..?
அவள் மரணத்திற்க்குப் பிறகும் எனக்கு தெரியல்லை…

பாட்டோ,செய்தியோ

அவளைப் பொருத்தவரை
எல்லாம் ஒரு கொடுப்பினை தான்..........

----------------------------------------

பள பள மூங்கில் வண்ண
வால்வு ரேடியோ பெட்டியின்
கர கர சத்தத்தையும் மீறி
இங்கும் அங்கும் நகரும் சிகப்பு முள்ளை நகர்த்தி

பாட்டோ
செய்தியோ
ஒலிச்சித்திரமோ
3 மணி நாடகமோ..
எப்போது, எங்கு, எது கிடைக்குதோ- அங்கே நிறுத்தி
அதை கேட்பது தான்
அவளின் ரேடியோ
பரிச்சயமும்
அனுபவமும்
அதிஷ்டமும்…

…………………

இன்று
நாள் முழுவதும் இனையத்தில்(Internet) வியாபாரம் செய்து
எல்லை இல்லா தொலை பேசியில்
அயல் கிரகம் பேசி…
சூரிய ஒளிக் காரில் பயணித்து
பசிக்கு மாத்திரை முழுங்கி
சிறிதே வண்ண சாராயம் குடித்து
குலாவி
வலது பக்க சுவராய் பதிந்திருந்த
தொலைக் காட்சி பெட்டியில் _ நானும் ரிமோட்டில்
CNN IBN
NDTV
BBC
SUN
SUN Music
M TV
V
Raj
……….
……….
--------------------------------------------------

காலங்களை கடந்து
மரபனுவில் மரபாய்
என்னுள்ளும்

பாட்டோ
செய்தியோ
திரைப் படமோ
நாடகமோ..
எப்போது, எங்கு, எது கிடைக்குதோ- அங்கே நிறுத்தி
அதை கேட்பது தான்
என் இன்றைய தொலைக்காட்சி
பரிச்சயமும்
அனுபவமும்
அதிஷ்டமும்…

என் வயது .........





திருவிழாவில் எதிர்படும்-என்

இளைத்துப்போன ஆசிரியரிடமும்......

கைக் குழைந்தையோடு வந்த ஏழாம் வகுப்பு நண்பனிடமும்...

கண்ணில் கரு வளையம் விழுந்த பக்கத்து வீட்டு காதலியிடமும்...


அப்பட்டமாய் தெரிகிறது


என் வயது

Saturday, May 10, 2008

அபர்ணா …….கோவிதாபம்-5



எத்தனை பேர் தொட்ட முலை
எத்தனை பேர் விட்ட துளை….

இப்படித்தான் தொடங்குகிறேன்- இந்த கோவிதாபத்தை
நாகரிகம் பற்றி கவலைப் படாமல்
அவசியம் கருதி
இந்த கவிதைக் கருவின் தாலி கட்டிய தந்தையாய் நீ…..

……………….

யார் நீ
கண்ணகியா..?
மாதவியா..?
சாவித்ரியா..?
சொர்ணமுகியா..? _ என் சகியா..?

நான் யாரென்று தெரியாததால் – நீ
யாரென்றும் தெரியவில்லை….

……………………

நீ..
நீ சார்ந்த எல்லாம்..
இந்த தினையில் எதை எழுதினாலும்
வினைத் தொகையாகவே முடிகிறது..
என்னை பொறுத்தவரை…

…………………….

உன்னை நான் எங்கே வைப்பேன்..?
உள்ளேயா..? வெளியேயா..?
மறைத்தா…? ஒளித்தா..?
உனக்கு தெரிந்தா..? தெரியமலா..?
பதிலை எதிர் பார்த்து _ உள்ளம்
நிறைய(யா) காதலுடன் நான்.

உன்னிடம் இருந்தும்- உன்
தாலி கட்டிய கணவனிடம் இருந்தும் _ நீ
காதலிக்கும் உன் காதலினடம் இருந்தும்………

……………………….

தினம் தினம் தலை மூழ்குகிறேன்..
எல்லா சோப்பும் தேய்த்தாகி விட்டது
இரண்டு வேலை குளிக்கிறேன்- சென்னையில்
இந்த கோடையிலும்

குளத்தில்
நதியில்
ஓடையில்
கடலில்_ எல்லா முயற்ச்சியும் பொய்த்துப் போனது
தினமும் குளித்தவுடன்
உடல் முழுவதும்
உடனடி அழுக்காய்
என் இரத்ததில் இருந்து _ என்
மரணம் வரை
வியர்வையாய்- நீயும் உன் நினைவுகளும்….

……………………….

கண்ணடி உருவமாய் நீ…
அழகாய்
தெள்ளத் தெளிவாய்
என்னுடன் வந்து _ நான்
பார்க்கும் போது உன்னைக் காட்டி
என்னுடன் நகர்ந்து மறையும்
(படம்) பிடிக்க முடியா மாயப் பிம்பமாய்….
ஐந்தாம் வகுப்பு அறிவியல் பாடம் சொல்வது போல…

……………………………

இருமனம் கொன்ட திருமண வாழ்வில்…………
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கரையினில் ஆடும் நானலே நீ _ நதியிடம்
சொந்தம் தேடுகிறாய்…

நம்மைப் பொறுத்தவரை இதில்

நதி யார்..?
நானல் யார்..?
……………………
ஒரு உரையாடலின் போது
சாதாரணமாக, சதா ரணமாக தான் வந்து விழுந்தன
நீ தொழிற் பெண்ணன விதமும்
அதற்க்கு நீ கொடுத்த விலைகளும்

கிட்டிய பொருள் தரமென்றால்
கொடுத்த விலையும் தரமே..
ஏனெனில் பெண்ணே இது நீ வாங்கியது- பேரம் பேசி..

விலை பற்றி கூற நீ முன் வந்தாலும்- நீ
விலை போன விலை கேட்க நான் இல்லை.
புண் பட்ட எருதின் மேல் _ சதை
தின்னும் காக்கையல்ல நான்…

………………………………

முற்றுப் புள்ளி
இப்படித்தான் முடிக்க நினைக்கிறேன் இக்கவிதையைய்..
இங்கிருந்தே தொடர்கிறது _ இக்கவிதை
எப்போதும் போல….

…………………………………
ஐந்து வயது குழந்தையின் தாயாய் நீ
அழகான உன் காதல் கணவன்
சமீபத்தில் உன்னுடன் விடுமுறையயை கழித்த நம் நண்பன்
உன்னை பற்றிய கூற்றுக்கள்- அனைத்தும்
பொய்த்துப் போய்
(கெட்ட)கனவாகி
விழித்தெழும்
கோரிக்கையும் ஒன்றாகித்தான் போனது
இப்போதைய என் பிரார்த்தனைப் பட்டியலில்….

இடம் பெயராமை…..



நிலைய அறிவிப்பாளரின் அறிவிப்பின்
கடைசி வரை காத்திருந்து
பச்சைக் கொடிக்குத் தலையாட்டி
ஊரெங்கும் கேட்கும் அலரலோடு
தாளம் மாறாத ஜதியோடு
பூமி அதிர
நகரத் தொடங்கியது….

இந்த பக்கத்து மரங்களும்
அந்த பக்கத்து வீடுகளின் கூரைகளும்

அசையா ஜடமாய் நான்- சக ரயில் பிரயாணிகளோடு

எதிர் மாயத் தோற்றம் alais ALAISING

தீர்ந்து போக போகும் எல்லாமே

ரசிக்கும்படியாய்
சுவையாய்
அழகாய்
கம்பீரமாய்
வரும் வெறுமைக்கு முன் அறிவிப்பாய்
எதிர் மாய தோற்றமாய்….

………..><………………
அணையப் போகும் விளக்கு..
சாப்பிட்ட தட்டில் கடைசி பருக்கை...
மஞ்சள் நீராட்டிய ஆடு - கத்தியின் முன்..........
ரயில் சினேகிதியின் ஈரப் பார்வை _ யாரோ
ஒருவர் இரங்குமிடம் வருமுன்.........
இப்படி எத்தனையோ…
………<>……………………….

எழுதியது பிடிக்காமல்
தலைப்பு தெரியாமல்

சிறிய வயதில்
புகழானிக் கொம்பை அடைந்த
நண்பனின் அகால மரணத்திற்க்கு பின்
எழுத நினைத்த கவிதை- இந்த கவிதை
கிழித்து கசக்கி எறிவதற்க்கு முன் _ அழகாய்..

மரண இலக்கியமாய்
என்னை அறியாமல்- எதிர் மாயத் தோற்றமாய்…..

Thursday, May 8, 2008

எனது ஆசான் ...கவிப் பேரரசு வைரமுத்து.




கண் இமைக்கும் நேரத்தில் கடந்து போனவற்றில் -நாம் கவனிக்காமல் போனவை ஏராளம் ...

அப்படி ஒரு கவிதை உங்களுக்காக..

காதலை

பிரிவை

காமத்தை

விரகத்தை

ஏக்கத்தை

சங்கமத்தின் நிறைவை...

இன்னும் எத்தனையோ இக்கவிதையில் ....


யாருமில்லா இரவுகளில்

தனிமையான தருணங்களில் வாசித்துப் பாருங்கள் இக்கவிதையை.......
----------------------------------------------------------------------------

உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே


தொண்ணூறு நிமிடங்கள் தொட்டனைத்த காலம்
தொண்ணூறு ஆண்டுகளாய் இதயத்தை கலக்குதடி...


பார்வையிலே சில நிமிடம்..

பயத்தோடு சில நிமிடம்..

கட்டி அணைத்தபடி கண்ணீரில் சில நிமிடம்...

இலக்கணமே பாராமல்

எல்லா இடங்களிலும் முத்தங்கள் விதைத்த மோகத்தில் சில நிமிடம்....


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே.....


எது நியாயம்...?எது பாவம் ..?

இருவருக்கும் தோன்றவில்லை..

அது இரவா..?அது பகலா..? அதை பற்றி அறியவில்லை..!


யார் தொடங்க ? யார் முடிக்க ?

ஒரு வழியும் தோன்றவில்லை - இருவருமே

தொடங்கிவிட்டோம் இது வரைக்கும் கேள்வி இல்லை


அச்சம் களைந்தேன் - ஆசையினை

நீ அனைத்தாய்


ஆடை களைந்தேன் - வெட்கத்தை

நீ அனைத்தாய்


கண்ட திருக்கோலம் கனவாக மறைந்தாலும்
கடைசியில் அழுத கண்ணீர் கையில் இன்னும் ஒட்டுதடி


உன்னோடு நான் இருந்த ஒவ்வொரு மணித் துளியும்
மரண படுக்கையிலும் மறக்காது கண்மணியே

பார்த்ததில் பிடித்தது....