Wednesday, January 26, 2011

34வது (2011) சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் - கிடைத்த 120 நிமிடங்களில்.....

நாலு மணிக்கெல்லாம் வந்துருடா.,சித்தேரி ஐய்யனாருக்கு பொங்கலும்., நம்ம வீட்டு அம்மச்சாருக்கு படையலும் போடனும்.,கானும் பொங்கல் அன்று அம்மாவின் வார்த்தைகளும்..,GRT போய்ட்டு போலாங்க என்ற சகதர்மினியின் வேண்டுதலுக்கு இடையே நடந்து முடிந்தது -
34வது சென்னை புத்தக கண்காட்சியில் என் வருகையும்.,நான் வாங்கியவையும் கிடைத்த 120 நிமிடங்களில்.....

1. யாமம்- எஸ்.ராமகிருஷ்ணன்

2. துயில்- எஸ்.ராமகிருஷ்ணன்

3. தேர்ந்தெடுத்த சிறுகதைகள்- சுஜாதா

4. ஹிந்தி கற்றுக்கொள்ளுங்கள்-தமிழ் வானன்.

5. இரவு-ஜெயமோகன்

6. சீரோ டிகிரி- சாரு நிவேதிதா

7. கடவுள்- சுஜாதா

8. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-1

9. கதை நேரம்-கதைகள் திரை கதைகள்- பாலுமகேந்திரா- வட்டத்தகடுடன்- பகுதி-2

10. பேசும் படம்- செழியன்

11. மரணம் மற்றும்...- கன்னடத்து சிறுகதைகள்

12. இல்லாத ஒன்று- சுந்தர ராமசாமி

13. சினிமா பாரடைசோ- திரைக் கதை


அப்பாவுக்காக...


14. தி.ஜா.சிறுகதைகள்- முழு தொகுப்பு


15.வனவாசம்-கவியரசு கண்ணதாசன்

16.மனவாசம்-கவியரசு கண்ணதாசன்


(இரவு) படித்துக் கொண்டிருக்கிறேன் தூங்காமல்...

Wednesday, January 12, 2011

பாதை...


எங்கோ தொட‌ங்கி,
முற்றுப் புள்ளியாய் ம‌றையும்‍ _ எல்லா பாதைக‌ளும்

ஒன்றுக்கொன்று இணையாய்....
ஆர‌மில்லா வளைவுக‌ளாய்....
தொட‌ங்கிய‌ புள்ளியில் முடியும்_ முடிவில்லா
வ‌ட்ட‌ங்க‌ளாய் இருந்தபோதும் ………..

வ‌ழி மாறிப் போவ‌தும்_ ஆங்காங்கே
திசை தெரியாம‌ல் த‌விப்ப‌தும் த‌விர்க்க‌முடியாத‌தாகிவிடுகிற‌து
த‌ற்போதைய‌ ப‌ய‌ண‌ங்க‌ளில்..

பார்த்ததில் பிடித்தது....