Tuesday, June 25, 2013

கனவுப் பெண் - சில விவர வரையறைகள் (Dreamgirl - Some specifications).........................







எல்லா ஆலயங்களையும் சுற்றி வந்த புண்ணியத்தின் ஒரு பாதியும் 

எத்தனையோ முறை சுற்றி வந்த வரங்களின் மறுபாதியுமாய் - தோன்றினர் ,சிவனில் ஒரு பாதியும் 

பார்வதியில் மறுபாதியுமாய் - என் வேண்டுகோளுக்கிணங்க 

வரம் கொடுப்பதற்கு- கேட்டவுடன்  வரம் கொடுப்பதற்கு

------------------------%------------------------

அத்தனை (பேர் ) ஆனந்தத்திலும் மறவாமல் கேட்டேன் 

எனக்கான பெண்ணை ………..

நான் ஆராதித்த பெண்ணை …………

நான் நேசித்த பெண்ணை …………

என்னுடன் வாழப் போகும் பெண்ணை - வரமாய் 

கடந்த வாரம் கடந்து சென்ற திருமண நாள் -தொண்டையில்

முள்ளாய் உறுத்திய போதும் .............

------------------------%--------------------------------

அந்த நடிகையின் கால்கள் 

இந்த நடிகையின் இடுப்பு 

கடந்து சென்ற பெண்ணின் வண்ணம் 

கடந்து சென்றும் (என்னுள்) மறையாத பெண்ணின் வளம் 

தெருவில் பார்த்தவளின் உயரம் 

திரும்பாமல் போனவளின் மணம் 

கனவில் வந்தவளின் --------------------------

கலையாமல் போனவளின் --------------------------

நான் பார்த்து வியந்தவளின் தைரியம் 

என்னை வாரிச் சென்றவளின் சிரிப்பு 

------------------------------------------

------------------------------------------

இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த - எனக்கான உன்னை 

நானே வடிவமைத்து 

திருமணம் புரிந்து 

கடந்து செல்லும் தருணங்கள் - ஒவ்வொன்றும் சொர்க்கமாய் 

வாழ்ந்து மடிய ,வரம் கேட்டேன்- கேட்டவுடன் 

வரம் கிடைக்குமென்று .....................

---------------------%-----------------------

மனைவி ............

எனக்கும் அவளுக்குமான இடைவெளி நீண்டு கொண்டே-

முடிவில்லா முற்றுப்  புள்ளியாய் .......

ரசனைகளால் ...........

விருப்பங்களால்  ……………

குறிக்கோள்களால் ……………

திசை தெரியா இலக்குகளால் …………..

திருமணம் என்னும் சந்திப்பில் இருவரும்

வெவ்வேறு திசை நோக்கி பயணிப்பது

தவிர்க்க முடியாததாகி விடுகிறது- தற்போதய விடியல்களில் 

எதிரெதிரே சந்தித்து கொண்டாலும்(விபத்தாய்)-பேசாமல் 

அந்நியர்களாய் ...................

--------------------------$--------------------------------

தந்தேன் வரம்- இரட்டை குரலில் ஒருமித்து- வரம் 

தந்து மறைந்தனர்,அம்மையும், அப்பனும் …..

---------------------$----------------------------

(இரு ) ஒளிப் பிரவாகம் ஒன்றாய் மின்னி மறைந்த

ஒற்றைப் புள்ளியில் இருந்து நடந்து வந்தாள் - என் தேவதை 

என் அனைத்து வேண்டு கோள்களை ஒன்றிணைத்து .......................

-----------------$------------------------- 

பெருமிதம் பொங்க 

ஆசை அடங்கா விழிகளுடன் 

அகம்( )பாவம் தெறிக்க - அந்த

மலர் பொன் பாத விரல்கள் நோக்க, நான் .

அழகாய் புன்னைகைத்து கேட்டாள் அவள் 

"அம்மா வரலயாப்ப்பா ...?''

--------------------------%------------------------

சற்று முன் கண்ணாடிப் போட்ட 

அழுது வீங்கிய கண்களுடன் - சிவப்பு /பச்சை உடை அணிந்த 

நடு வயது (பேதை/ பெதும்பை) மனைவி

சென்ற திசை நோக்கி நடப்பதும் சிரமமாகி விடுகிறது 

இது போன்ற தருணங்களில்- மனைவி நடந்து மறைந்த 

தெரியாத திசைகளில்
 ............ 

Thursday, May 23, 2013

ஜில்லு................சாப்பிட்டு போடா ..................





ஜில்லு................சாப்பிட்டு போடா ..................

வெந்து அவிந்த - கையில் மாவு ஒட்டாத
இட்டிலியை (கைக்கெட்டிய) தட்டில்
குழம்பு மிளகாய் தூளில் - நாலு பூண்டு பல்லை நசுக்கிப் பரிமாறிய
அத்தையின் நினைவுகள் - எப்போதாவது  இட்லி  செய்யும்
சில பட்டினி (பிரமச்சரிய ) இரவுகளில்
மிளகாய் தூளுக்கு பூண்டு பல்லு நசுக்கும் போது ..........................

--------------X---------------------------------

எதிர் பாரா  விதமாய் கலந்து கொண்ட -அந்த அத்தையின் (மரணத்திற்கு பின் )
முப்பது கும்பிடும் நிகழ்வில்
நான் பரிமாறிய சாம்பாரின் மணம்  - நினைவூட்டிச் செல்கிறது -அவள் இருப்பை -  ஏதோ ஒரு இலையின் முன் ....................

--------------X-----------------------------------

பரிமாறும் அறை முழுவதும் விரவிக் கிடக்கிறது - அவள்
என்றோ என் பசியாற்றிய பீன்ஸ்-கேரட் சாம்பாரின் மணம்
நான் மூன்று பந்தி பரிமாறிய
அடுத்த தெரு அம்பிகா பவன் ஹோட்டல் சாம்பரில் இருந்து.........

---------------X-----------------------------------

ஜில்லு................சாப்பிட்டு போடா ..................
 

பார்த்ததில் பிடித்தது....