Monday, January 19, 2009

2009 சென்னை புத்தக கண்காட்சி ஒரு பார்வை…கடைசி நாளில்…


மார்கழி மாதத்தில் சங்கீத சபாக்களும், சங்கீதம் பற்றிய அலசல்களும், கான்டீன் ஆலாபனைகளும், பட்டுப் புடவை விலை விசாரிப்புகளும் மட்டுமா என்ன..?

புத்தகக் கண்காட்சியும், நானும் போட்டியாய் இந்த வருடம் முதல்…

புத்தகக் கண்காட்சியில் பொறுக்கியவை (படித்தவை அல்ல.,படித்தது பிடித்தால் என்றேனும் எழுதுவேன்..)

1. சுந்தரராமசாமியின் சிறுகதைகள்- சுந்தர ராமசாமி
2. மிதமான காற்றும், இசைவான கடலலையும்- தமிழ்செல்வன்
3. ஊமைச்செந்நாய் - ஜெயமோகன்
4. 18-ம் நூற்றாண்டின் மழை- எஸ்.ராமகிருஷ்ணன்
5. கதைகள் திரைக் கதைகள்- பாலுமகேந்திரா
6. கடவுளுடன் பிரார்த்தித்தல் - மனுஷ்ய புத்திரன்
7. கடைசி டினோசார் - தேவதச்சன்
8. உண்மை கலந்த நாட்குறிப்புகள் - அ.முத்துலிங்கம்

இயக்கனர் ராம் அவர்களின் தரிசனம்…
எழுத்தாளர்….கவிஞர்…உயிர்மை.., மனுஷ்ய புத்ரன் அவர்களை சந்தித்த போது…எனது வேண்டுகோளாக, அவரிடம் கோரியது….

தமிழ் வலைப் பூக்களுக்காக ஒரு பகுதி அடுத்த புத்தகக் கண்காட்சியிலாவது ஒரு இடம்…திரு மனுஷ்யபுத்திரன் அவர்களும் இதையே வழி மொழிந்தார்…

அவர் தற்போது இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகவும், சிறந்த 50 வலைப்பூக்களை தொகுத்துக் கொண்டிருப்பதாகவும், வெகு விரைவில் வெளியிடப் போவதாகவும் தெரிவித்தார்..

அன்பார்ந்த வலைப் பூ படைப்பாளிகளே, படிப்பாளிகளே…..தங்கள் மனம் கவர்ந்த தமிழ் வலைப் பூக்களை

uyirmmai@gmail.com
என்ற மின் அஞ்சலுக்கு பரிந்துரைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்…அந்த இராமனின் முயற்சிக்கு நமது மின்னஞ்சல்கள் எல்லாம்., கூழாங்கல்லாய்..,நாம் அனைவரின் அனிலாய்..,

எல்லாம் முடிந்து வெளி வந்தவுடன் கலை அரங்கில் 32 புத்தக வெளியீட்டு விழா…, முதுகு சொறிந்து கொண்டே……




புத்தக கண்காட்சி என்பது BAPASI என்ற கூட்டமைப்பின் முயற்ச்சியா..? அல்லது லேனா தமிழ்வானன் அவர்களின் குடும்ப சொத்தா..?

சட்டசபையில் முதலமைச்சர்களின் முகஸ்த்துதி முதல்( இந்நாள் & அந்நாள்), விஜய் தொலைக்காட்சியில் “ உங்களில் யார் அடுத்த பிரபுதேவா..?” தொகுப்பாளினி வரைக்கும்.., தமிழனின் தனி மனித வழிபாடு கை கொட்டிச் சிரிக்கிறது.

எப்போது அடிமைப்பட்டான் தமிழன், இந்த தனி மனித வழிபாட்டிற்க்கும் முகம் சுளிக்க வைக்கும் முகஸ்துதிக்கும்..?

ஆறுதலாய் சேரன்..தனக்கு 10வது படிக்கும் மகள் இருப்பதாய் தனது கதாநாயன் பிம்பம் பற்றி கவலைப் படாமல் ஒத்துக் கொண்டார் யதார்த்த நாயகன்…,

மனப்பாடக் கல்வியை விட, வாழ்க்கைக்கு உதவும் கல்வியை வாழ்க்கைக்கு உதவும் கல்வியயை புரிந்து படிப்பதை , தற்காலத்து எழுத்தாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மசாலா சினிமாவை நக்கலடிப்பதற்க்கு முன் ஒவ்வொரு எழுத்தாளானும் சிந்திக்க வேண்டிய ஒன்று…

மேடையில் அக்பர் கவுஸ்.,ஸ்நேகா..,தமிழச்சி.., நமிதா.., வடிவேலு.., மட்டும்தான்
இல்லை…BAPASI/ மணிமேகலை பிரசுரம் கவனிக்கவும்…,

ஏமாற்றம்
மெல்ல தமிழினம் மெல்லச் சாகின்றதே ஒரு மூலையில்…அதைப் பற்றி ஒரு வரி…ஒரு கண்டனம்.., ஒரு கருப்புக் கொடி இல்லாதது…ஒரு வேளை பிரணப் முகர்ஜி இலங்கை செல்வதை எதிர் பார்க்கிறதோ BAPASI…..?

கண்ணீர் …ஒரு பின்னோக்குப் பார்வை…


உறக்கமில்லா இரவுகளில்
நீண்டநேரமாய் படித்தயற்ந்த கண்களின் (இருபுறமும்)
கொட்டாவியின் இறுதியில் வரும்
கண் “நீர்” துளிகளில் இருக்கிறது
உன் பிரிவும் துயரமும்

என்றோ கதறியழுத இரவுகளை நினைவுறுத்தி….
துயரத்தின் உருவக உவமையாய்…

சற்றுமுன் தன் கதகதப்பை இழந்திருந்த
உள்ளங்கை ஈரம்….

பார்த்ததில் பிடித்தது....