Tuesday, September 23, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- III

கேட்க முடியா சில கேள்விகளும்
மன்டியிட்ட மன்னிப்பும்
வாசிக்க முடியா வாழ்த்துரையும்……………..



எப்படி இருக்கிறாய் தோழி…?
எங்கு இருக்கிறாய்..?
புகுந்த வீடு பழகிவிட்டதா…?
புதுக் கணவன் தோழனாக மாறிவிட்டானா…?
சுற்றமும் நட்பும் பழகிப் போனதா..?
சமையலறை பிடிபட்டதா….?
புதுக் கணவனுக்கு முதல் முறை என்ன சமைத்தாய் …?
காதல் கணவனின் பரிசு கிடைத்தா…?
எப்படி சென்றாய்.. விமானத்திலா/தொடர் வண்டியிலா…?
தேன் நிலவிற்க்கு வடக்கா/ தெற்கா….?

எப்படி பதிலலிக்கப்போகிறாய் என் அன்புத் தோழி- இந்த
எல்லா கேள்விகளுக்கும்..?

……………………..<>……………………….

மன்னிப்பாயா தோழி..?
இந்த கேவலமான தோழனை- வழக்கம் போல

நான் என்ன செய்ய..?- ஆணாகிப் போன
நான் என்ன செய்ய..?

வக்கிரங்களும்
பொறாமையும்
ஏமாற்றமும்
விரக்த்தியும்
மதுவும்
பேரிழப்பும் - உச்சம் தொட்டு
இந்த கருப்பு பேனாவின் வழியே
வெளியேறித்தான் போகிறது
சிறிது சிறிதாய்- என்
ஆளுமைக்கு கட்டுப் பட்டு, க(விதை)களாய்…..
மன்னித்துவிடு- என் கவிதைகளுக்காய்
என்னை….

……………………..<>……………………….

நன்றாய் சாப்பிடு
வேளைக்கு உறங்கு
ஊர் சுற்றிப் பார்- கணவனுடன்
கை கோர்த்து, வழி நெடுகிலும்

என்னை எங்காவது பார்க்க நேர்ந்தால் பேசாமல் போ…


சந்தோசக் கடலில் மூழ்கி முத்தெடு- கணவன் என்னும்
பிராண வாயு பெட்டகத்தை முதுகிலும்
அவன் வாரிசை உன் வயிற்றிலும் சுமந்து…

உனக்காக மலர்ந்திருக்கலாம்- அந்த புதிய உலகத்தில்
பல அழகான (வாசம் மிகுந்த) பூக்களும்
சில நல்ல இதயங்களும்- உனக்கு பிடித்த
ஒரு நல்ல வாழ்க்கையும்
அதிகாலை சூரிய உதயம் போல- பிரகாசமாய்
ஒளிப் பிரவாகமாய்……….

வாழ்க பல்லாண்டு
பல கோடி நூராயிரம்
என் அன்னையின் அருளால்…

வாழ்க என் தோழி நலமாய்- வளமாய்
என்றென்றும்


மனம் குளிர வாழ்த்தும்

தொலைதூரத்து வழிப்போக்கன்

---------------------சுபம்------------------------------------------

Friday, September 5, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- II

ஒரு கன்னிப் பையனின் சாபம்- ஒரு சாந்தி முகூர்த்த இரவுக்கு….




என் அடையாளங்கள் தொலைந்து போன ஓர் இரவு….

இத்தனை பேரிரைச்சலும்
குட்டி பிள்ளையாரும்
ஈ மொய்க்கும் இனிப்புகளும்
மீதமிருக்கும் இந்த படையல் பழங்கலும்

உடைந்து போன பிள்ளையார் குடையும்
மூலையில் காய்ந்து போன வாழையிலையும்
தன்னந்தனியாய் நானும்…

........................><..................................


என்ன செய்துகொண்டிருப்பாய் இப்போது..?
நிச்சயதார்த்த புடவை சரசரக்க..
கற்றை கண்ணாடி வளையள்கள் சலசலக்க..
குங்கும சிவப்பாய் வெட்கத்துடன்
நடந்து கொண்டிருக்கலாம்………(வலுக்கட்டாயமாய்)

ஆர்வத்துடன் பட்டு வேட்டியில் அவன் அங்கு
யாருமில்லா தனியறையில்
மூன்றாவது குப்பி மதுவுடன் நான் இங்கு

வீடு முழுவதும் வட்ட தகடுகளுடன்
நான் களைத்து போய்
தண்ணி கொடுக்க கூட ஆளில்லாத அறையில்….

........................><..................................

யார் அவன்..?
உன் மீதும்
உன் உடல் மீதும் என்ன உரிமை அவனுக்கு..?

பாழாய் போன தாலி
பழகிப் போன கல்யாணம்
இதுதான் அந்த அவனின் அடையாளமா…?

........................><..................................

என்ன செய்யப் போகிறாய் நாளை காலை..?
அழிந்து போன குங்குமத்துடன்
கசங்கிப் போன பட்டுப் புடவையுடன்
உடைந்து போன வளையுடன்

அப்படியே சென்று உன் பெற்றோரிடம் கூறு
நேற்று நடந்த சங்கமத்தில்- இறந்து போனவை
என்றோ காதலித்த இரண்டு இதயங்கள் என்று……
........................><..................................


புரியாத புதிராய் நீ…
அன்றும், இன்றும்- என்றென்றும்
இப்போதாவது கூறிச் செல்…

உன் வாழ்க்கை எனும் நாடகத்தில்
நான் யாரென்றும்- நான் ஏற்று நடித்த
பாத்திரம் எதுவென்றும்…?

........................><..................................

இனி நாம்
உனக்கும் எனக்குமான உறவு முறைதான் என்ன..?
விபத்தாய் நாம் சந்திக்க நேர்ந்தால்
நமக்கான ஒரு தெளிவிற்க்கு….

புனர்ச்சி பெருக்கில் தத்தளித்து கிடக்கும் உனது
ஏதேனும் ஒரு உறங்காத இரவுகளில் யோசித்து சொல்
உனது கனவனுக்கு தெரிந்தோ/ தெரியாமலோ…
........................><..................................

இனி நீ….

எதிர் கொள்ளும் இரவுகளில்
என் முகமூடி அணிந்து உன் மீது படரப்போகும்
அவனான உன் கணவனுக்கு
நல்ல துணைவியாகவும்

தங்கள் கடமையைய் இனிதே செய்து முடித்த உன் பெற்றோருக்கு
நல்ல மகளாகவும்
வாழப் பழகிக் கொள்…

........................><..................................

இனி நான்

கை பிடித்து நடந்த காதலி
கரைந்து போனதாய் ஞாபகம்
கண்ணெதிரே…

காட்டற்று வெள்ளமாய் வாழ்க்கை
காலடியில் வெகு வேகமாய் சரிந்து கொண்டிருக்கும் மணலாய்
கரைந்து கொண்டிருக்கிறது தன்னம்பிக்கை….

தலை மூழ்கி
உடல் நனைந்து
சுழி சூழ்ந்து
அலையால் அலைக்கழிக்கப் பட்டு- கரை சேர்ந்த போதும்
கேட்டுக் கொன்டிருக்கிறது

கடைசியாய் நீ அழுத சத்தம்
காதருகே……….

பார்த்ததில் பிடித்தது....