Saturday, October 4, 2008

தி(ரு)ரி விளக்கு.............



மனம் நிறைய
ஆயிரமாயிரம் மின் மினிப் பூச்சிகள்
ஜன்னல் ஓரத்து இரயில் பயணத்தில்
இருள் கவியும் இது போன்ற மாலைப் பொழுதில்
தொலைவில் தெரியும் சில தி(ரு)ரி விளக்குகளை காணும் பொழுது….
........................><...................................

இருட்டு உலகத்தின்
அசைந்தாடும் பவுர்ணமியாய்- அந்த
ஒற்றை வாசல் வீட்டின் உள்ளே
ஒரு திரி விளக்கு……….

எவ்வளவு நாட்களாயிற்று…?
திரி விளக்கின் அருகாமை அனுபவித்து…
........................><...................................
காலம் காலமாய விளக்கெரிந்த
காளி கோயிலிலும் விளக்கில்லை
பாழாய் போன பல்பு ஒன்று
அநாதையாய் தொங்கிக் கொண்டிருந்தது
வயிறு வீங்கி…
சமீபத்தில் என் கிராமம் எனக்களித்த ஏமாற்றங்களில்
இதுவும் ஒன்று…
........................><...................................
செவ்வக தகரப் பெட்டியும்
பிரித்துப் போட்ட புதுத் துணியின் வாசமும்
திரி விளக்கின் அருகாமை கதகதப்பும்
மார்கழி மாத குளிருக்கு இதமாய் - மஞ்சள்
ஒளிப் பிரவாகமும்
பட்டணத்து ஏலக்காரனின் குரலை விட வசீகரமானவை…..
ஜில்லப்பா…
அப்பாவின் குரல் வரும் வரை- அநுபவிக்கும்
அந்த சுகமான ஏல அநுபவம்…. திருட்டுத் தனமாய்…
........................><...................................

மார்கழி குளிரின் முன் பனிக் காலத்தில்
ஏரி மதிலில்
பள்ளம் வெட்டி
ஈசல் தழையுடன்
அந்த திரி விளக்கை ஏந்தி செல்வதுதான்
எத்தனை சுகம்- திகிலோடு…
கொட்டப் போகும் ஈசல் பூச்சிகளை நினைத்து
பரிதாபத்துடன்,
மன சாட்சி உறுத்த…. உறுத்த…..
........................><...................................
ஈரச் சோளம் மணக்க …. மணக்க….
சாயங்காலம் சோளம் அரைத்த
கல் இயந்திரத்தின் அருகே
ஐந்தாம் வகுப்பு ஆங்கிலப் பாடம் படித்து
ஆயாவிற்க்கு கதை சொன்னதும்
இது போன்ற ஒரு திரி விளக்கின்
வெளிச்சத்தில் தான்…
........................><...................................
நான் கூட அறிமுகம் செய்வேன்
என் மகனுக்கு
ஒருநாளேயினும் மின்சாரம் அனைத்து
வீடு முழுவதும்
ஒரே ஒரு திரி விளக்கேற்றி
செயற்க்கையாய்….
........................><...................................
பாதுகாக்க வேண்டும்
பேரீச்சம் பழக்காரனை எதிர் பார்க்கும் ராந்தலையும்
மாட்டுத் தொழுவத்தில் செருகி வைத்திருக்கும்
திரி விளக்கையும்
அடுத்த சந்ததிக்கு…..

Wednesday, October 1, 2008

ராமன் தேடிய சீதை….

மழை நின்ற பின்பு தூறல் போல – உனை
மறந்த பின்பும் காதல்…

அலை கடந்த பின்பு ஈரம் போல – உனை
பிறிந்த பின்பும் காதல்

……………..

இந்த வரிகளையும், இசையையும் மட்டுமே நம்பி, உதவி இயக்குனரான நண்பனுடன் சண்டை போட்டு,(சின்னத் திரை தொடராம் இப்படம்) அவனுடனே சென்ற தமிழ் படம்….

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு தெளிவான தமிழ்ப் படம். ஆரம்பம் முதல் முடிவு வரை அத்தனை தெளிவு, துணிச்சல்..வாழ்க இயக்குனர்…(1)

பல பெண்களில் தன் சீதையை தேடும் ஒரு கற்கால ராமனின் கதையும்.,தற்கால பெண்களின் எதிர் பார்ப்பும் தன் ராமன்களைப் பற்றி…இது தான் கதைக் களம்…

மூன்று கதாநாயகர்கள், ஐந்து கதாநாயகிகள்..இவர்களின் பாத்திரப் படைப்பு, அதர்க்கும் மேலாக இவர்களை கையாண்டிருக்கும் துணிச்சல், வாழ்க இயக்குனர்……(2)


தமிழ் மக்களுக்கு…. எப்படியாவது இப்படத்தை வெற்றி பெறச் செய்து, இது போன்ற திரைப் படங்கள் வளர்ந்து, ஒரு திரைப்படத்தில் ஒரு கதாநாயகன் என்ற ஏகாதிபத்திய உணர்வை தூக்கி எறிந்து, ஒவ்வொரு நடிகனின் முதலமைச்சர் கணவை உடைத் தெறிவோம்…..

திரைப் படத்தில் அழகான சிறுகதைகளாய் பசுபதியும், நிதின் சத்யாவும்….நடிகர் சேரனை விட இவர்கள் இருவரும் தொலை தூரத்தில் முந்தி ஓடிக்கொண்டு…. வாழ்க இயக்குனர்…(3)


நடிப்பும், பாவனைகளும் வராத போது இம்முறை கை கொடுத்திருக்கிறது சேரனுக்கு திக்கு வாய்..இன்னும் எத்தனை படத்தில் தான் முகத்தை மூடி அழுவது… வாழ்க இயக்குனர்…(4)


இது போன்ற படத்தை நடித்து, விளம்பரம் செய்து கொடுத்ததற்க்கும், நடிகையின்(நவ்யா நாயர்) கையால் பிரம்படி வாங்க தயாராக இருக்கும் ஒரே தமிழ் கதா நாயகன், தான் (ego) மறந்து. நடித்ததற்க்கும்- நன்றி இயக்குனர் சேரன் அவர்களுக்கு….

அசிங்கப் பட்டு, நிராகரிக்கப் பட்டு, அவமானப் பட்டு தியாகம் செய்யும் பாத்திரம் சேரனுக்கு இந்தப் படத்திலும்.. அளவெடுத்து தைச்ச சட்டை மாதிரி….பாந்தமாய் சேரன் கதாபாத்திரம்..

கதாநாயகியின் கனவு பாட்டுல வந்து , அவ நெருந்கி வரும் போது கருப்ப் கண்ணாடி போட்டு, விலகி போறது MGR, சிவாஜி காலத்து வழக்கம்..திரை அறங்கில் சத்தமிட்டது உங்கள் அலுவலகம் வரை கேட்டிருக்கும்னு நினைக்கிறேன்… வேண்டாம் ஐயா…

ஐந்து கதாநாயகிகளும் இயக்குநர் தங்களை தேர்வு செய்ததை நியாயப் படுத்தி இருக்கிறார்கள். வாழ்க இயக்குனர்…(5)


அழகான ஆறாவது கதாநாயகியாய் வித்யாசாகரின் இசை..

நாலஞ்சு அழுகை காட்சிகள் வந்தாலும் படத்தை சின்னத் திரை தொடரா பாக்கிற காலம் இது, இயக்குனர் அவர்களே.. கவனம்..

திருஷ்டி பொட்டாய் அந்த கடைசி காட்சி….விமலா ராமன் தன் விருப்பதை சேரனிடம் தெரிவிக்கும் இடம்….இன்னும் கொஞ்சம் நல்லா முயற்சி செய்யுங்க ….

இன்னும் கொஞ்சம் முயற்சி பண்ணா, அமீர், வெற்றிமாறன், வெங்கட்பிரபு பக்கத்துல ஒரு இடம் நிச்சயம்.. வாழ்க இயக்குனர்…(6)

ஒரு குடும்பத்தோட, எல்லோரும் பாக்க கூடிய ஒரு நல்ல பொழுது போக்குத் திரைப் படம்… வாழ்க இயக்குனர்…(7)

பார்த்ததில் பிடித்தது....