Friday, December 26, 2008

பிடுங்கி நட்ட சில நாட்களில், குளிரில்…..

புலம் பெயற்தலை எழுத நினைத்ததும்
நினைவுக்கு வருவது…

கண்ணீரும் கம்பலையுமாய்- புருஷன்
வீட்டுக்குச் சென்று-ஒன்பதாம் மாதம் சிரித்துக்கொண்டே
தாய் வீடு திரும்பிய பக்கத்து வீட்டு அக்கா…

பாலா படத்து இலங்கைத் தமிழ்- அகதிப்
பெண்ணொருத்தி…

வாரத்துக்கு விட்டு-முதற்
கன்றை வளர்த்தவனிடம் தாரை வார்த்து
சோகமாய் நிற்கும்
மாட்டுத் தொழுவத்து லச்சுமி…..

வாத்தியார் தோட்டத்தில் இருந்து- யாருக்கும்
தெரியாமல் பிடுங்கி நட்ட
பலாச் செடி….

இப்படி எத்தனையோ….


ஆனால்
தொழிலுக்காக சொந்த மண்ணை பிரிந்து
ஏதோ ஒரு ஊரில்/நாட்டில் வாழும் வாழ்க்கை கூட
புலம் பெயற்தலாய்- சில நாட்களுக்கு முன்புவரை
தெரியாமல் தான் போனது…..

………………………………………………..

சமையல் என்பது
சமையலறையில் செய்து
சாப்பாட்டு மேசையில் பரிமாறப் படவேண்டியது
சாப்பாட்டு மேசையில் செய்து
அங்கேயே பரிமாறப் படவேண்டியது அல்ல..
எத்தனை முறை கத்தி இருப்பேன்..?

இப்படி
வரண்டு போன ரொட்டித் துண்டு
பச்சைக் காய்கறி
நாற்றமடிக்கும் ஊறுகாய்
தூசு படிந்த பச்சை மிளகாய்
அழுக்கான பொடி உப்பு- இவை கலந்து
சாப்பாட்டு மேசையில் உணவருந்தும் போது-சில
நொடிகளில் எனை கடந்து போகிறது
என் கத்தல்களில் எதிரொலி
இத்தனை நாட்கள் கடந்து…..
இத்தனை தொலைவு கடந்து……


…………………………………………………...

எதற்க்காக இவ்வளவும்..?
பள்ளியில் சின்னவன்
போன வாரம் சமைந்த பெரியவள்
பொண்டாட்டி கையால சாப்ப(பா)டு…
தம்பி கூட சொத்து சண்டை
மளிகைக்கடை சம்பளம்
திருவண்ணமலை மச்சான் வாழ்க்கை கூட
நன்றாகத்தான் இருக்கிறது-என்னைவிட
ஒரு வயது சின்னவனாக இருந்த போதும்….

………………………………………………………

விசா, பாஸ்போர்ட்டு மட்டும் தான் இல்லை
மற்றபடி எனக்கென்னவோ- இது
மற்றுமொரு பாகிஸ்தானாகத்தான் தெரிகிறது
பச்சைக் கொடியும், இயந்திர துப்பக்கிகளும் இல்லாமல் - ஹிந்தி மட்டும்
வித விதமாய் எல்லா இடங்களிலும்….
.
வாழ்க தமிழ்ப் பெரி(யா)யோர்….

………………………………………………………..

குளியலறை மின்சார சுடுதண்ணீர் பாத்திரத்தின்
மின்சாரம் தாக்கி இறந்து போன
என் சடலத்திற்க்கு கேட்காது
பெற்றோரின் அழைப்புகளுக்கு மணியடித்து மணியடித்து
இறந்து போன - என்
அலைபேசியின் மௌனம்
மரண அஞ்சலி செலுத்தலாம் எப்போதும் சமையலறை
வந்து போகும் அந்த திருட்டு(கருப்பு) பூனை
நன்றிக் கடனாய்….
……………………………………………………………

நாட்டைப் பிரிந்து வருவோர் தான் அகதிகளா..?
மொழியைப் பிரிந்து வருவோரும் அகதிகள் தான்....?
தமிழ் அகதி முகாமுக்கு வழி தெரிந்தால் சொல்லுங்கள்

தமிழில்….

(சன் தொலைக்காட்சி முக்கியம்)
………………………….

சமஜ் நஹி
நீச்சே…
பீச்சே…
சீதா ஜாவோ..
…….
……..

தூசு படிந்து நானும், அழுக்காய் இந்த நாடும்
ஹிந்தி பேசிக் கொண்டே…

“தத்தி பயலுவ…
இந்த ஹிந்திகார பசங்களுக்கு புத்தியே இல்ல..”

இன்னும் சில மாதங்களில்
புதியதாய் புலம் பெயர்ந்த ஏதோ ஒரு தமிழனின்
புலம்பலுக்கு ஆளாக நேரிடும்
நான்…..

இப்படிக்கு

ஒரு தில்லி வாசி

Monday, December 22, 2008

Rab Ne Bana Di Jodi



அவ்வை ஷண்முகில ஆரம்பிச்சு, பார்த்தீபன் கணவுல பயணம் செய்து, kabhi alvida naa ல முடிஞ்ச ஹிந்தி படம்….

வழக்கம் போல ஷாருக்கான், வழக்கம் போல ஒரு புதிய நாயகி, வழக்கம் போல காஜோல், வழக்கம் போல ரெண்டு, மூணு பாட்டு கதா நாயகிகள்…

வழக்கம் போல யாஷ் சோப்ராவின் சென்டிமென்ட் காதல்…

படத்துல நாயகனாய் ஒளிப்பதிவாளர்…ரவி கே சந்திரன்…பிளாக்.,சாவரியா படத்துக்கு அப்புறமா ஒரு நல்ல ஒளிப்பதிவோட ஒரு படம்…கண் கொள்ளா காட்சிகளாய்…

ஒரு நல்ல பாட்டு படம் முழுவதும்…

ஷாருக்கான் பிடிக்கறவங்களுக்கு மட்டும்…

Monday, December 15, 2008

எழுத்தாளனாகிய நான்….


எப்போதும் யாரோ- உடைந்த
சிலேட்டில் கவிதை எழுதி
கண் முன் காட்டுவதைப் போல..


கை பிடித்து-கையில் பேனா பிடித்து
காதலியின் வாஞ்சையுடன்
குருவின் ஆசியுடன்
யாரோ எழுதிச் செல்வதைப் போல….

அழகான கருவை - எழுதி முடிக்குமுன்
இறந்து போன அற்ப ஆயுசு கவிஞனின்- ஆவி
என்னுள் புகுந்து எழுதுவதைப் போல- பயமாய்
ஆனால் கையெழுத்து தெளிவாய்………..

மொத்தத்தில் என்
எல்லா கவிதைகளையும் - நான் எழுதாமல்
யாருடையதாகவோ...
மாற்றான் மனைவியாய்…..
எப்போதும் அழகாய்
அடுத்த வீட்டு குழந்தையாய்
எட்டி நின்று பார்க்கத்தான் முடிகிறது….

இந்த கவிதையும் சேர்த்து….
ஆனாலும் எழுதிக் கொண்டிருக்கிறேன்
நிறுத்த முடியாமல் வசியத்திற்க்கு கட்டுப்பட்டது போல…..

பார்த்ததில் பிடித்தது....