எங்க வீட்டு
- கொர கொர (ஓட்ட) ரேடியோவ விட- சரோஜாக்கா
வீட்டு (மர்பி) ரேடியோலதான் எப்பவும்
பாட்டு நல்லாந்துருக்கு...
- திண்டிவனம் வாத்தியார்ட்ட வாங்கின ரெட்டை ஸ்பீக்கர்
டேப் ரெகார்ட விட - எதுத்த வீட்டு பிலிப்ஸ் செட்ல தான்
விதி கதை வசனம் தெளிவா கேட்டது....
-பெங்களூர்ல வாங்கின புஷ் டிவிய விட பஞ்சாயத்து டி.வி லதான் - படம் நல்லா தெரிஞ்சுது (கருப்பு வெள்ளையாய்)
அந்த பெரிய ஆன்டென்னாவை, எப்படி திருப்பினாலும்
- தீபாவளி போன்ஸ்ல வாங்கின கலர் டி.வி யா விட சித்தி வீட்டு பிளட் டி.வி படம் பளிச்சின்னு தெரியுது- இப்பவும்
இவை எல்லாம் கடந்து சென்ற சில நொடிகளில்
- என் அப்பா தத்தாவாகி இருந்தார்
- நான் அப்பாவாகி இருக்கிறேன்
- என் மகள் எங்கள் வீட்டு LED டி.வி பிடிக்காமல் -தன்
பெரியம்மா வீட்டு 59’’ 4K -இல் Twenty Twenty உலகக்கோப்பை காணச் சென்றுகொண்டிருக்கிறாள்