Sunday, August 10, 2008

குசேலனும், ரஜினி என்ற ஒரு சமூக குறியீடும்….


பிரும்மாண்டம் என்ற பெயரில் ஒரு அரை வேக்காட்டுத்தனம்.......


எல்லா பத்திரிக்கைகலும், ஊடகங்கலும் ஏகத்துக்கு திட்டி தீர்த்து விட்ட நிலையில், குசேலன் தரும் பாடங்கள் எனது பார்வையில்….

நட்பை அடி நாதமாக கொண்ட ஒரு திரைக்கதையில் , நட்பையும், அதன் ஆழங்களையும் திரைக்கதையில் சொல்ல முடியாமல் போனதே படத்தின் மிகப் பெரிய பலவீனம்…..

ரஜினி என்ற ஒரு சமூக குறியீட்டை கடவுளாக, அடுத்த தலைமுறை அரசியல் தலைவராக, தமிழ் நாட்டின் குல தெய்வமாக காட்டும் முயற்ச்சியில் பி.வாசு எவ்வளவு வெற்றி பெற்றார் என்பது, ரோபோ விற்க்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்பதை பொறுத்தது…

சந்திரமுகியின் தாக்கம் படம் முழுவதும், அதை நியாப்படுத்த அண்ணமலை பகுதி -11 வேறு…

பாவம் பசுபதி.. மலையால சீரினிவாசனை அப்படியே காப்பி அடித்துக் கொண்டே…நீங்களுமா பசுபதி..?

ஆறுதலாய், இசை. நன்றி ஜி.வி.பிரகாஷ்….வாழ்க உமது இசைப் பயணம்…


ஒளிப்பதிவு- அரவிந் கிருஷ்ணா..- எனது மதிப்பிற்க்குறிய ஒளிப்பதிவளர்களில் ஒருவர். இந்த கதைக்கு இப்படி ஒரு ஒளிப்பதிவு தேவையா..?கேமிரா கோணம், வண்ணம், அகேலா… ஜிம்மி ஜிப்.....



பி சி சிரிராம் அவர்களே தேவர் மகன் இப்படி பண்ணவில்லையே..?



ரவி .கே.சந்திரன் சொல்வது போல ஒளிப்பதிவு என்பது தனித்து தெரியக் கூடாது….அது சரி. ரஜினியும், பி.வாசுவும் செய்யும் போது , நீங்கள் மட்டும் செய்யக்கூடாதா என்ன?


ரஜினி படத்தில் வடிவேலுவா..? இல்லை வடிவேலு படத்தில் ரஜினியா..?
கேவலமான நகைச்சுவை மற்றும் காட்டுக்கத்தல் இலவசமாய்…

சென்னை புறநகரில், ஏதோ ஒரு திரை அறங்கில் நாலே நாட்களில் குசேலன் எடுத்து விட்டு “வன லோகத்தில் சொப்ன சுந்தரி” போட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்…நம்ம நயன்தாரா ஒரு பாட்டு முழுவதும் நனைந்து நடிக்காததை, வடிவேலு மனைவி உடற் பயிற்ச்சி செய்து நடிக்காததை , அப்படி என்ன வ.லோ.சொ. சுந்தரி (நடிச்சு) காட்டப் போறாளோ தெரியல…

வரட்டும் இது போன்று குசேலன்கலும், குருவிகலும், சுப்ரமணியபுரங்கலும்..அன்னப் பறவையாய் நாம் இருக்கும் வரை தமிழ் சினிமா வாழும், தமிழும் வாழும்…………

ரஜினி என்ற ஒரு சமூக குறியிட்ற்க்கு..(தமிழ் நாட்டின் தலையெழுத்து…)

நன்றி திரு ஆர். சுந்தர்ராஜன் அவர்களுக்கு- நியாமான கேள்விகளை கேட்டதற்க்கு, விட்டுப் போன சில கேள்விகள் இதோ…

1.கர்நாடகத்தில் குசேலன் திரையிடாமல் செய்ததற்க்கு கன்னடதில், தெலுங்கு தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்ட நீங்கள் ,அன்று தமிழனும், தமிழ் திரைப்படங்கள் தாக்கப்பட்டபோது எங்கு சென்றீர்கள்..வழக்கம் போல இமய மலைக்கா..?

2.ஒகெனகல் கூட்டு குடி நீர் திட்டம் குறித்து தங்கள் கருத்து என்ன..?

திரு. விஜயகாந்த் போல கொடி காட்டி, கை அசைத்து, முதலமைச்சர் கனவு காண்பதற்க்கு முன், அவரைப் போல நிலையான, தெளிவான ஒரு நிலைப் பாட்டை எடுக்க முயலுங்கள்…
இல்லை எனில் ஒரு நடிகனாக மட்டுமே உங்கள் அடையாளங்களை பிரதிபலியுங்கள்…..தயைகூர்ந்து….

இப்படிக்கு
எழுபது ரூபாய் கொடுத்து உங்கள் படம் பார்த்த,

நுகர்வோராய் ஒரு தமிழன்











4 comments:

Known Stranger said...

image panal.

Anonymous said...

hi venkat,
kuselan yendra padam malayalathil paarthal sreenivasan than hero mamooty illai tamililum adhei dhaan irukka veindum aanaal p.vasu rajiniya illuthadaal avarakku talai kaal puriyavillai adhunaal pasupathya marundhuvittu rajiniku mukiyathuvam kuduthu yellam sodhipi vitaan.yenakku terindhu varai indha padathai remake saida podhu character kudupathil mistake seidhu vitaargal rajini yedathil sharatkumarai pottu irundhaal match aagi irukkum yen enil avan alagagavum irupaan adhei samayathil avarukku mukiyathuvam kudukkamal oru guest appearance endru kaati irukkalaam.adhei pol pasupathy serious manidhan avar sreenivasan pol humour sense panna mudiyavillai adhu naal avan characteril ganja karupano illai yenil karunasayo illai nalla match yenakku terinda varaiyil living stunayo (yosithu paar sollamale padam comedy ku comedy serious ku serious)pottu irukkalaam. aanaal adhu pol seidhu irundaal adhu oru just ordinary padam pol terindhu irukkum aanaal kandippaaga hit aagi irukkum. yennai poruttha varaiyil late pick up aagi irukkum. rajini kuselan pandiyano illa naatuku nallavan yendra padam listil sendhu irukkaadhu. ippodhu sondha kadai yosika maatein ingiraargal unnum paarungal yettanai remake vara pogiradhu udharnathuk
aaegan - main hoon na
villu - soldier
ajit film - race
puriyavillai yenakku
unnum yetanai kaalam dhaan yemaatuvaargal indha naatila indha naatila
kutram irundhaal manikkavum
ippadikku ungal nanban

Anonymous said...

தமிழனின் மானம் ஒரு நடிகனின் கையில் இருப்பதாக நினைப்பவர்களைப் பார்த்து உண்மையில் எவ்வளவு பலவீனமானவர்கள் என்றே பரிதாபப்படவேண்டி இருக்கிறது. கலைஞர் கருணாநிதியும் சரி, ஜெயலலிதாவும் சரி, இதுவிசயத்தில் வாய்திறக்கமல் இருப்பதற்கு அது ரஜினியின் தனிப்பட்ட முடிவு என்று தெளிவாக அறிந்து இருக்கிறார்கள்.



தமிழ்நாட்டு மக்களை வைத்து சம்பாதித்ததால் அவர் கருத்து தெரிக்க வேண்டுமென்றால், ரிலையனஸும், டாடாவும் கூடத்தான் தமிழர்களை வைத்து சம்பாதிக்கிறார்கள். அவர்களின் அரசியல் நிலைப்பாட்டை ஏன் நீங்கள் கேட்கவில்லை. எல்லாப் பொது விசயங்களிலும் ரஜினியை கருத்து தெரிவிக்க நிர்பந்தித்து அவரை அரசியல்வாதி ஆக்குவது உங்களை போன்ற

Anonymous said...

[B]NZBsRus.com[/B]
Dont Bother With Sluggish Downloads Using NZB Files You Can Swiftly Find HD Movies, Games, MP3s, Software and Download Them at Alarming Rates

[URL=http://www.nzbsrus.com][B]Usenet Search[/B][/URL]

பார்த்ததில் பிடித்தது....