Tuesday, August 19, 2008

சத்யம் சொல்லும் சத்யங்கள்...


சத்யம் IPS

சில பல நாட்களுக்கு முன் ஒருநாள்….

நடிகர் விஷாலும், இயக்குனர் ராஜசேகரும் சத்யம் படத்தை பற்றிய விவாதத்தில்…..

ரா: சட்டமும், சாமியும் ஒன்னு
இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு இதுதான் இந்த படத்தோட ஒரு வரி கதை

ரா: இந்த படத்துல நீங்க ஒரு காவல் அதிகாரியா நடிக்கறிங்க …

வி: சரி,சரி கதையய் சொல்லுங்க முதல்ல..

ரா: ஒரு முதலமைச்சருக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனைல சேர்க்கப் படராரு சார்.அவரு கூடிய விரைவில் இறந்து விடுவார்ன்ர நம்பிக்கைல அவருக்கு அடுத்த நாலு மந்திரிகலும் அந்த பதவிக்கு போட்டி போடராங்க .அதுல ஒரு மந்திரி மத்த மூணு அமைச்சர்களையும் கொலை பண்ண மும்பையில் இருந்து ஒரு வாடகை கொலையாளியய் அமர்த்தி கொலை பண்ண திட்டம் தீட்டராரு.

திட்டப் படி உணவு அமைச்சர் நடு தெருவில் தனது சிற்றுந்தில் வைத்து கொல்லப் படராரு….

துடிப்பான காவல் அதிகாரியான உங்க கிட்ட அரசாங்கம் இந்த வழக்கை விசாரிக்க உங்களை நியமிக்க, நீங்களும் கொலையாளியய் தேட ஆரம்பிக்கறிங்க

வி: கதை ரொம்ப நல்லா இருக்கே, மேல சொல்லுங்க…

ரா: சுகாதார அமைச்சர் ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் போது பின் மண்டைல துப்பாக்கி குண்டு தாக்கி இறந்து போறாங்க..
உங்க பாதுக்காப்புல இருக்கும் போதே…

இந்த செய்தி கேட்டு மிகவும் சந்தோஷமடையும் நிதி அமைச்சர் தனது வாடகை கொலையாளியய் கூப்பிட்டு பாராட்டும் போதுதான் தெரியுது இதெல்லாம் அவன் செய்யலைன்னு…..

அப்ப இந்த கொலைகளை செய்த கொலையாளி யாரு…அவனோட அடுத்த இலக்கு யார்..?

மீதமிருக்கற இரண்டு அமைச்சர்களும் ஒருத்தரை ஒருவர் சந்தேகிக்க, சாவு பயம் இரண்டு பேர்கிட்டேயும்…

இதற்க்கு இடையில் வேட்டையாடு விளையாடு பாணியில் நீங்க கொலையாளியய் நெருங்க…. நெருங்க….

அவனது மூன்றாவது இலக்கு வனத்துறை அமைச்சர் எனத் தெரிந்து அவரை காப்பாற்ற முடியாமல் கொலையாளி மூன்றாவது கொலையை செய்த பின் அவனை துரத்தி பிடிக்கறீங்க ….

அப்ப தான் தெரியுது , நீங்க யார பாத்து இந்த காவல் துறைக்கு வந்திங்களோ அந்த காவல்துறை கண்கானிப்பாளர் தான் அந்த கொலையாளின்னு….

சட்டமும், சாமியும் ஒன்னு,இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அப்படின்னு சொல்லிக்கொடுத்ததே அவர் தான்….

அப்படி சொன்ன அதிகாரியே இப்போ “சட்டமும் செத்து போச்சி சாமியும் செத்து போச்சி அதனால தான் நானே சட்டமாகவும் , சாமியாகவும் மாறி தண்டனை கொடுத்தேன்னு சொல்றாரு….

இல்ல சட்டமும், சாமியும் ஒன்னு,இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அப்படின்னு நிருபிச்சு உங்களுக்கும் அதே சட்டத்தால தண்டனை வாங்கித்தற்றேன்னு நீங்க…

அதுக்கு முன் அந்த நாலாவது அமைச்சரோட தப்பை எல்லாம் வெளி உலகத்துக்கு சொல்லி அவரை கைது பண்ண முடியுமான்னு சவால் விடரராறு அவரு….

இந்த சாவால்ல நீங்க வெற்றி பெற்றீர்களா இல்லையா என்பது தான் முடிவு…

வி: அருமையா இருக்கு, ஆமா…,படத்துக்கு நயன்தாரா 30 நாட்கள் கொடுத்து இருக்காங்க, யுவன் வேற அழகா ஐந்து பாட்டு போட்டு இருக்கார் அத என்ன பன்றது..?

ரா:உங்களுக்கு கை கால் விளங்காத அம்மா…உங்க அடுக்கு மாடி குடி இருப்பில கதாநாயகி நயன் தாரா…உங்க அம்மாக்கு நீங்க உதவும் போதும், நயன்தாரா உதவும் போதும் ஐந்து பாட்டு வைச்சிக்கலாம் …

வி:சரி அடித்தட்டு மக்களுக்காக படத்துல சண்ட..?

ரா:வைச்சிருக்கேன் ..ஐந்து சண்டை…நீங்க முப்பது பேரை அடிக்கரீங்க..வெத்து உடம்போட…

ஒரு காட்சில நீங்க ஒரு பந்த எட்டி உதைக்க அது ஐந்து பேர அடிச்சு வீழ்த்திட்டு அப்படியே உங்க திரும்பி வந்து உங்க உள்ளங்கையில சுத்தோசுத்துன்னு சுத்துது..தலை கீழா..புவியீர்ப்பு விசைக்கு கட்டுப்படாம…

வி: பலே…தெலுங்குல 100 நாள் நிச்சயம்…தமிழ்ல படம் காக்க காக்க மாதிரி இருக்கனும் ..

ரா: கண்டிப்பா..ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் அப்புறமா ஆர்.டி.ராஜசேகர் எல்லோரும் இருக்காங்க …

வி: இருக்கட்டும், இருக்கட்டும் அவருதான் இந்த படத்தை இயக்கி இருக்காருன்னு படத்தோட விளம்பரத்தில போட வசதியா இருக்கும்…

மற்றவை வெள்ளைத்திரையில்................

--------------------X-----------------------

பாராட்டுகள்

வசனகர்த்தாவின் அனல் பறக்கும் வசனத்திற்க்கு..

சட்டமும், சாமியும் ஒன்னு, இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு

Encounter என்பது காவல் துறையின் கையாலாகத்தனம்

ஒரு அரசியல் வாதிக்கு கத்தி தியாகு,மீசை கோபி, ஒயின்ஸ் முருகன், கத்தி குமார் போலத் தான் காவல் துறையும், காசு கொடுத்து கொல பண்றதுல....

உபேந்திரா, தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல வில்லன்…….

யுவனுக்கு ,,,

6 பேக் விஷாலுக்கும், நயன் தாராவுக்கும்

கடைசியாக

ஒரு அழகான கதை, வணிக திரைப்படம் என்ற காரணத்தால் அலங்கோலமாக கற்பழிக்கப்பட்டு , பரிதாபமாய்…

தமிழ் திரையுலகத்தை யாராவது காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கையில் …….

தமிழன்

Sunday, August 10, 2008

குசேலனும், ரஜினி என்ற ஒரு சமூக குறியீடும்….


பிரும்மாண்டம் என்ற பெயரில் ஒரு அரை வேக்காட்டுத்தனம்.......


எல்லா பத்திரிக்கைகலும், ஊடகங்கலும் ஏகத்துக்கு திட்டி தீர்த்து விட்ட நிலையில், குசேலன் தரும் பாடங்கள் எனது பார்வையில்….

நட்பை அடி நாதமாக கொண்ட ஒரு திரைக்கதையில் , நட்பையும், அதன் ஆழங்களையும் திரைக்கதையில் சொல்ல முடியாமல் போனதே படத்தின் மிகப் பெரிய பலவீனம்…..

ரஜினி என்ற ஒரு சமூக குறியீட்டை கடவுளாக, அடுத்த தலைமுறை அரசியல் தலைவராக, தமிழ் நாட்டின் குல தெய்வமாக காட்டும் முயற்ச்சியில் பி.வாசு எவ்வளவு வெற்றி பெற்றார் என்பது, ரோபோ விற்க்கு பிறகு ரஜினியின் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்குமா? இல்லையா என்பதை பொறுத்தது…

சந்திரமுகியின் தாக்கம் படம் முழுவதும், அதை நியாப்படுத்த அண்ணமலை பகுதி -11 வேறு…

பாவம் பசுபதி.. மலையால சீரினிவாசனை அப்படியே காப்பி அடித்துக் கொண்டே…நீங்களுமா பசுபதி..?

ஆறுதலாய், இசை. நன்றி ஜி.வி.பிரகாஷ்….வாழ்க உமது இசைப் பயணம்…


ஒளிப்பதிவு- அரவிந் கிருஷ்ணா..- எனது மதிப்பிற்க்குறிய ஒளிப்பதிவளர்களில் ஒருவர். இந்த கதைக்கு இப்படி ஒரு ஒளிப்பதிவு தேவையா..?கேமிரா கோணம், வண்ணம், அகேலா… ஜிம்மி ஜிப்.....



பி சி சிரிராம் அவர்களே தேவர் மகன் இப்படி பண்ணவில்லையே..?



ரவி .கே.சந்திரன் சொல்வது போல ஒளிப்பதிவு என்பது தனித்து தெரியக் கூடாது….அது சரி. ரஜினியும், பி.வாசுவும் செய்யும் போது , நீங்கள் மட்டும் செய்யக்கூடாதா என்ன?


ரஜினி படத்தில் வடிவேலுவா..? இல்லை வடிவேலு படத்தில் ரஜினியா..?
கேவலமான நகைச்சுவை மற்றும் காட்டுக்கத்தல் இலவசமாய்…

சென்னை புறநகரில், ஏதோ ஒரு திரை அறங்கில் நாலே நாட்களில் குசேலன் எடுத்து விட்டு “வன லோகத்தில் சொப்ன சுந்தரி” போட்டதாக நண்பர் ஒருவர் சொன்னார்…நம்ம நயன்தாரா ஒரு பாட்டு முழுவதும் நனைந்து நடிக்காததை, வடிவேலு மனைவி உடற் பயிற்ச்சி செய்து நடிக்காததை , அப்படி என்ன வ.லோ.சொ. சுந்தரி (நடிச்சு) காட்டப் போறாளோ தெரியல…

வரட்டும் இது போன்று குசேலன்கலும், குருவிகலும், சுப்ரமணியபுரங்கலும்..அன்னப் பறவையாய் நாம் இருக்கும் வரை தமிழ் சினிமா வாழும், தமிழும் வாழும்…………

ரஜினி என்ற ஒரு சமூக குறியிட்ற்க்கு..(தமிழ் நாட்டின் தலையெழுத்து…)

நன்றி திரு ஆர். சுந்தர்ராஜன் அவர்களுக்கு- நியாமான கேள்விகளை கேட்டதற்க்கு, விட்டுப் போன சில கேள்விகள் இதோ…

1.கர்நாடகத்தில் குசேலன் திரையிடாமல் செய்ததற்க்கு கன்னடதில், தெலுங்கு தொலைக்காட்சியில் மன்னிப்பு கேட்ட நீங்கள் ,அன்று தமிழனும், தமிழ் திரைப்படங்கள் தாக்கப்பட்டபோது எங்கு சென்றீர்கள்..வழக்கம் போல இமய மலைக்கா..?

2.ஒகெனகல் கூட்டு குடி நீர் திட்டம் குறித்து தங்கள் கருத்து என்ன..?

திரு. விஜயகாந்த் போல கொடி காட்டி, கை அசைத்து, முதலமைச்சர் கனவு காண்பதற்க்கு முன், அவரைப் போல நிலையான, தெளிவான ஒரு நிலைப் பாட்டை எடுக்க முயலுங்கள்…
இல்லை எனில் ஒரு நடிகனாக மட்டுமே உங்கள் அடையாளங்களை பிரதிபலியுங்கள்…..தயைகூர்ந்து….

இப்படிக்கு
எழுபது ரூபாய் கொடுத்து உங்கள் படம் பார்த்த,

நுகர்வோராய் ஒரு தமிழன்











Saturday, August 2, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்…......பகுதி-I..........................…..(ஜுலை முதல் செப்டம்பர் வரை)




நீ……
என் இத்தனை வயது பாவங்களுக்கும் பரிசு
உன் காதலா….
உன் பிரிவா..?

…………..<>…………………

நான் பார்த்ததை
ரசித்ததை
படித்ததை
கேட்டதை
மொத்தத்தில் யாரிடமும் -என்னை
பகிர முடியாமல் தவிக்கிறேனே இன்று ..
உன்னை தவிர

இதற்க்கு பெயர்தான் காதலா..?

…………..<>…………………

என்ன செய்யப் போகிறேன் …
நீ இல்லாமல் இனி.....

வழக்கம் போல
உறக்கமில்லா நடுநிசிகளில்
அலைபேசியில்
ஏழு நாட்கள் சண்டைக்குப் பின் சமாதானமாய்…
நானும் உனக்கான இடத்தில்
உன் சக்களத்தியாய்
அழகாய் அந்த தனிமையும்…

…………..<>…………………

அந்த பொண்ணுக்கு இந்த மாப்பிளையா..?
உன் நிச்சயத்திற்க்கு சென்று வந்த
என் அப்பவித் தாயாரின் ஆதங்கம்..

எல்லாம் தெரிந்தா..?
எதுவும் தெரியாமலா..?
எதுவும் தெரியாமல் நான்…..

…………..<>…………………

பெண்ணடிமைத்தனம் என்றோ
ஆணாதிக்கம் என்றோ கூறிக்கொள்..
எனக்கான நீ
அவனருகில் – உன் திருமண நிச்சயத்தில்

காதலை விட பொறாமையே பெரிதாய்…
எனக்கான ஏதோ ஒன்றை
யாரோ தட்டிப் பறித்துச் சென்று
என் முகத்தருகே
பரிகாசம் செய்வதைப் போல….

…………..<>…………………

உன்னை தோழி என்றால் அது
தோழமைக்கு இழுக்கு
உன்னை காதலி என்றால் அது
காதலுக்கு இழுக்கு

என்ன சொல்ல…?

…………..<>…………………


தொக்கி நிற்கின்றன
நான் இப்பொழுது எழுதும் எல்லா கவிதைகளும்
முடிவில்லாமல்…….

வாழ்க்கையயைப் போல..
முடிவில்லா சுதந்திரத்தில் அனந்தமாய்
தத்தளித்துக் கொண்டே….

…………..<>…………………

நிச்சயம்
நிச்சயம் வரை இது போதும்..

இன்னும் ............. நாட்கள் – உன் திருமணத்திற்க்கு

வலிக்க
வலிக்க
நிறைய எழுதுவேன்- காத்திருங்கள் நீங்களும்

வலிக்க
வலிக்க…….

பார்த்ததில் பிடித்தது....