Friday, January 4, 2008

கடிதம் எழுதுவோம்

கடிதம் எழுதுவோம்
நம் சந்தோழங்களை.........
நம் தனிமை யை.....
நம் வலிகளை.....
கடித மாக................. கடிதம் எழுதுவோம்.,

வியர்வை ஊற்றி...
இரத்தம் ஊற்றி..
கண்ணீர் ஊற்றி-
இவை ஆனதும் தீர்ந்து போகயில்.....
சிறிதே நீல மை ஊற்றி....கடிதம் எழுதுவோம்.,

தபால் அலுவலகம் நடந்து சென்று.....
செட்டியார் கடையில் கடிதம் வாங்கி
எச்சில் தொட்டு தபால் தலை ஒட்டி...
கட்டை விரல் நீல மையி தலயில் தடவி.....
கடிதம் எழுதுவோம்.,

முதல் தீண்டல்...
முதல் முத்தம்...
முதல் காதல் மட்டு மல்ல.........
முதல் கடிதமும் மறக்க முடியாததே....கடிதம் எழுதுவோம்....

இன்றே
இப்போதே தொடங்குவோம்- ஒரு கடிதம் எழுதும் இயக்கம்
இவ்வளவு வேலை யிலும்
வேதனை யிலும்..
பயணத்திலும்
அவசரத்திலும்...
ஒரு கை கடிதம் எழுதும் இயக்கம்

இந்த மின் அஞ்சல் மூலமாக............கடிதம் எழுதுவோம்.

4 comments:

Known Stranger said...

we both share plenty of common philosphoies.

சொர்ணம் said...

venkat neenga sonnathu koadiyil oru vaarthai. kaditham eluthruthu oru kaadhal maathiri. ethanaiyo vishayangalai kurippa sollamudiyatha
vishayangala, feel panni slrathuku kadithatha thavira vera entha valium kidayathu. naan yaaruku sollanum nu aasapattu aana solrathuku yaarumae illatha oru narathula enaku naanae kaditha eluthikuvaen. oru paper eduthu en manasula thonra ellathaium
kirukka arambichapa vanthathuthan intha eluthra pazhakamae. ennoda miga nanbargaluku kaditham eluthracha athula kutti kutti padam varanchu otti anuouvaen. sila neragalil malligai pookal, mayiliragu ena virumbiya vatrai vaithu anupuvaen. nan virumbium kadithathil anupa mudiyatha oru vishayam mazhai mattumthan. neraiya kaditham eluthuvom venkat

ஜோசப் பால்ராஜ் said...

கடிதம் ஒரு சுவையான விஷயம் வெங்கட்.
நான் ஒரு காலத்தில் பல கடிதங்களை எழுதியிருக்கின்றேன். எனது கடிதங்கள் எல்லாம் குறைந்தது 7 பக்கமாவது இருக்கும். எல்லோரும் அனுப்பும் இன்லன்ட் லெட்டர் எனக்கு பிடிக்காது. அழகிய இதமான வண்ணங்களில் இருக்கும் லெட்டர் பேட் வாங்கி எழுதி, கவரில் இட்டு ஸ்டாம்ப் ஒட்டி அனுப்புவதுதான் எனது வழக்கம். பல கடிதங்கள் நேரடியாக கொடுத்தவை தான். தொலைபேசி வந்து கடிதத்தை குறைத்தது, மின்னஞ்சல் வந்து கடிதத்தை ஒழித்தே விட்டது. ஆனால் கடிதம் எழுதுவதும், வாசிப்பதும் சின்ன வயதில் பள்ளிக்கு அருகே இருக்கும் கடைகளில் வாங்கி சாப்பிட்ட கம்மர்கட்டின் சுவை போன்று இன்னும் நெஞ்சின் ஒரத்தில் மறையாமல் நிற்கின்றது.

பார்த்ததில் பிடித்தது....