Tuesday, March 31, 2009

......................?


என்ன எழுத..?
யாரைப் பற்றி எழுத..?

தலைப்பு என்ன- கைவசம்
கருவும் கிடையாது ........

வலி இல்லை- சிறிதே
சந்தோஷமும் இல்லை..

பிறப்பும் இல்லை- இக்கணம் வரை
மரணமும் இல்லை....

எழுத தூண்டுவது யார்……?
படைப்பளியா..?
வாசகனா..?

எதைப் பற்றி எழுத..?
காதலையா..?
பிரிவையா..?

வடிவம் என்ன..?- கதையா..?
கவிதையா..?

குறிலா…?
நெடிலா..?

பதிக்கப் போகிறேனா..?- சுக்குச் நூறாய்
கிழித்தெறியப் போகிறேனா..?

உந்தித் தள்ளுவது- அமானுஷ்யமா..?
வெற்றிடமா..?

வெள்ளை ஓவியமாய்...........
நிசப்தத்தின் இசையாய்...................

முழுமையாய் இக்கவிதை…
ஊருக்கு சொல்லாமல் _ என்றோ பூப்படைந்த
ஏழைப் பெண்ணாய்..

இதோ இக்கவிதை-மேற் சொன்ன வரிகளில்
எங்கோ ஒரு (வரிக்) கவிதை……….

தட்டுங்கள் ,கதவு திறக்கட்டும்
தேடுங்கள், கவிதை கிடைக்கட்டும்….....

Thursday, March 12, 2009

என் இனிய கவி தா யினிக்கு…...



உனக்கும் எனக்குமான உறவுமுறை என்ன..?
நாம் எங்கு சந்தித்துக்கொண்டோம்..?
எப்போது…?
யாரால்..?
நமக்கான புரிதல்கள் என்ன..?
நான் உன்னை பின்தொடர்ந்ததையும்
நீ என்னை பின்தொடர்ந்ததையும்
நாம் அறிந்திருந்தோமா..?

மேற்க்கூறிய மேற்கோள்களின் அத்தனை வினாக்களுக்கும்
விடையாய் அந்த ஒற்றைக் கேள்விக்குறி- பெறுமிதத்துடன்….

வாய் வழியே சொன்ன வாழ்த்துரையின்
முதுகில் மறையும்
இனம் தெரியா சோகமும்
“இனம்” தெரிந்த ஏமாற்றமும்….

…………………
………………….

எனது அடையாளங்கள் உனக்குள் விதைத்திருக்கலாம்
எனக்கான அடையாளங்களை…

என்னுள்ளான உண்ர்வுகளை _ நீயும் பிரதிபலித்திருக்கலாம்
உன் கவிதைகளால்…

ஆறுதலாய் சில அனுமானங்கள்_ என் விழிவழி(யும்)
கண்ணீரை கை துடைத்து….

…………………
………………….

நானாகிய நானும்
நீயாகிய நீயும்
நாமாகவே இருந்திருக்கிறோம்- இதுவரை
இருபுற அறிமுகமில்லாமல்….

…………………
………………….

உனது கவிதைகளுக்கு கருவாய் ஒரு அழகான ஆண் மகனும்….
எனது கவிதைகளுக்கு கருவாய் ஒரு அழகான பெண் மகளும்….
எப்போதும் காதலர்களய்…!

…………………
………………….

நீ என்னை நிரகரித்ததை
நான் நிராகரித்தவள் வழிக் கேட்டபோது
என்னை சுற்றி சிரித்துச் சென்றான்_ அந்த
உடை கிழிந்த விதிக் கோமாளி
ஏளனமாய் பரிகசித்துக்கொண்டே……

…………………
………………….

இல்லாமல் போகலாம் _ இனி
உனது
வலைப் பூவில் எனது கால் தடங்களும்…..
விருந்தினர் வருகை என்னிக்கையின்
சில கூட்டுப் புள்ளிகலும்…

…………………
………………….

அத்தனை ஆண்களின் (கண்ணீரில்லா) அழுகுரலாய்
இந்த வரிகள்….

Good Luck &
Best Wishes for your Marriage Life…

என்ன செய்ய_ ஆணாகிப் போண
நா(ன்)ங்கள் என்ன செய்ய..?


மனுஷம்
12th March 2009
9W0824 Jet Airways

பார்த்ததில் பிடித்தது....