Saturday, March 10, 2018

ஒய் திஸ் கொல வெறி காலத்தின்


ஒய் திஸ் கொல வெறி காலத்தின்
ஒரு முன் இரவுப் (பனிப்)பொழுதில்...............................................
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

வருடக்கணக்காக
சுபமங்களா / காலச்சுவடு வாசித்த பின்பும்
அகனாழிகை அறிமுகமும்
விகடன் கவிதைகளிகன் பாதிப்பும்
நாஞ்சில் நாடன்,வண்ண நிலவன்,பிரமிள்,அப்துல்
ரஹ்மான் முதல் தபு சங்கர் கவித்
தோழமை கிடைத்த பின்பும்
(சொந்த/கவிதை) குறுந்தளத்தில்(aasayan.blogspot.com)
வாசகர் வருகை/பின்னூட்டம்
6967 கடந்த பின்பும்
சக வாசகனாய்(மாற்றான் தாய் மனப்பன்மையுடன்)
- என்
கவிதைகளை நானே ரசித்த பின்பும்

கட்டை விரல் காணிக்கையாக்க முடியா-
ஏகலைவனாய்
குரு, வைரமுத்துவை ஏற்றுக் கொண்ட பின்பும்

( எத்தனை குருக்கள்................?.,
இருப்பதோ நான்கு கட்டை விரல்
இட ஒதுக்கீடும் இடமளிக்காது
குருக்களின் வர்ணம் தெரியாதவரை...............
)

விகடனுக்கு அனுப்பப்பட்ட - என் கவிதைகள்
பெர்முடா முக்கோணத்தில் அமிழ்ந்து மறையும்
விதி

விகடன் தேர்வுக் குழுவின் உறுப்பினரின்
வாசிப்பும்
கவிதை குறித்த அவரது அளவு கோளின் அள()வையும்
அவரது அன்றைய குடும்ப வானிலையும் /
சென்னை போக்குவரத்தும்
மேலாலர்/பதிப்பாளர் மன நிலையும்
மேற்கொண்டவை தவிர மற்றவையும் மட்டுமே
நிர்ணயிக்கக் கூடும்- என்

கவிதைகளின் தரத்தையும்
சம கவிதைகளோடு போட்டியிடும் பலத்தையும்-
மற்றும்
வெற்றிக்கும் தோல்விக்கும் இடைப்பட்ட
தொலைவையும்...................

ஹைப்பொதீசீஸ்(உத்தேசம்)-1

அழகின் உறைவிடம்-அதை
எதிர் கொள்ளும் இரு கண்களிடமிருந்து
மட்டுமே

ஹைப்பொதீசீஸ்(உத்தேசம்)-2 -

சுபமங்களா / காலச்சுவடு வாசகரா(னா)
(*** நன்றி சன் தொலைக்காட்சி
செய்திக் குழு) கவிதை தேர்வுக்குழு
உறுப்பினருக்கு…………………………

வெளியில்லா வெற்றிடப் பிரபஞ்சத்தின்
(தண்)நீரைப்போல்
உருவமில்லா....
சுவை இல்லா...
மணம் இல்லா...
இல்லாமல்......
வெற்றிடத்தின் வாயிலின்
ஒன்றுக்கொன்று துணையாய்

அழகும்
என் கவிதைகளும்


விகடனில் தனது முதல் கவிதை வெளிவரக்
காத்திருக்கும்

மனுஷம்

ஜெட் வானஊர்தி
(நடு.....................?) வானில்
ஏதோ ஒரு புள்ளி
10-12-2011
21:54

Wednesday, September 27, 2017

படபடப்பு....





ஆள்  அரவமில்லா - முட்டுச் சந்து சுவற்றில்
ஒவ்வொரு மானுடம் க(ந )டந்து போகும் தருணங்களில்
இடுப்பு முட்டும் சிறுநீரிடமிருந்தும்
வாய் நிறைந்த (புகையிலை) எச்சிலிடமிருந்தும்
ஒருவரை ஒருவர் காப்பாற்றிக்கொண்டிருந்தனர்
நேற்றும், இன்றும், நாளையும் - கடவுளாக


அல்லாஹ்வும்
விநாயகரும்
இயேசுவும்

எதோ ஒரு படபடப்புடன் ..

ஒரு புதிய மதமும், அதை அழகாக வரையும்
ஓவியனும் வரும் வரை ................................

Wednesday, June 22, 2016


அழுவதும் ., அஃறிணையாவதும்



எதிரில் இருப்பது  மனிதனோ /மானிட்டரோ
அவனோ/அவளோ/அதுவோ அழுதால் -தான் அழுவதும்
அவன் சிரித்தால்,  தானும் சிரிப்பதும்

தன் முன்னே- அழுவதும், சிரிப்பதும்
அஃறிணையா , உயர்திணையா என்பதை மறந்து
வாழும் வாழ்க்கையே இந்த (சமூக) அஃறிணையை  , உயர்திணையாக்குகிறது

அவன் / அவள் /அது அழும்போது - நீங்கள் அழாமலும்
அவன் சிரிக்கும்போது நீங்கள் சிரிக்காமலும் வாழும் தருணங்களை
என்னவென்று சொல்வது ..?


 மனுஷம்
23 ஜூன் 2016


அழுவதும் ., அஃறிணையாவதும்






எதிரில் இருப்பது  மனிதனோ /மானிட்டரோ
அவனோ/அவளோ/அதுவோ
அழுதால் - அழுவதும்
சிரித்தால்,  சிரிப்பதும்
இல்லாது போன கணங்களில் .....

தன் முன்னே- அழுவதும், சிரிப்பதும்
அஃறிணையா , உயர்திணையா என்பதை மறந்து
வாழும் வாழ்க்கையே
இந்த (சமூக) அஃறிணையை உயர்திணையாக்குகிறது

அவன் / அவள் /அது அழும்போது - நீங்கள் அழாமலும்
சிரிக்கும்போது நீங்கள் சிரிக்காமலும்,
வாழும் தருணங்களை
என்னவென்று சொல்வது ..?


 மனுஷம்
23 ஜூன் 2016



தந்தையர் தினம் 2016...

நான் செய்த பாவங்களால் எனக்கு இரண்டாவது ஆண் பிள்ளை பிறக்கவில்லை
நான் செய்த புண்ணியங்களால் எனக்கு இரண்டாவதும் பெண் பிள்ளை பிறந்திருக்கிறது
நான் யார்..?

மனுஷம்
தந்தையர் தினம் 2016

பார்த்ததில் பிடித்தது....