Tuesday, August 19, 2008

சத்யம் சொல்லும் சத்யங்கள்...


சத்யம் IPS

சில பல நாட்களுக்கு முன் ஒருநாள்….

நடிகர் விஷாலும், இயக்குனர் ராஜசேகரும் சத்யம் படத்தை பற்றிய விவாதத்தில்…..

ரா: சட்டமும், சாமியும் ஒன்னு
இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு இதுதான் இந்த படத்தோட ஒரு வரி கதை

ரா: இந்த படத்துல நீங்க ஒரு காவல் அதிகாரியா நடிக்கறிங்க …

வி: சரி,சரி கதையய் சொல்லுங்க முதல்ல..

ரா: ஒரு முதலமைச்சருக்கு உடம்பு சரியில்லாம மருத்துவமனைல சேர்க்கப் படராரு சார்.அவரு கூடிய விரைவில் இறந்து விடுவார்ன்ர நம்பிக்கைல அவருக்கு அடுத்த நாலு மந்திரிகலும் அந்த பதவிக்கு போட்டி போடராங்க .அதுல ஒரு மந்திரி மத்த மூணு அமைச்சர்களையும் கொலை பண்ண மும்பையில் இருந்து ஒரு வாடகை கொலையாளியய் அமர்த்தி கொலை பண்ண திட்டம் தீட்டராரு.

திட்டப் படி உணவு அமைச்சர் நடு தெருவில் தனது சிற்றுந்தில் வைத்து கொல்லப் படராரு….

துடிப்பான காவல் அதிகாரியான உங்க கிட்ட அரசாங்கம் இந்த வழக்கை விசாரிக்க உங்களை நியமிக்க, நீங்களும் கொலையாளியய் தேட ஆரம்பிக்கறிங்க

வி: கதை ரொம்ப நல்லா இருக்கே, மேல சொல்லுங்க…

ரா: சுகாதார அமைச்சர் ஒரு கோவில் திருவிழாவில் கலந்து கொள்ளும் போது பின் மண்டைல துப்பாக்கி குண்டு தாக்கி இறந்து போறாங்க..
உங்க பாதுக்காப்புல இருக்கும் போதே…

இந்த செய்தி கேட்டு மிகவும் சந்தோஷமடையும் நிதி அமைச்சர் தனது வாடகை கொலையாளியய் கூப்பிட்டு பாராட்டும் போதுதான் தெரியுது இதெல்லாம் அவன் செய்யலைன்னு…..

அப்ப இந்த கொலைகளை செய்த கொலையாளி யாரு…அவனோட அடுத்த இலக்கு யார்..?

மீதமிருக்கற இரண்டு அமைச்சர்களும் ஒருத்தரை ஒருவர் சந்தேகிக்க, சாவு பயம் இரண்டு பேர்கிட்டேயும்…

இதற்க்கு இடையில் வேட்டையாடு விளையாடு பாணியில் நீங்க கொலையாளியய் நெருங்க…. நெருங்க….

அவனது மூன்றாவது இலக்கு வனத்துறை அமைச்சர் எனத் தெரிந்து அவரை காப்பாற்ற முடியாமல் கொலையாளி மூன்றாவது கொலையை செய்த பின் அவனை துரத்தி பிடிக்கறீங்க ….

அப்ப தான் தெரியுது , நீங்க யார பாத்து இந்த காவல் துறைக்கு வந்திங்களோ அந்த காவல்துறை கண்கானிப்பாளர் தான் அந்த கொலையாளின்னு….

சட்டமும், சாமியும் ஒன்னு,இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அப்படின்னு சொல்லிக்கொடுத்ததே அவர் தான்….

அப்படி சொன்ன அதிகாரியே இப்போ “சட்டமும் செத்து போச்சி சாமியும் செத்து போச்சி அதனால தான் நானே சட்டமாகவும் , சாமியாகவும் மாறி தண்டனை கொடுத்தேன்னு சொல்றாரு….

இல்ல சட்டமும், சாமியும் ஒன்னு,இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு அப்படின்னு நிருபிச்சு உங்களுக்கும் அதே சட்டத்தால தண்டனை வாங்கித்தற்றேன்னு நீங்க…

அதுக்கு முன் அந்த நாலாவது அமைச்சரோட தப்பை எல்லாம் வெளி உலகத்துக்கு சொல்லி அவரை கைது பண்ண முடியுமான்னு சவால் விடரராறு அவரு….

இந்த சாவால்ல நீங்க வெற்றி பெற்றீர்களா இல்லையா என்பது தான் முடிவு…

வி: அருமையா இருக்கு, ஆமா…,படத்துக்கு நயன்தாரா 30 நாட்கள் கொடுத்து இருக்காங்க, யுவன் வேற அழகா ஐந்து பாட்டு போட்டு இருக்கார் அத என்ன பன்றது..?

ரா:உங்களுக்கு கை கால் விளங்காத அம்மா…உங்க அடுக்கு மாடி குடி இருப்பில கதாநாயகி நயன் தாரா…உங்க அம்மாக்கு நீங்க உதவும் போதும், நயன்தாரா உதவும் போதும் ஐந்து பாட்டு வைச்சிக்கலாம் …

வி:சரி அடித்தட்டு மக்களுக்காக படத்துல சண்ட..?

ரா:வைச்சிருக்கேன் ..ஐந்து சண்டை…நீங்க முப்பது பேரை அடிக்கரீங்க..வெத்து உடம்போட…

ஒரு காட்சில நீங்க ஒரு பந்த எட்டி உதைக்க அது ஐந்து பேர அடிச்சு வீழ்த்திட்டு அப்படியே உங்க திரும்பி வந்து உங்க உள்ளங்கையில சுத்தோசுத்துன்னு சுத்துது..தலை கீழா..புவியீர்ப்பு விசைக்கு கட்டுப்படாம…

வி: பலே…தெலுங்குல 100 நாள் நிச்சயம்…தமிழ்ல படம் காக்க காக்க மாதிரி இருக்கனும் ..

ரா: கண்டிப்பா..ஆண்டனி, ஹாரிஸ் ஜெயராஜ் அப்புறமா ஆர்.டி.ராஜசேகர் எல்லோரும் இருக்காங்க …

வி: இருக்கட்டும், இருக்கட்டும் அவருதான் இந்த படத்தை இயக்கி இருக்காருன்னு படத்தோட விளம்பரத்தில போட வசதியா இருக்கும்…

மற்றவை வெள்ளைத்திரையில்................

--------------------X-----------------------

பாராட்டுகள்

வசனகர்த்தாவின் அனல் பறக்கும் வசனத்திற்க்கு..

சட்டமும், சாமியும் ஒன்னு, இந்த இரண்டு மட்டும் தான் தண்டனை கொடுக்கும் அதிகாரம் உண்டு

Encounter என்பது காவல் துறையின் கையாலாகத்தனம்

ஒரு அரசியல் வாதிக்கு கத்தி தியாகு,மீசை கோபி, ஒயின்ஸ் முருகன், கத்தி குமார் போலத் தான் காவல் துறையும், காசு கொடுத்து கொல பண்றதுல....

உபேந்திரா, தமிழுக்கு கிடைத்த ஒரு நல்ல வில்லன்…….

யுவனுக்கு ,,,

6 பேக் விஷாலுக்கும், நயன் தாராவுக்கும்

கடைசியாக

ஒரு அழகான கதை, வணிக திரைப்படம் என்ற காரணத்தால் அலங்கோலமாக கற்பழிக்கப்பட்டு , பரிதாபமாய்…

தமிழ் திரையுலகத்தை யாராவது காப்பாற்ற வருவார்கள் என்ற நம்பிக்கையில் …….

தமிழன்

1 comment:

Anonymous said...

paravalla karpanai thiran kudi iruku ongur jill natharuku . 40/100 for this vimarsanam.

பார்த்ததில் பிடித்தது....