Tuesday, September 23, 2008

நேரலையில் ஒரு கைக்கிளைக் கடிதம்….. ---- பகுதி- III

கேட்க முடியா சில கேள்விகளும்
மன்டியிட்ட மன்னிப்பும்
வாசிக்க முடியா வாழ்த்துரையும்……………..



எப்படி இருக்கிறாய் தோழி…?
எங்கு இருக்கிறாய்..?
புகுந்த வீடு பழகிவிட்டதா…?
புதுக் கணவன் தோழனாக மாறிவிட்டானா…?
சுற்றமும் நட்பும் பழகிப் போனதா..?
சமையலறை பிடிபட்டதா….?
புதுக் கணவனுக்கு முதல் முறை என்ன சமைத்தாய் …?
காதல் கணவனின் பரிசு கிடைத்தா…?
எப்படி சென்றாய்.. விமானத்திலா/தொடர் வண்டியிலா…?
தேன் நிலவிற்க்கு வடக்கா/ தெற்கா….?

எப்படி பதிலலிக்கப்போகிறாய் என் அன்புத் தோழி- இந்த
எல்லா கேள்விகளுக்கும்..?

……………………..<>……………………….

மன்னிப்பாயா தோழி..?
இந்த கேவலமான தோழனை- வழக்கம் போல

நான் என்ன செய்ய..?- ஆணாகிப் போன
நான் என்ன செய்ய..?

வக்கிரங்களும்
பொறாமையும்
ஏமாற்றமும்
விரக்த்தியும்
மதுவும்
பேரிழப்பும் - உச்சம் தொட்டு
இந்த கருப்பு பேனாவின் வழியே
வெளியேறித்தான் போகிறது
சிறிது சிறிதாய்- என்
ஆளுமைக்கு கட்டுப் பட்டு, க(விதை)களாய்…..
மன்னித்துவிடு- என் கவிதைகளுக்காய்
என்னை….

……………………..<>……………………….

நன்றாய் சாப்பிடு
வேளைக்கு உறங்கு
ஊர் சுற்றிப் பார்- கணவனுடன்
கை கோர்த்து, வழி நெடுகிலும்

என்னை எங்காவது பார்க்க நேர்ந்தால் பேசாமல் போ…


சந்தோசக் கடலில் மூழ்கி முத்தெடு- கணவன் என்னும்
பிராண வாயு பெட்டகத்தை முதுகிலும்
அவன் வாரிசை உன் வயிற்றிலும் சுமந்து…

உனக்காக மலர்ந்திருக்கலாம்- அந்த புதிய உலகத்தில்
பல அழகான (வாசம் மிகுந்த) பூக்களும்
சில நல்ல இதயங்களும்- உனக்கு பிடித்த
ஒரு நல்ல வாழ்க்கையும்
அதிகாலை சூரிய உதயம் போல- பிரகாசமாய்
ஒளிப் பிரவாகமாய்……….

வாழ்க பல்லாண்டு
பல கோடி நூராயிரம்
என் அன்னையின் அருளால்…

வாழ்க என் தோழி நலமாய்- வளமாய்
என்றென்றும்


மனம் குளிர வாழ்த்தும்

தொலைதூரத்து வழிப்போக்கன்

---------------------சுபம்------------------------------------------

1 comment:

Venkata Ramanan S said...

இருபதுகளில் சந்தித்த காதலியின் பிரிவை விட, இரண்டில் கை பிடித்து விளையாடிய தோழியின் பிரிவு கொடுமை தான் .. அருமையான வரிகள் ...

பார்த்ததில் பிடித்தது....