Saturday, May 31, 2008

The Lives of Others- Germany



DAS LABEN DER ANDEREN

....................................................


ஒரு சராசரி ஜெர்மானிய படத்தை நினைவூட்டும் ஆரம்ப காட்சி.நாஜி ராணுவ வீரனைத் தொடர்ந்து செல்லும் கைதியும் ராணுவ வீரனின் பூட்ஸ் ஒலியும்….

அடுத்த காட்சியில், மனோதத்துவ/குற்றவியல் பிரிவு வகுப்பறையில் ஆசிரியரும் சில மாணவர்களும்…

இங்கே சிறை அதிகாரி (HGW XX/7)
குற்ற விசாரனை செய்ய, அங்கே அதே சிறை அதிகாரி ஆசிரியராய், தன் அனுபவங்களை பாடமாய் எடுத்துக்கொண்டு இருக்கிறார்….

ஒரு நல்ல திரைப்படத்திற்க்கு எடுத்துக்காட்டாய் வேறென்ன இருக்க முடியும் இதை விட….

………………….

கிழக்கு/மேற்கு என பிளவு பட்டு இருந்த ஜெர்மெனியை பின் புலமாக கொண்ட கதைக் களம்…

அந்த சமுதாயச் சூழலில் கதையின் நாயகனாய் ஒரு நாடக இயக்குனர், அவன் காதலியாய் அழகான நாடக நடிகை, அந்த நாடகத்தை காண வரும் ஒரு அரசியல் வாதியின் மோகம் அந்த (நிஜ) கதா நாயகியின் மீது..

இங்கே தொடங்குகிறது இந்த காதல் கதை….

ஒரு யாருமில்லா இரவில், நாயகனின் வீடு ராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டு, வீடெங்கும் உளவுப் பொருட்கள் பதிக்கப் படுகின்றன, (20 நிமிடத்தில்) இரகசியமாய்…

இதை அறியா நாயகனின் நடவடிக்கைகள் பதிவாகின்றன… உளவு பார்க்கும் அதிகாரியாய் அந்த சிறை அதிகாரி(HGW XX/7)
மூலமாக, எதோ ஒரு அறையில் அவர்களின் சல்லாபங்கலும் சேர்த்து… அரசு ஆவணமாக…

நாடக இயக்குனரோ, தனது நண்பர்களுடன் சேர்ந்து, நாஜி அரசுக்கு எதிராக, அந்நாட்டில் நடக்கும் தற்கொலைகளைப் பற்றி ஒரு புத்தகம் எழுதும் பணியில், புதிய நாடகம் என்ற போர்வையில்….

தனது காதலி அரசியல்வாதியின் அரசியல் பலத்தால் கற்பழிக்கப்படுவதை தடுக்க முடியாத அந்த படைப்பாளியின் கழிவிறக்கம்…

இவை அனைத்தும் பதிவாகின்றன, சிறை அதிகாரி மூலமாக, தொலைவில் …
……………

ஒருநாள் மறைத்து, பதுக்கி சிவப்பு தட்டச்சு செய்யப்பட்ட அந்த புத்தகம், தடுப்பு சுவற்றிற்க்கு வெளியே பிரசுரமாகிறது..

வெகுந்து எழுந்த அரசு, நாயகனின் வீட்டை துடைத்து போட்டு, அந்த தட்டச்சு கிடைக்காமல் ஏமாந்து வெளியேறுகிறது…

விசாரனையின் பாகமாய் நாயகனின் காதலியய் சிறை எடுத்து, அடைத்து விசாரிக்கிறது…

இவை அனைத்தும் பதிவாகின்றன, சிறை அதிகாரி (HGW XX/7)
மூலமாக, தொலைவில் …

எத்தனையோ சோதனைக்குப் பிறகும் உண்மையை சொல்லத அவள், உன்னை மீண்டும் மேடையேற்றுகிறேன் என்ற ஒற்றை வார்த்தைக்கு மயங்கி (நடிகை….!) தட்டச்சு இருக்கும் இடத்தை சொல்லி விடுகிறாள்..

கண்ணிமைக்கும் நேரத்தில், சிறை அதிகாரி(HGW XX/7) தட்டச்சு எடுத்து மறைத்து வைக்கிறார், கதாநாயகனுக்கே தெரியாமல்..

உண்மை தெரிந்த மமதையில் ராணுவ அதிகாரி மீண்டும் நாயகனின் வீட்டை துடைத்து போட்டு தேட, அதிர்ச்சியில் நாயகன், நாயகியை நோக்க, தான் செய்த துரோகம் தன்னை உறுத்த, வேகமாய் வீட்டை விட்டு வெளியேறி, விரைந்து செல்லும் நான்கு சக்கர வாகனத்தால் பிணமாகிறாள், சற்று முன் காதலியாய் இருந்த அந்த நாயகி…


ராணுவமோ, நாயகனின் வீட்டை துடைத்து போட்டு, அந்த தட்டச்சு கிடைக்காமல் ஏமாந்து சிறை அதிகாரியை பதவி நீக்கம் செய்து இந்த வழக்கை முடிக்கிறது தடயமில்லா காரணத்தால்….

………………………..

சில வருடங்களுக்கு பிறகு…

ஜெர்மானிய தடுப்பு சுவர் இடிக்கப் பட்டு இரண்டும் ஒன்றாகின்றன…

பதவி நீக்கம் செய்யப்பட்ட சிறை அதிகாரி(HGW XX/7) வீடு வீடாக பத்திரிக்கை போடும் பணியில்…

ஒன்று பட்ட சுதந்திர ஜெர்மனியில், தனது வழக்குப் பதிவை நூலகத்தில் புரட்டிப் பார்க்கும் கதா நாயகனுக்கு அன்று அந்த சிறை அதிகாரி உதவியது தெரிய, தனது வாழ்க்கை வரலாற்று நூலை அவறுக்கே சமர்ப்பணம் செய்கிறான்….
…………………

எனக்கு பிடித்தவை

ஒளிப்பதிவும் அதன் கோணங்களும்
கடைசி காட்சி

சென்று வாருங்கள்

நாலு சண்டை
ஆறு பாட்டு
வடிவேலு
கவர்ச்சி நடனம் நாயகி
ஆயிரம் அடியாட்களை அடிக்கும் நாயகன்
படம் முடியும்போது வில்லனை கைது செய்யும் காவலர்கள்….
இப்படி எதுவும் இல்லாமல்

அழகாய்
அமைதியாய்
ஒரு திரைப்படம்..
சென்று வாருங்கள்

சத்யம் திரை வளாகம், Studio -5. இரவு 7:15 மணிக்கு..

Manusham
2:45 am. Trivandrum International Airport

No comments:

பார்த்ததில் பிடித்தது....